Election bannerElection banner
Published:Updated:

நாக்பூர்: கணவருக்கு கல்லீரல் தானமளிக்க தினமும் 12 மாடிகள் ஏறி இறங்கி எடை குறைத்த மனைவி!

விவேக்-நீது
விவேக்-நீது

உடல் எடையைக் குறைக்க வேண்டி, அம்மருத்துவமனையின் 12வது மாடிக்கு நீது தினமும் படிகளின் வாயிலாகவே ஏறி, இறங்கினார். அதோடு தனக்குப் பிடித்தமான உணவு வகைகளான இனிப்பு, ஆயில் வகைகளைத் தன் கணவருக்காகத் துறந்து, கடினமான டயட்டையும் பின்பற்றினார்.

மாகாராஷ்டிராவில், தன் கணவருக்கு கல்லீரல் தானம் வழங்குவதற்காக மனைவி மேற்கொண்ட முயற்சிகள், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரில் மதுபானக்கடை வைத்திருப்பவர் விவேக் ஜெயின். ஒயின் ஷாப் நடத்தி வரும் விவேக் ஜெயின் (51) மது பழக்கத்துக்கு அடிமையானார். அளவுக்கு அதிகமான மது காரணமாக அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், கல்லீரல் தானம் கொடுப்பவர் கிடைக்கவில்லை.

விவேக் ஜெயின் மற்றும் அவரின் மனைவி நீது ஜெயினுக்கு (46) ஒரே ரத்த வகை இருந்தது. இதனால், நீதுவால் கல்லீரல் தானம் செய்ய முடியும். ஆனால், இதிலும் ஒரு பிரச்னை இருந்தது. நீது அளவுக்கு அதிகமான எடையுடன் இருந்தார்.

Exercise (representational image)
Exercise (representational image)
Photo by Bruno Nascimento on Unsplash

97 கிலோ எடையுடன் இருந்தார் நீது. எடையை குறைத்தால் மட்டுமே ஆபரேஷன் செய்ய முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். எனவே நீது, எடை குறைப்புக்காகத் தனது வாழ்க்கைமுறையை மாற்ற ஆரம்பித்தார். நாக்பூரில் இருந்து மும்பை பரேலில் வந்து தங்கினார். பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் விவேக் ஜெயின் சேர்க்கப்பட்டார்.

உடல் எடையைக் குறைக்க வேண்டி, அம்மருத்துவமனையின் 12வது மாடிக்கு நீது தினமும் படிகளின் வாயிலாகவே ஏறி, இறங்கினார். அதோடு தனக்குப் பிடித்தமான உணவு வகைகளான இனிப்பு, ஆயில் வகைகளைத் தன் கணவருக்காகத் துறந்து, கடினமான டயட்டையும் பின்பற்றினார்.

வீட்டிலும், 6வது மாடிக்குத் தினமும் நடந்தே சென்றார். இந்தப் பயிற்சிகள் எல்லாம் நீதுவை உச்சக்கட்ட சோர்வில் தள்ளினாலும், தன் கணவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அவரது முயற்சியால் 10 கிலோ அளவுக்கு எடை குறைந்தார். இதையடுத்து அவரின் கல்லீரலில் ஒரு பகுதியை எடுத்து அவர் கணவருக்கு வைத்து ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இப்போது விவேக் ஜெயின் மிகவும் நலமுடன் இருக்கிறார். இது குறித்து விவேக் ஜெயின் கூறுகையில், 'நான் இன்று உயிருடன் இருக்கிறேன் என்றால் அதற்கு என் மனைவிதான் முழுக்கக் காரணம். இது எனக்கு மறு பிறவி. மதுவை விடுத்து புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்புகிறேன்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Liver
Liver

இதே போன்று மும்பை கோரேகாவ் பகுதியைச் சேர்ந்த கீதா (47) என்ற பெண்ணுக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது. இதையடுத்து அவரின் 72 வயது மாமியார் மங்களா தனது சிறுநீரகத்தில் ஒன்றைத் தன் மருமகளுக்கு தானமாகக் கொடுத்துள்ளார். கீதாவின் தாயாருக்கு நீரிழிவு பிரச்னை இருந்ததால் அவரால் சிறுநீரகம் தானம் செய்ய முடியவில்லை. தன் மாமியார் சிறுநீரகம் கொடுத்து இருப்பது குறித்து கீதா மிகவும் மகிச்சியடைந்துள்ளார்.

வாழவைக்கும் பெண்கள்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு