Published:Updated:

`கொரோனாவிலிருந்து தப்பிக்க `வணக்கம்' சொல்வோம்... பிரபலங்களின் நமஸ்தே பிரசாரம் #CoronaVirus

Actor Salmankhan
Actor Salmankhan ( www.instagram.com/beingsalmankhan )

சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், ஸ்பெயின், இரான் உள்ளிட்ட பல நாடுகள் `கைக்குலுக்குவது கூடாது' என்று எச்சரிக்கையே விடுத்துள்ளன.

கைகுலுக்குவதும் அணைத்துக்கொள்வதும்தான் நாகரிகத்தின் மாடர்ன் வெர்ஷன் என்று பலரும் நம்பி, உலகம் முழுக்க ஃபாலோ செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பழக்கத்தை தற்போது வழியனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறது `கொரோனா வைரஸ்.' சுத்தமில்லாத கைகளின் வழியாகக் கொரோனா வைரஸ் பரவுவது மிக மிகச் சுலபம் என்பதால் உலகம் முழுக்க மரியாதை நிமித்தம் கைகுலுக்குவதையும் அணைத்துக்கொள்வதையும் விடுத்து, வணக்கத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

Corono Virus
Corono Virus

சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், ஸ்பெயின், இரான் உள்ளிட்ட பல நாடுகள் `கைகுலுக்குவது கூடாது' என்று எச்சரிக்கையே விடுத்துள்ளன. இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நேட்டன்யாஹு ( Benjamin Netanyahu), கொரோனா குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கைகுலுக்கலைத் தவிர்த்தவர், ``கொரோனா பரவுவதைத் தடுக்க என்னைப்போலவே கைகுலுக்குவதைத் தவிர்த்துவிட்டு இந்தியர்கள் செய்வதைப்போல நமஸ்தே சொல்லுங்கள் அல்லது சலாம் சொல்லுங்கள்'' என்றார்.

`உதவும் வெப்பநிலை?; தினமும் 9,000 அழைப்புகள்..!' -கொரோனா வைரஸை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது?

பாலிவுட் நடிகர் சல்மால்கான், ``கொரோனா பயம் முழுவதுமாக உலகைவிட்டுச் சென்ற பிறகு, கைகுலுக்கிக்கொள்ளலாம் அணைத்துக்கொள்ளலாம். இப்போது நமஸ்தே மட்டும் போதும்'' என்று தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பாண்டிச்சேரி கவர்னர் கிரண் பேடியோ, ``இந்திய கலாசாரத்தில் ஏன் விருந்தினர்களைக் கைகளைக் குவித்து வரவேற்கிறோம் என்று இப்போது உலகத்துக்குப் புரிந்திருக்கும்'' என்றிருக்கிறார். கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலும் கொரோனா நேரத்தில் நமஸ்தே நல்லது என்று பிராசாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறது.

Kiran Bedi
Kiran Bedi
twitter.com/thekiranbedi
`குணமாகி திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு?!- தொடர் பீதியில் சீன மக்கள்

தமிழ்நாட்டின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, கொரோனா தன் முதல் காலடியை சீனாவில் எடுத்து வைத்தபோதே, ``கொரோனா வைரஸ் தாக்குதல் முடிவுக்கு வரும்வரை எல்லோரும் வணக்கம் சொல்ல ஆரம்பியுங்கள். கைகுலுக்குதல் வேண்டாம்'' என்று சொன்னதை இங்கே நினைவுபடுத்துவது அவசியமாக இருக்கிறது.

யோகாவில் நெஞ்சுக்கு நேராக இரு கைகளையும் குவித்து வணக்கம்போல ஒரு முத்திரை வைப்பார்கள். இதற்கு `அஞ்சலி முத்திரை' என்று பெயர். இந்த முத்திரையை நிபுணரின் ஆலோசனைப்படி தொடர்ந்து செய்துவந்தால், மன உளைச்சல் மற்றும் படபடப்பு சரியாகும் என்பது வணக்கம் குறித்த கூடுதல் தகவல்.

அடுத்த கட்டுரைக்கு