Published:Updated:

`மொத்தமே நான்கு ஆம்புலன்ஸ்தான்... பரவும் கொரோனா!' -கலங்கவைக்கும் நெல்லை, தென்காசி நிலவரம்

108 ஆம்புலன்ஸ்
108 ஆம்புலன்ஸ்

`கொரோனா சிறப்பு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அனைவரும் மூன்று தினங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றிவிட்டு, நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால்..?

விபத்து, பிரசவம், நோயாளிகளின் அவசர சிகிச்சைகளுக்காக நெல்லை மாவட்டத்தில் 36 ஆம்புலன்ஸ் சேவைகள் இயங்கி வருகின்றன. அத்துடன், ஒரு நடமாடும் இருசக்கர வாகன ஆம்புலன்ஸும் இயங்கிவருகிறது. அவற்றின் மூலம் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தற்போது கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், கொரோனா நோய்த் தொற்றுடன் உள்ள நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதற்காக நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்குத் தலா இரு ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! - தமிழக அரசு அறிவிப்பு #NowAtVikatan

கொரோனா நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸ்களில் பணியாற்றும் டிரைவர், மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர் ஆகியோருக்கு சிறப்புக் கவச உடை வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா நோயாளிகளிடமிருந்து நோய்த் தொற்று பரவாமல் பாதுகாக்கும் வகையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கவச உடை அணிந்து பணியாற்றுகிறார்கள்.

அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ்
அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ்

`கொரோனா சிறப்பு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அனைவரும் மூன்று தினங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றிவிட்டு, நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து பணி செய்வதால் தாங்கள் மிகவும் சோர்வடைந்து, உடல் பலவீனம் அடைவதாக ஊழியர்கள் குமுறுகிறார்கள்.

ஆம்புலன்ஸ் பணியாளர்களிடம் பேசியபோது, ” நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவிவருகிறது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் மூலமாக நோய்ப் பரவல் அதிகமாகிறது. 

நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நான்கு கொரோனா ஆம்புலன்ஸ்கள் மட்டுமே உள்ளதால் வேலைப்பளு அதிகமாகியுள்ளது.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் மூலம் உள்ளூர் மக்களுக்கும் வேகமாக கொரோனா தொற்று பரவுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நான்கு ஆம்புலன்ஸ் மட்டும் இயக்கப்படுவதால் வேலைப்பளு அதிகமாக உள்ளது. கூடுதலாக கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு