Published:Updated:

Favipiravir: கொரோனாவுக்கு வருகிறது புது மருந்து... தீர்வை தருமா? #ExpertOpinion

கொரோனாவுக்கு புது மருந்து
கொரோனாவுக்கு புது மருந்து

கொரோனா வைரஸுக்காக மேற்கொண்ட பல ஆராய்ச்சிகளின் மூலம், Favipiravir மருந்து தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட உலக அளவில் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. நோய்க்கான தடுப்பூசி மருந்துகள் ஆராய்ச்சிக் கட்டத்தில் உள்ள நிலையில், இந்த வருட இறுதிக்குள் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

covid-19
covid-19

சமீபத்தில் இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டு கழகத்தினால் ஒப்புதல் வழங்கப்பட்ட மருந்து ஃபேவிபிராவிர் (Favipiravir). இந்த மருந்து கோவிட்- 19 வைரஸ் தொற்றுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்று விளக்குகிறார் தொற்றுநோயியல் மருத்துவர் சித்ரா.

``இந்த மருந்தை வெகு மிதமான (Mild) மற்றும் மிதமான அறிகுறிகள் உள்ள கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்கலாம். கோவிட்- 19 நோயில், வைரஸ் நம் உடலுக்குள் புகுந்து பல்கிப் பெருகுகிறது. இதனால் வைரஸின் எண்ணிக்கை (Viral load) அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

Infectious disease expert Dr.Chitra
Infectious disease expert Dr.Chitra

கொரோனா வைரஸ் உடலைத் தாக்குவதால் இரண்டு பிரச்னைகள் வரும். ஒன்று வைரஸ் உடலைத் தொற்றுவதால் ஏற்படும் பாதிப்பு. இரண்டாவது வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் அளவுக்கு மேல் உருவாகி (Immune response), நுரையீரலைச் சுற்றியுள்ள நல்ல திசுக்களைச் சேதப்படுத்தும். வைரஸ் தொற்றின் கடைசி நிலையில் இது ஏற்படும். நோய் எதிர்ப்புத்திறன் உருவாக்கம் அதிகரிப்பதால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

வைரஸின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, நோய் எதிர்ப்புத்திறன் உருவாக்கமும் அதிகரிக்கிறது. வைரஸின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் நோய் எதிர்ப்புத்திறன் உருவாக்கமும் குறையும். ஆக வைரஸின் எண்ணிக்கையைக் குறைக்க, இம்மருந்து உபயோகமாக இருக்கும். மிதமான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு, வைரஸ் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். அதை இந்த மருந்தின் மூலம் மேலும் குறைப்பதால் உயிரிழப்பைத் தடுக்கலாம்.

covid-19
covid-19
``கொரோனா வார்டுல இறந்த அம்மா...'' - மகனின் குற்றச்சாட்டும் மருத்துவமனையின் பதிலும்

இம்மருந்தை 14 நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இம்மருந்து விரைவில் மக்களின் உபயோகித்துக்கு வரவுள்ளது. கிளென்மார்க் (Glen Mark) நிறுவனம் தயாரிக்கின்றது. பின்விளைவுகள் இல்லாதது என்றாலும் கல்லீரல், சிறுநீரக் கோளாறு, கர்ப்பிணிகள் இதைத் தவிர்க்கலாம். இதுவரை மேற்கொண்ட பல ஆராய்ச்சிகளின் மூலம், இம்மருந்து தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதிக நபர்களுக்குக் கொடுத்துப் பார்க்கும்போது, வேறு எதுவும் பக்க விளைவுகள் வருகின்றனவா என்று தெரியவரும்" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு