Published:Updated:

`கொரோனா பரிசோதனை வேகத்தை அதிகரிக்கலாம்!' - தஞ்சை ஐ.ஐ.எஃப்.பி.டி-யின் நவீன கருவி

தஞ்சாவூர் ஐ.ஐ.எஃப்.பி.டி நிறுவனம்

இதன் மூலம் கொரோனா தொற்றை விரைவாகக் கண்டறிந்து, நோயாளிகளைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்க இந்தக் கருவியும் ஒரு முக்கிய பங்களிப்பு செய்யும். ரத்த மாதிரிகளில் இருந்து ஆர்.என்.ஏ-வை விரைவாகப் பிரித்தெடுக்கும்.

`கொரோனா பரிசோதனை வேகத்தை அதிகரிக்கலாம்!' - தஞ்சை ஐ.ஐ.எஃப்.பி.டி-யின் நவீன கருவி

இதன் மூலம் கொரோனா தொற்றை விரைவாகக் கண்டறிந்து, நோயாளிகளைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்க இந்தக் கருவியும் ஒரு முக்கிய பங்களிப்பு செய்யும். ரத்த மாதிரிகளில் இருந்து ஆர்.என்.ஏ-வை விரைவாகப் பிரித்தெடுக்கும்.

Published:Updated:
தஞ்சாவூர் ஐ.ஐ.எஃப்.பி.டி நிறுவனம்

கொரோனா வைரஸை விரைவாகக் கண்டறிய தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவுப் பதனீட்டு தொழில் நுட்பக்கழகம், நவீன கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது. இக்கருவி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் கீழ் தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் இயங்கி வரும் ஐ.ஐ.எஃப்.பி.டி நிறுவனமானது, உணவு பதப்படுத்துதல், உணவு தர பரிசோதனை ஆகியவைகளோடு, உணவுப் பொருள்களில் உள்ள நுண்ணுயிரிகளைக் கண்டறியும் தொழில்நுட்ப நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் புதிய முயற்சியாகதான் கொரோனா வைரஸை விரைவாக கண்டறியக்கூடிய கருவியை உருவாக்கியுள்ளது.

அனந்தராமகிருஷ்ணன்
அனந்தராமகிருஷ்ணன்

உலகையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரானா வைரஸ் பரவல்... சீனா, இத்தாலி, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இரான், பெல்ஜியம் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்கள். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளார்கள். உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறிப்பாக, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களை கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம், ஒரு குறிப்பிட்ட நபருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா, இல்லையா என்பதை விரைவாகக் கண்டறிந்து உறுதி செய்வதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் குறைவாக உள்ளன. இந்த நிலையில்தான், தஞ்சாவூரில் இயங்கும் ஐ.ஐ.எஃப்.பி.டி என அழைக்கப்படும் இந்திய உணவுப் பதனீட்டு தொழில்நுட்பக்கழகம், கொரோனா வைரஸை விரைவாகக் கண்டறிய, நவீன கருவி ஒன்றை உருவாக்கி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு வழங்கியுள்ளது.

இதற்கான ஆவணம் வழஙகப்படுகிறது
இதற்கான ஆவணம் வழஙகப்படுகிறது

இதற்கான ஆவணத்தை, இந்நிறுவனத்தின் இயக்குநர் அனந்த ராமகிருஷ்ணன், தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜிடம் வழங்கியுள்ளார். இந்த நவீன கருவியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய ஐ.ஐ.எஃப்.ப்.டி-யின் அனந்தராமகிருஷ்ணன், ``2 மணிநேரத்தில் 100 நபர்களின் ரத்த மாதிரிகளில், கொரோனா வைரஸ் தாக்கத்தை சோதனை மூலம் கண்டவதற்கு இந்த தானியங்கி கருவி உறுதுணையாக இருக்கும். இதன் மூலம் கொரோனா தொற்றை விரைவாகக் கண்டறிந்து, நோயாளிகளைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்க முடியும். ஆய்வு மேற்கொள்பவர்களின் பாதுகாப்பையும் இது உறுதி செய்யும்” எனத் தெரிவித்தார்.

இக்கருவியின் செயல்பாடு மற்றும் பயன்பாடுகள் குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜிடம் கேட்டபோது, ``ரத்த மாதிரிகளைக் கொண்டு, கொரோனா வைரஸைக் கண்டறிவதில் பல படி நிலைகள் உள்ளன. ஆர்.என்.ஏ-வை பிரித்தெடுக்க, இதுவரை டெக்னிஷியன்களின் மனித உழைப்பை மட்டுமே பயன்படுத்தி வந்தோம். அதனால் கூடுதல் நேரமாகும். இதற்கு மாற்றாக, நவீன தானியங்கி கருவி பயன்படுத்துவதன் மூலம், ஆர்.என்.ஏ-வைப் பிரித்தெடுப்பதற்கான நேரம் குறையும். இதற்கு அடுத்தடுத்த படிநிலைக்கான கருவிகள் எங்களிடம் ஏற்கெனவே உள்ளது” என தெரிவித்தார்.