Published:Updated:

வேகமாகப் பரவும் லாங்கியா... அச்சுறுத்தும் புது வைரஸ் - பதற்றத்தில் சீனா!

Fever check

லாங்கியா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி, குமட்டல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாக சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸுக்கு எதிரான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

வேகமாகப் பரவும் லாங்கியா... அச்சுறுத்தும் புது வைரஸ் - பதற்றத்தில் சீனா!

லாங்கியா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி, குமட்டல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாக சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸுக்கு எதிரான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

Published:Updated:
Fever check

கொரோனா வைரஸ் பதற்றமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், சீனாவில் லாங்கியா (Langya ) என்ற மற்றொரு வைரஸ் பரவ ஆரம்பித்திருக்கிறது. நேற்றைய தினம் வரை இந்த வைரஸால் இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக நியூ இங்கிலாந்து மருத்துவ இதழ் தெரிவித்திருக்கிறது.

china feve
china feve
AP Photo/Ng Han Guan

இந்த வைரஸ் லாங்கியா ஹெனிபா வைரஸ் அல்லது லே வி ( Langya henipavirus or LayV) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வைரஸ் தொற்று சீனாவின் கிழக்கு ஷென்டாங், மத்திய ஹெனான் (eastern Shandong and central Henan) ஆகிய பகுதிகளில் பரவியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதாகவும், இதுவரை ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்குப் பரவியதற்கான எந்த ஆராய்ச்சி ஆதாரங்களும் இல்லை என்கின்றன அவை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லாங்கியா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி, குமட்டல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாக சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு ரத்த அணுக்களில் சில அசாதாரண மாற்றங்கள் இருப்பதோடு, அவர்களின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகளில் மாற்றங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. லாங்கியா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பலரும் விலங்குகளுடன் நெருக்கமான தொழில் செய்பவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக விவசாயிகள் என்று சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Fever
Fever

இந்த வைரஸுக்கு எதிரான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எச்சிலை பரிசோதனை செய்து அறிகுறிகளுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் கொரோனாவை போலவே மிக வேகமாகப் பரவினால் இந்த வைரஸாலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

சமீபகாலத்தில், கொரோனாபோல விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிற வைரஸ்களால் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதாலும், அண்டை நாடான சீனாவில் இந்தத் தொற்று பரவ ஆரம்பித்திருப்பதாலும் நாமும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.