Published:Updated:

நோய் எதிர்ப்பு சக்தியுள்ளவரின் ரத்த பிஸாஸ்மா ஆராய்ச்சி... கொரோனாவைக் கட்டுப்படுத்துமா?!

corona
corona

நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை (Plasma) லேசான அல்லது மிதமான நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோருக்குப் பரிசோதனை முயற்சியாகக் கொடுக்கத் திட்டமிட்டு வருகிறார்கள்.

தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கியுள்ளது. இறந்தவர்கள் 38,000 + பேர். ஆனால், உடல் நலம் தேறியவர்களின் எண்ணிக்கை 1,66.000 பேர். கொரோனாவால் இறப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 4 சதவிகிதம். எனினும், வேகமான பரவல்தான் கொரோனாவைக் கொடிய வைரஸாக மாற்றுகிறது. வயதில் சிறியவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள்தான் கொரோனாவால் அதிகம் இறப்புக்கு உள்ளாகிறார்கள். நோய் எதிர்ப்புச் சக்தி நல்ல நிலையில் உள்ளவர்களுக்குக் கொரோனா தாக்கினாலும் இறப்பு சதவிகிதம் மிகவும் குறைவுதான் என்று கூறுகின்றனர், கொரோனா தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர்கள்.

corona virus
corona virus
`கொரோனா அச்சம்; அளவுக்கு அதிகமான மலேரியா மருந்து..?' -அஸ்ஸாம் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்

வுகானில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த 47 வயது பெண்ணிற்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. 14 நாள்களி்ல் அந்தப் பெண் நலமாகி வீடு திரும்புகிறார். அவரின் உடலினைப் தொடர்ந்து பரிசோதித்து வந்த ஆய்வாளர்களின் ஆய்வறிக்கை 'நேச்சர்' தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆய்வறிக்கையின் படி, அந்தப் பெண்ணுக்கு மிதமான கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டிருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்ட ஏழாவது நாளில் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு செல்கள் அந்தப் பெண்ணின் ரத்த அணுக்களில் உருவாகியிருந்தது கண்டறியப்படுகிறது. அதைத் தொடர்நது 11-வது நாள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு நலமாக வீடு திரும்புகிறார். 20-வது நாளி்ல் கொரோனா பாதிப்பு முழுவதுமாக அவர் உடலிலிருந்து நீங்குகிறது.

கொரோனா வைரஸ் - உலகம்
கொரோனா வைரஸ் - உலகம்

நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மிதமான பாதிப்பிலேயே மீண்டு விடுகின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள்தான் தீவிர பாதிப்பிற்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது. கொரோனாவிற்கான தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. எனவே, மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இங்கிலாந்தில் முழுவதுமாகக் குணமடைந்த நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை (Plasma) லேசான அல்லது மிதமான நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோருக்குப் பரிசோதனை முயற்சியாகக் கொடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். இதன் மூலம், நோய்த் தீவிரம் அடையாமல் மிதமான நிலையிலேயே நோயைக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான்.

`காஷ்மீரில் இறந்த தஞ்சை ராணுவ வீரர்!' - கொரோனா ஊரடங்கு உத்தரவால் கலங்கும் கிராம மக்கள்

இதைப் பற்றி இங்கிலாந்தில் அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் கூறுகையில், "ரத்த மாதிரியை எடுத்துப்பதற்கு தகுதியான ஒருவரைக் கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கும். ஏற்கெனவே, தகுதியான நபரைக் கண்டறிவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. குணமடைந்த ஒருவரது பிளாஸ்மாவை நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள நபருக்குச் செலுத்துவதன் மூலம் அவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்பட்டு, தனக்கான நோய் எதிர்ப்பு செல்களை, தானே உருவாக்கிக்கொள்ளும். இதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள ஒருவரும், நோய்ப் பாதிப்பு தீவிரம் அடையாமல் குணமடைய வாய்ப்புகள் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த பிளாஸ்மா நடைமுறை முழுவதுமாகக் கைகொடுக்குமா எனத் தெரியாது. இதற்கு முன்னரும் இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆப்பிரி்க்காவின் எபோலோ தாக்குதலின் போதும் இதே முறையைச் சோதனை செய்து பார்த்தனர். ஆனால், அதனால் பெரிய முன்னேற்றமில்லை. ஆனால், எபோலோ பரவலின் போது பிளாஸ்மா முறையின் மூலம் 38 சதவிகிதமாக இருந்த இறப்பை 31 சதவிகிதமாகக் குறைக்க முடிந்தது.

ஆனாலும் சிறு நம்பிக்கையாக 2003-ல் பரவிய சார்ஸ் நோய்க்கும் இதே முறை பின்பற்றப்பட்டது. அதில் லேசான மற்றும் மிதமான பாதிப்பு அடைந்தவர்களில் பலர் இந்த முறையினால் மீண்டு வந்திருக்கின்றனர். தீவிரமான பாதிப்பு அடைந்தவர்களுக்கு இந்த முறை பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கவில்லை. எனினும், இது தற்போதைய கொரோனாவிற்கு பலனளிக்குமா இல்லையா என்பது பரிசோதனை முடிவில்தான் தெரிய வரும்.

அடுத்த கட்டுரைக்கு