Published:Updated:

`கஜகஸ்தானில் பரவும் புதிய நிமோனியா; கொரோனாவைவிட அதிக பாதிப்பு?’ - எச்சரிக்கும் சீனா

கஜகஸ்தான்
கஜகஸ்தான்

கஜகஸ்தானின் அதிபர் காசிம் ஜோமார்ட் டொக்கயேவ், ''புதிதாக வந்திருக்கும் நிமோனியா நோயால் நாடு இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது'' என்றிருக்கிறார்.

கஜகஸ்தானில் இயங்கி வரும் சீனத் தூதரகம், அறியப்படாத `நிமோனியா' எனும் புதிய நோய் மத்திய ஆசிய நாடுகளில் பரவுவதாகக் கூறியுள்ளது. இந்த நோய் குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இது பற்றி தெரிவித்துள்ள சீனத் தூதரகம், “இந்த நோயால் மத்திய ஆசிய நாடுகளில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஒரே மாதத்தில் இறந்துள்ளனர். சோவியத் பகுதிகளில் வாழும் சீன மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளது.

நிம்மோனியா
நிம்மோனியா

இது குறித்து கடந்த வியாழக்கிழமை சீனத் தூதரகம் தன்னுடைய விசாட் பக்கத்தில், “இந்த நோயால் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் 1,772 பேர் இறந்துள்ளனர். சென்ற மாதத்தில் மட்டும் 628 மக்கள் இறந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

கஜகஸ்தானின் சுகாதார அமைச்சர், 'கொரோனாவைவிட இந்த நிமோனியாவின் பாதிப்பு இரண்டு அல்லது மூன்று முறை அதிகமாக இருக்கும்' எனக் கூறிய செய்தி சீன வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா பரவல்... நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் இந்த 6 தவறுகளைச் செய்யாதீர்கள்! #FightCovid-19

இது குறித்து கடந்த புதன்கிழமை பேசிய கஜகஸ்தானின் அதிபர் காசிம் ஜோமார்ட் டொக்கயேவ், 'கொரோனா காரணமாக கடந்த மார்ச் 16-ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த காரணத்தால் ஊரடங்கில் தளர்வு கொண்டுவர முடியவில்லை. ஆனால், தற்போது புதிதாக வந்திருக்கும் நிமோனியா நோயால் நாடு இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது நிலையிலும் நிமோனியாவின் முதல் நிலையிலும் உள்ள நம் நாடு பேராபத்தில் உள்ளது. உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாண்டுதான் நாம் இந்தச் சூழ்நிலையைக் கடக்க வேண்டும்' என்றிருக்கிறார்.

ஆனால், இப்போதுவரை இந்த நோய் குறித்து உலக சுகாதார மையம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
கொரோனா உயிரிழப்புகளைக் குறைக்கும் `அவேக் ப்ரோனிங்' - மருத்துவ விளக்கம்!

'எண்ணெய் மற்றும் உலோகப் பொருள்கள் நிறைந்த வளம் பொருந்திய கஜகஸ்தான் தன்னுடைய பொருள்களை விற்பதற்கு சீன சந்தையை நாடியே இருந்தது. மேலும், சீனர்கள் இவர்களின் பொருள்களுக்கு முக்கிய முதலீட்டார்களாக இருந்தனர். கஜகஸ்தான் வியாபாரிகளும் சீனப் பொருள்கள் மூலம் நிறைய வருவாய் ஈட்டி வந்தனர். இருந்த போதிலும், இந்த இரு நாடுகளுக்கிடையே அனைத்து நிலைகளிலும் பனிப்போர் நிலவும். அதனால்தான் சோவியத் பகுதிகளில் வாழும் தன் நாட்டு மக்களை மட்டும் நிமோனியா நோய்க்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது சீனத் தூதரகம்' என்கிறது ராய்ட்டர்ஸ் நிறுவனம். ஆனால், இப்போதுவரை இந்த நோய் குறித்து உலக சுகாதார மையம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

கொரோனா பாதிப்பையே மக்கள் இன்னும் முழுமையாகக் கடக்காத நிலையில் இந்தப் புதிய நோயை கஜகஸ்தான் மக்கள் எவ்வாறு கடக்கப்போகின்றனரோ என்று வருத்தப்படுகிறார்கள் பலரும்.

அடுத்த கட்டுரைக்கு