Published:Updated:

கொரோனா: `அடுத்த 100 நாள்கள் மிகவும் முக்கியமானவை!' - மத்திய அரசின் புதிய எச்சரிக்கை

India Covid Outbreak
India Covid Outbreak ( AP Photo / Channi Anand )

``கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு அடுத்த 100 முதல் 125 நாள்கள் மிகவும் முக்கியமானவை" என்று வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் அலையைப் பற்றிய பல்வேறு தகவல்கள், கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில் அடுத்த 100 நாள்கள் முக்கியமானவை என்று மத்திய அரசின் அங்கமான நிதி ஆயோக்கின் சுகாதாரத்துக்கான உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி பேசிய மருத்துவர் வி.கே.பால், ``வடக்கு மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகள் தவிர்த்து, உலக சுகாதார நிறுவனத்துக்குட்பட்ட பகுதிகள் அனைத்தும் நல்ல நிலையிலிருந்து மோசமான நிலைக்கும், மோசமான நிலையிருந்தவை இன்னும் மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றன.

Covid 19 Outbreak
Covid 19 Outbreak
டெல்டா ப்ளஸ் வைரஸ்: `மூன்றாம் அலை இன்னும் மோசமாக இருக்குமா?' - விளக்கும் மருத்துவர்

உலகமே மூன்றாம் அலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இந்தியாவில் இரண்டாம் அலை பல்வேறு இடங்களில் குறைந்து வந்தாலும் இன்னும் பல மாநிலங்களில் தொடர்ந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். மூன்றாம் அலையைப் பற்றிய எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். பிற இடங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் ஓர் எச்சரிக்கை மணிதான்.

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு அடுத்த 100 முதல் 125 நாள்கள் மிகவும் முக்கியமானவை" என்று தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடாதவர்களுக்கான பெருந்தொற்று!

இந்நிலையில் தடுப்பூசி போடாதவர்கள் மூன்றாம் அலையில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு (CDC) எச்சரித்துள்ளது. இது தொடர்பாக CDC அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ரோஷல் வேலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில், ``நாட்டில் எந்தப் பகுதியிலெல்லாம் குறைவான எண்ணிக்கையிலானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ அந்தப் பகுதியிலெல்லாம் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பகுதிகளில் பாதிப்பு குறைவாக உள்ளது.

A health worker administers the vaccine
A health worker administers the vaccine
AP Photo/Mahesh Kumar A
Tamil News Today: `ஒரே நாளில் 38,079 பேருக்கு பாதிப்பு; 560 மரணங்கள்!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம்

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் மத்தியில் லேசான பாதிப்பு, தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி, உயிரிழப்புகள் போன்றவை தொடரவே செய்யும். மூன்றாம் அலை என்பது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கான பெருந்தொற்றாகவே அமையும். இதில் நல்ல செய்தி என்னவென்றால் முழுவதுமாக தடுப்பூசியைச் செலுத்தினால் தீவிர கோவிட் பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதி, உயிரிழப்பு ஆகியவற்றைத் தடுக்க முடியும். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு நிச்சயம் இது நல்ல செய்தி.

ஏற்கெனவே பரவியிருக்கும் உருமாறிய வைரஸ், டெல்டா வேரியன்ட் அனைத்துக்கும் எதிராகவும் தடுப்பூசி செயல்படுகிறது. நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் நிச்சயம் ஆபத்தானவர்கள் பட்டியலில் இருக்கிறீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு