Published:Updated:

நீலகிரி: ஊசி ஃபேக்டரி; 500-ஐ கடந்த கொரோனா பாதிப்பு! - பின்னுக்குத் தள்ளப்பட்ட ஈரோடு, திருப்பூர்

ஊட்டி
ஊட்டி

நீலகிரியில் தற்போது கொரோனா தொற்று தீவிரமாகப் பரவிவருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நீலகிரியில் கொரோனா தொற்றின் வேகம், பல மாதங்களாக வெறும் 14 என்ற அளவிலேயே இருந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாகப் பாதிப்பே இல்லாத மாவட்டமாகவும் இருந்தது. இந்தநிலையில் ஊட்டி எல்லநள்ளி பகுதியில் ஊசி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஊழியர் மூலம் ஏற்பட்ட தொற்று காரணமாக 150-க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகினர்.

ஊசி தயாரிக்கும்  தனியார் தொழிற்சாலை
ஊசி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை

இதனைத் தொடர்ந்து தங்காடு ஓரநள்ளியில் கவனக்குறைவுடன் திருமணம், முள்ளிகூர் மற்றும் தாம்பட்டி இறுதிச்சடங்கு உள்ளிட்ட காரணங்களால் நோய்ப் பரவல் வேகமெடுத்தது.

தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் 500 நபர்களாக அதிகரித்து தற்போது 513 ஆக உயர்ந்துள்ளது. நேற்றும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 187 பேர் குணமடைந்துள்ளனர். 324 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.

Corona virus
Corona virus
Unsplash

இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் பட்டியலில் தற்போது நீலகிரி மாவட்டம், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை முந்தியுள்ளது. ஈரோட்டில் 509 நபர்களும் திருப்பூரில் 507 நபர்களும் பாதித்திருக்கும் நிலையில், நீலகிரியில் 513 நபர்கள் பாதித்துள்ளனர்.

வைரஸ் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதுகுறித்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர்  இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையைப் பின்பற்றாமல் முள்ளிகூர், தங்காடு ஓரநள்ளி, ஓட்டுபட்டரை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாமல் நிகழ்ச்சிகளை நடத்தியதன் விளைவாக மாவட்டத்தின் பல பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த  இரு வாரங்களில் 500-ஐ கடந்துள்ளது.

நீலகிரி மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

மேற்கண்ட பகுதிகளில் நிகழ்ச்சிகளை நடத்தியதற்கும், 144 தடை உத்தரவினை மீறியதற்காகவும் தொற்றை பரப்பியதற்காகவும் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் சட்டப் பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி கொரோனா நிலவரம்: 17 பேருக்கு பாசிட்டிவ்; திடீர் உயர்வுக்கு என்ன காரணம்?

சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். சட்டப் பிரிவு 144 இந்திய தண்டனை சட்டத்தின் படியும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் வழங்கியவர்கள் வெளியில் வந்து நோய் பரப்பினால் நோய்த் தொற்று சட்டம் 1897, சட்டப் பிரிவு 188 இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். முகக்கவசம் அணியாமல் வெளியில் வந்தாலோ மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத தனிநபர்கள், நிறுவனங்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

ஊட்டி
ஊட்டி

பொது இடங்களில் நோயைப் பரப்பும் வகையில் எச்சில் துப்பினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். நோய் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி  பரிசோதனை செய்து கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு