Published:Updated:

'மீட்டிங் நடக்கும்போது இனி பிஸ்கெட் கிடையாது' - அமைச்சரின் 'ஸ்டிரிக்ட்' உத்தரவு

தற்போது மீண்டும் சுகாதாரத் துறை அமைச்சராக பதவியேற்றதும் துறையின் சார்பில் நடைபெறும் எந்தக் கூட்டங்களிலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலைப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டார்...

பாதாம்
பாதாம்

மத்திய சுகாதாரத் துறையின் சார்பில் நடைபெறும் நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு சாப்பிட பிஸ்கெட் பரிமாறக்கூடாது என்று துறையின் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உத்தரவிட்டிருக்கிறார்.

அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

ஹர்ஷ்வர்தன் ஒரு மருத்துவர் என்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். அவர் கடந்த அமைச்சரவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக குறுகிய காலம் பதவி வகித்தார்.

அந்த சமயத்தில் பள்ளிகளின் துரித உணவுகள் விற்பனைக்கு தடைகொண்டு வரும் சட்டத்தை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார். தற்போது மீண்டும் சுகாதாரத் துறை அமைச்சராக பதவியேற்றதும் துறையின் சார்பில் நடைபெறும் எந்தக் கூட்டங்களிலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலைப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டார்.

பிஸ்கட்
பிஸ்கட்

அதற்கு அடுத்தபடியாக, அமைச்சரின் சார்பில் துறையின் துணை செயலர் ஸைலீ சிங் விக்கல் கையொப்பமிட்ட ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் துறையில் சார்பில் நடைபெறும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் ஆரோக்கியமான தின்பண்டங்கள் பரிமாறப்படும்.

பிஸ்கெட்டுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் விரும்புகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பேரீச்சம்பழம், பாதாம், வால்நட், அவல், வறுத்த பருப்புகள் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்கள் மட்டுமே பரிமாறப்படும். மேலும் மத்திய சுகாதாரத் துறையின் டிபார்ட்மென்டல் கேன்டீன்களில் பிஸ்கெட்டுகள் வாங்கி வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பேரீட்சை
பேரீட்சை

ஆனால் இந்த உத்தரவு துறையில் அனைத்து தரப்பிலும் வரவேற்பைப் பெறவில்லை. 'இந்த விஷயத்தை உத்தரவாக அல்லாமல் அறிவுறுத்தலாக சொல்லியிருக்கலாம். உணவு விஷயத்தில் யார் என்ன சாப்பிட வேண்டும் என்பது தனிநபர் முடிவெடுக்க வேண்டிய விஷயம். ' என்று துறை அதிகாரிகள் மௌனமாக சீறுகிறார்களாம்.