Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோமில் உடல் பருமனா... ஒருவேளை உணவுக்கு ‘நோ’ சொல்லுங்கள்!

உடல் பருமன்
பிரீமியம் ஸ்டோரி
உடல் பருமன்

Health

வொர்க் ஃப்ரம் ஹோமில் உடல் பருமனா... ஒருவேளை உணவுக்கு ‘நோ’ சொல்லுங்கள்!

Health

Published:Updated:
உடல் பருமன்
பிரீமியம் ஸ்டோரி
உடல் பருமன்

நாள்தோறும் அலுவலகம் செல்லும் அவசர உலகத்தில் இருந்தவர்கள் சிலர் வொர்க் ஃப்ரம் ஹோமில் உடலையும் ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்க ஆரோக்கிய மான உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றைக் கடைப் பிடித்து வருகின்றனர். ஆனால் பலர், ‘இனி எப்போ இது போல சான்ஸ் கிடைக்கும். அதனால பட்டையக் கிளப்புவோம்’ என்று உணவு விஷயத்தில் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

இதில் இரண்டாவது வகையினருக்குத்தான் இந்தக் கட்டுரை. விரும்பிய உணவுகளையெல்லாம் சாப்பிட்டாலும் சரியான உடல் எடையை நிர்வகிப்பதற்கான வழிகளை விளக்குகிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் என்.விஜயஸ்ரீ.

என்.விஜயஸ்ரீ
என்.விஜயஸ்ரீ

“கடந்த ஓராண்டாக பொதுவாகவே நமது உடல் இயக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. உடல் இயக்கம் அதிகமாக இருக்கும் விளையாட்டு வீரர்கள், உடல் ரீதியாகக் கடினமாக உழைப்பவர்கள்கூட இந்தச் சமயத்தில் உடல் எடை அதிகரித்துவிட்டனர். அலுவலகத்துக்கு கிளம்பிப் போவது, கேன்டீன், டீக்கடைக்கு நடப்பது போன்ற சிறிய உடல் இயக்கம்கூட குறைந்து, சாப்பாடு, காபி என அனைத்தும் வேலை செய்யும் மேசைக்கே வந்துவிடுவதால் பலருக்கும் உடல் இயக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது.

இதுபோன்ற சூழலில்தான் ஒருவேளை உணவைத் தவிர்க்கும் உணவுமுறை கைகொடுக்கும். இதை ‘இன்டர் மிட்டென்ட் ஃபாஸ்டிங்’ (Intermittent fasting) என்கிறோம். பேலியோ, கீட்டோ போன்ற உணவுமுறையை விட மிகவும் ஆரோக்கியமான உணவுமுறை என்பதால் நீண்ட காலத்துக்குக்கூட இதைப் பின் பற்றலாம்.

‘இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்!’

இந்த உணவுமுறையின்படி ஒருநாளைக்கு இரண்டு வேளை உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். முந்தைய நாள் இரவு உணவுக்கும் அடுத்த நாள் எடுத்துக் கொள்ளும் உணவுக்கும் இடையே 16 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். அதாவது இன்று இரவு 8 மணிக்கு இரவு உணவை எடுத்துக்கொண்டால் அடுத்த நாள் காலை 12 மணிக்கு மதிய உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். காலை உணவைத் தவிர்க்கும்போது அந்த நேரத்தில் சர்க்கரை, பால் சேர்க்காத ஜூஸ் மற்றும் மூலிகைத் தேநீர், க்ரீன் டீ போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

உணவைத் தவிர்க்கும் வேளையில் சர்க்கரை, பால் சேர்த்து ஏதாவது குடித்தால் அது எடையை அதிகரிக்கும். காலை உணவைத் தவிர்க்கும் நேரத்தில் ஒன்றுமே சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால் அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் குறைய லாம். இந்த உணவுமுறையுடன் உடற்பயிற்சியும் செய்யும்போதுதான் தகுந்த பலன் கிடைக்கும். ஒருநாளைக்கு 30 - 45 நிமிட உடற்பயிற்சி அவசியம்.

பண்டைய முறைதான்!

நம் முன்னோர்கள் இரவு உணவை சீக்கிரமே முடித்துவிடுவார்கள். இரவு 8.30 மணிக்கெல்லாம் ஊரே அடங்கிவிடும். காலையில் எழுந்து ஏதாவது நீராகாரம் சாப்பிட்டுவிட்டு வயலுக்குச் சென்றுவிடுவார்கள். மதிய வேளை உணவை முழுதாக எடுத்துக் கொள்வார்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் பழைய முறைக்குப் புதிய பெயரிட்டு ‘இன்டர் மிட்டென்ட் ஃபாஸ்டிங்’ என்று அழைக்கிறோம். அவ்வளவுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வொர்க் ஃப்ரம் ஹோமில் உடல் பருமனா... ஒருவேளை உணவுக்கு
‘நோ’ சொல்லுங்கள்!

நன்மைகள்!

இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையில் இரவு உணவை சீக்கிரமாகவே எடுத்துக் கொள்வதால் அஜீரணப் பிரச்னை ஏற்படாது. எடைக் குறைப்புக்கும் உதவும். ஒருவேளை உணவைத் தவிர்க்கும்போது நமது உடல் ஆற்றலுக்காக உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் தேவையற்ற கொழுப்பைப் பயன்படுத்தும். அதனால் உடல் எடை குறையும்.

ஆலோசனை பெற வேண்டும்!

‘இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்’ முறையை நீண்ட காலம் பின்பற்றுபவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை உடலில் இரும்புச்சத்து, கால்சியம் அளவுகளைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இளவயதினருக்கு ஆண்டுதோறும் பரிசோதனை தேவையில்லை. ஆனால் இந்த டயட்டைப் பின்பற்றுவதால் அதீத சோர்வு, கொஞ்ச நேரம் வேலை பார்த்தாலே கொட்டாவி வருகிறது, கண்ணைச் சுற்றி கரு வளையம், நகம் வெளிறியிருப்பது உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். இந்த டயட்டை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றே பின்பற்ற வேண்டும்” என்கிறார் விஜய.

யாருக்கு ஓகே... யாருக்கு நோ..?

வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும் இடத்தைவிட்டு நகர்வதேயில்லை, அதனால் உடல் எடை அதிகரித்து விட்டது என்பவர்கள், சரியான எடையில் இருக்க விரும்புபவர்கள் இந்த உணவுமுறையைப் பின்பற்றலாம். நீரிழிவு, பிபி, கொலஸ்ட்ரால், இதயநோய்கள் போன்ற வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளுக்காக மாத்திரை சாப்பிடுபவர்கள், அனீமியா இருப்பவர்களுக்கு இந்த உணவுமுறை ஏற்றதல்ல. லாக்டௌன், வொர்க் ஃப்ரம் ஹோமால் உடற்பயிற்சி, உடல் இயக்கம் பாதிக்கப்படவில்லை என்பவர்களுக்கும் இது தேவையில்லை. குறிப்பாக, அன்றாட வேலை அதிகரித்துள்ள குடும்பத் தலைவிகளுக்கும் இது தேவையில்லை.