Published:Updated:

`கொரோனா காலத்தில் செயல்படும் அலுவலகங்கள்!’ - மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள்

லாக்டௌன் தளர்வு
லாக்டௌன் தளர்வு ( Representational Image )

நாட்டில் வெகுவாக இயல்புநிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. அலுவலகங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. நாட்டில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. நோய்த்தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நேரத்தில் ஊரடங்கில் இருந்து பல்துறை தொழில்களுக்கும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் வெகுவாக இயல்புநிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. அலுவலகங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக்கொண்டு இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

லாக்டௌன்
லாக்டௌன்

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம், அலுவலகங்களுக்கான கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி...

* ''ஓர் அலுவலகத்தில் ஒன்றிரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், அந்த அலுவலகத்தை முழுமையாக மூட வேண்டிய அவசியம் இல்லை. கிருமிநாசினிகள் கொண்டு கிருமிநீக்கம் செய்துவிட்டு, மீண்டும் அலுவலகத்தைத் திறக்கலாம்.

மே 31...25 மாவட்டங்களுக்குத் தளர்வு! -  தமிழகத்தில் லாக் டௌன் 4.0; வரைமுறைகள் மற்றும் தளர்வுகள்

* நோய்த்தொற்றுக் காலத்தில் இயங்கும் அனைத்து நிறுவனங்களிலும் உடல் வெப்பத்தைக் கண்டறியும் தெர்மல் சோதனைக் கருவிகள் மற்றும் கிருமிநாசினிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

* நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஊழியர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் பணிக்கு அழைக்காமல் ஷிஃப்ட் முறையில் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

கோயம்பேடு மார்க்கெட் பாதிப்பைத் தொடர்ந்து திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் செயல்படும் தற்காலிக மார்க்கெட்டிலும் Random சோதனை நடைபெறுகிறது
கோயம்பேடு மார்க்கெட் பாதிப்பைத் தொடர்ந்து திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் செயல்படும் தற்காலிக மார்க்கெட்டிலும் Random சோதனை நடைபெறுகிறது

* அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் நிச்சயம் மாஸ்க் அணிய வேண்டும். 40 - 60 நிமிடங்களுக்கு ஒருமுறை கைகளைக் கழுவ வேண்டும். ஒவ்வோர் ஊழியரின் உடல்நிலையையும் தனிப்பட்ட வகையில் அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும்.

* எல்லோருக்கும் ஒரே நேரத்தில் உணவு இடைவேளை விடாமல், பிரித்து அனுப்ப வேண்டும்.

 `நூறிலிருந்து ஒரு லட்சம் கொரோனா பாதிப்பு...64 நாள்கள்!’- உலக நாடுகளும் இந்தியாவும்.. #Corona

* ஒருவேளை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்பட்சத்தில் அந்த அலுவலகத்தை அடுத்த 48 மணிநேரத்துக்கு மூட வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட உடல்நிலைப் பிரச்னை உள்ளவர்கள் கண்டிப்பாகப் பணிக்கு வரக்கூடாது.

* கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டிலிருந்தபடியே பணிபுரிய நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பகுதி
தடை செய்யப்பட்ட பகுதி
`கொரோனா, சீனாவில் இருந்து விமானப் பயணிகள் மூலம் விதைக்கப்பட்டது!’ - ட்ரம்பின் உதவியாளர்

* அலுவலகத்தில் யாருக்காவது கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்த நபரை தனிமைப்படுத்தி தனி அறையில் வைத்துவிட்டு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.''

அடுத்த கட்டுரைக்கு