Published:Updated:

குழந்தைக்கு பாராசிட்டமால் கொடுப்பவரா நீங்கள்? கல்லீரலை பாதிக்கும் என எச்சரிக்கிறது ஆய்வு!

டானிக்

குழந்தைகளுக்கு மருத்துவர் பரிந்துரைத்ததைவிட கூடுதலாக பாராசிட்டமால் கொடுப்பது, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது, `Frontiers in Paediatrics' இதழில் வெளியாகியுள்ள சமீபத்திய ஆய்வு முடிவு.

குழந்தைக்கு பாராசிட்டமால் கொடுப்பவரா நீங்கள்? கல்லீரலை பாதிக்கும் என எச்சரிக்கிறது ஆய்வு!

குழந்தைகளுக்கு மருத்துவர் பரிந்துரைத்ததைவிட கூடுதலாக பாராசிட்டமால் கொடுப்பது, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது, `Frontiers in Paediatrics' இதழில் வெளியாகியுள்ள சமீபத்திய ஆய்வு முடிவு.

Published:Updated:
டானிக்

மருத்துவர் பரிந்துரைத்ததைவிட குழந்தைகளுக்கு அதிக அளவு பாராசிட்டமால் மருந்து கொடுத்தால், அது கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று, சென்னை மருத்துவமனை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவர் பரிந்துரையின்றி சுயமாக மருத்துவம் செய்து கொள்வது ஆபத்தானது. ஆனால், நம்மில் பலர் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை; காய்ச்சல் என்று வந்துவிட்டால், மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து எடுத்துக்கொள்கிறோம். பாராசிட்டமால் போட்டுக்கொள்கிறோம். அதேபோல் குழந்தைகளுக்கும் பாராசிட்டமால் சிரப் கொடுக்கப்படுகிறது.

மருந்து
மருந்து

ஆனால், குழந்தைகளுக்கு மருத்துவர் பரிந்துரைத்தைவிட கூடுதலாக பாராசிட்டமால் கொடுப்பது, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது, `Frontiers in Paediatrics' இதழில் வெளியாகியுள்ள சமீபத்திய ஆய்வு முடிவு. பாராசிட்டமால் அதிக அளவு கொடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 10-ல் ஒருவர் இறப்பதாக, ஆய்வின் முதல் ஆசிரியர் டாக்டர் பூஜா அமாத்யா கூறியுள்ளார்.

சென்னை, காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பால், 2014-ம் ஆண்டு முதல் 2019 டிசம்பர் வரை அனுமதிக்கப்பட்ட, ஒரு மாதக் குழந்தை முதல், 18 வயது வரையிலான 125 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இவர்களில் 10-ல் இருவருக்கு பாராசிட்டமால் நச்சுத்தன்மை இருப்பது தெரிய வந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இக்குழந்தைகளில் 32 சதவிகிதம் பேர் டெங்கு, செப்டீசிமியா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்பட்ட ரத்த நச்சு பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 23 சதவிகித குழந்தைகளின் பாதிப்புக்கான காரணம் தெரியவில்லை என்று அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

பொதுவாக பாராசிட்டமால் மருந்து, சிரப், சொட்டு மருந்து, மாத்திரைகள், ஊசிகள் போன்ற வடிவில் கிடைக்கிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை, கிலோவுக்கு 10 - 15 மி.கி என்றளவில் பாராசிட்டமால் சிரப்பை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால், பெற்றோர்கள் சிலர் காய்ச்சலில் இருந்து குழந்தைகள் சீக்கிரம் விடுபட வேண்டுமென்று நினைத்து, அதிக அளவு டோஸ் கொடுக்கிறார்கள். இன்னும் சிலர் மருத்துவர் கூறியதைத் தவறாகப் புரிந்துகொண்டு, பரிந்துரைத்தது 120 மி.கி என்றால், ஒரு டீஸ்பூன் (500 மி.கி) பாராசிட்டமால் கொடுக்கின்றனர். சில நேரங்களில் டானிக் சுவைக்காக குழந்தைகளே அதிக அளவு உட்கொள்வதாக, ஆய்வின் மூத்த ஆசிரியர் டாக்டர் பாலராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மருந்து
மருந்து

உடலின் வடிகட்டியாக உள்ள கல்லீரலானது, தொடர்ந்து அதிக அளவு பாராசிட்டமாலை குழந்தைகள் எடுத்துக்கொள்ளும்போது, அதன் செயல்பாட்டை நிறுத்திக்கொள்கிறது. தொற்று பாதிப்பு இருந்த 40 குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருந்துள்ளது. டெங்குவால் கல்லீரல் பாதிக்கப்படும் என்ற நிலையில், அதிக அளவு பாராசிட்டமால் உட்கொள்வது, அதை இன்னும் மோசமாக்கும். எனவே, 2 நாள்களைக் கடந்தும் காய்ச்சல் இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெற்று மருந்து எடுத்துக்கொள்ள வேண்டுமென்று டாக்டர் பாலராமச்சந்திரன் கூறுகிறார்.

எனினும், இந்த ஆய்வில் உள்ள நல்ல செய்தி என்னவென்றால், பாராசிட்டமால் உட்கொள்வதால் ஏற்படும் கல்லீரல் செயலிழப்பில் இருந்து 90% குழந்தைகள் குணமடைகிறார்கள் என்பதுதான். பாராசிட்டமால் மட்டுமல்ல எந்த மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரையின்றி நாமே எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்பதை உணர வேண்டும்.