Published:Updated:

அறிகுறியே இல்லாமல் பரவும் புற்றுநோய்; கண்டறிய உதவும் `பாத்பைண்டர்’ ரத்தப் பரிசோதனை முறை!

புற்றுநோய் -சித்தரிப்பு படம்

புற்றுநோய்க்கான சிகிச்சைகளை மேம்படுத்துதல் எனும் சுகாதார நலம் சார்ந்த நோக்கத்துடன் செயல்படும் GRAIL என்னும் ஆய்வு நிறுவனம், 6,662 பேரிடம் இது தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொண்டது. புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ள 50 வயது, அதற்கு மேற்பட்டோரிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அறிகுறியே இல்லாமல் பரவும் புற்றுநோய்; கண்டறிய உதவும் `பாத்பைண்டர்’ ரத்தப் பரிசோதனை முறை!

புற்றுநோய்க்கான சிகிச்சைகளை மேம்படுத்துதல் எனும் சுகாதார நலம் சார்ந்த நோக்கத்துடன் செயல்படும் GRAIL என்னும் ஆய்வு நிறுவனம், 6,662 பேரிடம் இது தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொண்டது. புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ள 50 வயது, அதற்கு மேற்பட்டோரிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Published:Updated:
புற்றுநோய் -சித்தரிப்பு படம்

பாத்பைண்டர் (PATHFINDER) எனும் ரத்தப் பரிசோதனை சிகிச்சை மூலம், அறிகுறிகள் இல்லாமல் மனித உடலில் பரவும் உயிர்க்கொல்லி நோயான கேன்சரை கண்டுபிடிக்கலாம். இது மருத்துவ உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

புற்றுநோய்
புற்றுநோய்

புற்றுநோய்க்கான சிகிச்சைகளை மேம்படுத்துதல் எனும் சுகாதார நலம் சார்ந்த நோக்கத்துடன் செயல்படும் GRAIL என்னும் ஆய்வு நிறுவனம், 6,662 பேரிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ள 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரிடம், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவுகள், பாரிசில் நடைபெற்ற ஐரோப்பிய மருத்துவ புற்றுநோயியல் சங்கம் (ESMO) மாநாட்டில் நடப்பாண்டில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு வெளியீட்டில், ஒரு சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் எதுவும் இன்றி புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து, GRAIL -இன் தலைமை மருத்துவ அதிகாரி ஜெஃப்ரி வென்ஸ்ட்ரோம் கூறுகையில்,``MCED சோதனையானது மற்ற சோதனைகளுடன் ஒப்பிடும் போது புற்றுநோய் பாதிப்பை இரட்டிப்பாகக் கண்டுபிடித்தது. எனினும் அமெரிக்க தடுப்புச் சேவைகள் பணிக்குழு பரிந்துரைக்கும் `Galleri’ புற்றுநோய் பரிசோதனையானது கல்லீரல், சிறுகுடல், கருப்பையின் நிலை ஒன்று மற்றும் இரண்டாம் நிலை புற்றுநோய், கணையம், எலும்பு சார்ந்த புற்றுநோய்களையும் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

Research
Research

மேலும் இந்தப் புதிய சோதனை முறை மூலம், முன்னதாகவே புற்றுநோய் வகையை கண்டறிந்து, அதற்கான சிகிச்சை உக்தியை செயல்படுத்த இது வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது, மருத்துவ உலகில் பெரிய புரட்சியை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.