Published:Updated:

வீடியோ கேம் விளையாடுவது படைப்பாற்றலை அதிகரிக்குமா? - ஆய்வில் புதிய தகவல்!  

'வீடியோ கேம்' விளையாட்டு பலரையும் அடிமையாக்கி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மனநல மருத்துவர்கள் எச்சரிக்கும் சூழலில், இந்த ஆய்வு முடிவு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வீடியோ கேம்
வீடியோ கேம் ( pixabay )

வீடியோ கேம் விளையாட்டு தவறானதல்ல. அது, படைப்பாற்றலையும் சுதந்திர மனப்பான்மையையும் வளர்க்கும் என்கிறது, புதிய ஆய்வு முடிவு.

வீடியோ கேமைப் பற்றி மட்டுமே அதிக நேரம் சிந்தித்து, தொடர்ச்சியாக விளையாடுவது, 'கேமிங் டிஸ்ஆர்டர்' என்னும் மனநோய்
உலக சுகாதார நிறுவனம்

'வீடியோ கேம்' விளையாட்டு பலரையும் அடிமையாக்கி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மனநல மருத்துவர்கள் எச்சரிக்கும் சூழலில், இந்த ஆய்வு முடிவு  ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள அயோவா மாநில பல்கலைக்கழகம் (Iowa State University), 'வீடியோ கேம் விளையாடுபவர்களைப் பற்றி மேற்கொண்ட ஓர் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவு, 'கிரியேட்டிவிட்டி ரிசர்ச் ஜெனரல்' (Creativity Research Journal) என்னும் இதழில் வெளியாகியுள்ளது. 352 பேரை இரண்டு குழுக்களாகப் பிரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  

கேம்
கேம்
pixabay

இதில், ஒரு குழுவினரிடம் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற அறிவுறுத்தலுடனும், மற்றொரு குழுவினரிடம் எந்த அறிவுறுத்தலும் இல்லாமல் கார் ரேஸ் கேம் விளையாட அனுமதித்துள்ளனர். மொத்தம் 40 நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப்பட்டது. விளையாட்டைத் தொடங்குவதற்கு முன்பும் பிறகும், அவர்களது படைப்பாற்றலை சோதிக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

விளையாட்டில் ஈடுபட்ட பிறகு, அவர்களின் செயல்பாடு சிறப்பாகவும் புதிய கண்ணோட்டத்திலும் இருந்தது தெரியவந்தது. மேலும், சிறப்பாக விளையாட வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் விளையாடியவர்களைவிட, எந்தவித அறிவுறுத்தலுமின்றி சுதந்திரமாக விளையாடியவர்கள் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளனர்.

வீடியோ கேம்
வீடியோ கேம்
குழந்தைகள் தப்பான வீடியோ பார்த்தால், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

வீடியோ கேமைப் பற்றி மட்டுமே அதிக நேரம் சிந்தித்து, தொடர்ச்சியாக விளையாடுவது, 'கேமிங் டிஸ்ஆர்டர்' என்னும் மனநோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, விளையாட்டாக இருந்தாலும் அது ஒரு பொழுதுபோக்காவும், அன்றாட வேலைகளைப் பாதிக்காதவாறும் அளவோடு இருந்தால் பரவாயில்லை. குறிப்பிட்ட மணி நேரத்துக்குமேல் விளையாட்டில் நேரம் செலவிடுவதைத் தவிர்ப்பதே நல்லது' என்கிறார்கள், உளவியல் ஆலோசகர்கள்.