Published:Updated:

சீர்காழியில் ஒருவருக்கு கொரோனா! - சீல் வைக்கப்பட்ட பகுதிகள்; 2,800 வீடுகளில் சோதனை

சீர்காழி
சீர்காழி

அப்பகுதியில் உள்ள சுமார் 2,800 வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் பணிகளை சுகாதாரத்துறையினர் இன்று மேற்கொண்டுள்ளனர்.

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட சீர்காழி நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் வசித்த பகுதி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சீல் வைத்துள்ளனர்.

சீர்காழி
சீர்காழி

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட நாகை மாவட்டம் சீர்காழி 6 வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நபர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு போய் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஒத்துழைப்போடு சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் வசித்த பகுதிகளைச் சுற்றி சீல் வைத்துள்ளனர். 4 ,5, 6, 7, 8 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த புளிச்சக்காடு S.M.H ஸ்கூல் வளாகம், அரசுப் போக்குவரத்து டிப்போ வழி, இறைச்சி, மீன் மார்க்கெட் மேற்கு வீதி, மார்க்கெட் எதிர் புறம், காய்கறி மார்க்கெட், முருகன் பூங்கா புழுகாப்பேட்டை வழி, தாடாளன் வடக்கு மட வளாகம், தாடாளன் வடக்கு வீதி, தாடாளன் மேலவீதி, இரணியன் நகர் (இருபுறம்) பள்ளிவாசல் தெரு, சபாநாயகர் தெரு, காயிதே மில்லத் தெரு, ஜவஹர் தெரு, ஜவஹர் மேலத் தெரு, தக்வா சின்ன பள்ளிவாசல் தெரு, புளிக்குடி விளந்திட சமுத்திரம் (குளம்) மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா
கொரோனா

அவசரத் தேவைக்கு அரசுப் போக்குவரத்து வளாக வழி மாரியம்மன் கோயில் தெரு தாடாளன் வடக்கு வீதி, தாடாளன் மேல வீதி ஆகிய 4 வீதிகள் வழியாக அனுமதி பெற்று நடமாடலாம்

அப்பகுதியில் உள்ள சுமார் 2,800 வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் பணிகளை சுகாதாரத் துறையினர் இன்று மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சீல் வைக்கும் பணிகள் நடைபெற்றது. காலை எழுந்து வீட்டைவிட்டு வெளியே வந்த மக்கள் தங்கள் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருள்கள் வீடு தேடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் சீர்காழி நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு