Published:Updated:

ஒரே நேரத்தில் ஐவருக்குச் செய்யப்படும் கொரொனா கூட்டு மாதிரிப் பரிசோதனை... ஏன், எப்படி? - மருத்துவர் விளக்கம் #VikatanExplainer

 test
test

ஒருவேளை பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என்று வந்தால், பின்னர் ஒவ்வொருவரின் மாதிரிக்கும், தனித்தனியாக அடுத்தகட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, யாருக்குத் தொற்று உள்ளது என்பது கண்டறியப்படும்.

நம் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்குத் தொற்று எவ்வாறு ஏற்பட்டது எனக் கண்டறிய முடியாத சூழல் உருவாகி உள்ளது. எனவே, இந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாக மாறியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Testing Corona
Testing Corona

சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய மக்களிடையே பரவலாகப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியம். எனவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR), கூட்டு மாதிரிப் பரிசோதனையை (pooled test) மேற்கொள்ளப் பரிந்துரைத்திருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம், ஐ.சி.எம்.ஆரின் அனுமதி பெற்று கூட்டு மாதிரிப் பரிசோதனையைச் செயல்படுத்தியுள்ள முதல் மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், அனுமதிக்காகக் காத்திருக்கிறது.

கூட்டு மாதிரிப் பரிசோதனை பற்றி நுண்ணுயிரியல் மருத்துவர் தினேஷிடம் பேசினோம். ``கூட்டு மாதிரிப் பரிசோதனை மூலம் பலரின் மாதிரிகளை ஒரே நேரத்தில் பரிசோதிக்க முடியும். இந்தப் பரிசோதனையில், இதற்கு முன்பு தனிப்பட்ட நபருக்குப் பயன்படுத்திய RT- PCR (Reverse Transcription Polymerase Chain Reaction) முறைதான் பயன்படுத்தப்படும்.

டாக்டர் தினேஷ்.
டாக்டர் தினேஷ்.

அதில், ஒருவரின் மாதிரியை மட்டுமே பயன்படுத்தினோம். இதில், பலரின் மாதிரிகள் ஒன்றாக சோதனைக் குழாயில் கலக்கப்பட்டு, RT- PCR பரிசோதனை முறைக்கு உட்படுத்தப்படும். பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்தால், அந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட அனைவருக்குமே தொற்று இல்லை என்று ஒரே நேரத்தில் முடிவுபெற்று விடலாம். இதனால் பரிசோதனை செலவு பெருமளவு குறையும்.

மனநிறைவான நேரமே மனச்சோர்வுக்கு மருந்து... க்வாரன்டீன் நாள்களை சுறுசுறுப்பாக்கும் டிப்ஸ்! #StayHome

ஒருவேளை பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என்று வந்தால், பின்னர் ஒவ்வொருவரின் மாதிரிக்கும், தனித்தனியாக அடுத்தகட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, யாருக்குத் தொற்று உள்ளது என்பது கண்டறியப்படும். இந்தப் பரிசோதனை மூலம் பலருக்கு ஒரே நேரத்தில் பரிசோதனை செய்யப்படுவதால், சமூகப்பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய உதவியாக இருக்கும். இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும். ஆனால், இந்தப் பரிசோதனையின் நம்பகத்தன்மையை கணிக்க இயலாது.

 Rapid Test
Rapid Test

மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிக்கு நடுவில் (Nasopharyngeal swab) எடுக்கப்படும் மாதிரியின் நம்பகத்தன்மை 70%. வாய் மற்றும் தொண்டைப் பகுதிக்கு நடுவில் (oropharyngeal swab) எடுக்கப்படும் மாதிரியின் நம்பகத்தன்மை 30%. ஆகவே, இந்த இரண்டு மாதிரிகளையும் சேர்த்து எடுத்து பரிசோதனை செய்வது நல்லது. மாதிரி எடுக்கும் முறை சரியாக இல்லாவிட்டாலும் ஃபால்ஸ் நெகட்டிவ் (False Negative), அதாவது தொற்று இருந்தும் இல்லாததுபோல் முடிவுகள் வர வாய்ப்புள்ளது. ஆகவே மாதிரிகளை எடுப்பதில் கவனம் தேவை.

அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் கிடைக்காததால், இந்தக் கூட்டு மாதிரி பரிசோதனை முறை சமூகப் பரவலைக் கண்டறிய உறுதுணையாக இருக்கும்" என்றார் டாக்டர் தினேஷ்.

கொரோனா
கொரோனா
vikatan

இஸ்ரேல் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு மாதிரிப் பரிசோதனையில், 64 பேரின் மாதிரிகளை ஒரே நேரத்தில் பரிசோதித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் ஐ.சி.எம்.ஆர், 5 மாதிரிகளை மட்டுமே ஒரே நேரத்தில் பரிசோதிக்க அனுமதி வழங்கியுள்ளது.

`கொரோனா பரவல்; ஆடைகளில் வேண்டும் அதிக கவனம்!' -மருத்துவர் பகிரும் 10 டிப்ஸ் #DoctorAdvise

மேலும் 2 சதவிகிதத்துக்கும் குறைவாகக் கொரோனா தொற்றுள்ள பகுதிகளில் மட்டுமே கூட்டு மாதிரிப் பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்றும், 2% - 5% நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு மட்டுமே கூட்டு மாதிரிப் பரிசோதனை செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5% மேல் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூட்டு மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ளப்படக் கூடாது என்று ஐ.சி.எம்.ஆர் குறிப்பிட்டுள்ளது.

corona
corona

மேலும், 2 சதவிகிதத்துக்கும் குறைவாகக் கொரோனா தொற்றுள்ள பகுதிகளில் மட்டுமே கூட்டு மாதிரிப் பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்றும், 2% - 5% நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு மட்டுமே கூட்டு மாதிரிப் பரிசோதனை செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5% மேல் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூட்டு மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ளப்படக் கூடாது என்று ஐ.சி.எம்.ஆர் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு