Published:Updated:

`ஒட்டிப்பிறந்த கரு!’- பிறந்து 24 மணி நேரமேயான குழந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை

`குழந்தை இட்ஸ்மாராவின் உடலோடு உடலாக, வளராத அந்தக் கரு இணைந்திருந்தது. ஆகவே இட்ஸ்மாரா பிறந்து 24 மணி நேரம் கழித்து, அறுவை சிகிச்சை செய்து அந்தக் கருவை நீக்கினோம்'

தாய் மோனிகாவின் ஸ்கேன் ரிப்போர்ட்
தாய் மோனிகாவின் ஸ்கேன் ரிப்போர்ட் ( The New York Times )

அமெரிக்காவின் கொலம்பியாவைச் சேர்ந்த மோனிகா என்ற கர்ப்பிணி, கடந்த வாரத்தில் இரட்டையரைப் பெற்றெடுத்துள்ளார். பிரச்னை என்னவெனில், ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும் இன்னொரு குழந்தை வளர்ச்சி பெறாத உயிரற்ற கருவாகவும் இருந்துள்ளது. ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தைக்கு, இட்ஸ்மாரா எனப் பெயரிட்டுள்ளனர் பெற்றோர்.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குழந்தை இட்ஸ்மாரா
அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குழந்தை இட்ஸ்மாரா
The New York Times

`இட்ஸ்மாராவின் உடலோடு உடலாக, வளராத அந்தக் கரு இணைந்திருந்தது. அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பையிலிருந்து இட்ஸ்மாராவை முதலில் வெளியில் எடுத்துவிட்டு, அவள் பிறந்து 24 மணி நேரம் கழித்து, அவளது உடலில் ஒட்டியிருந்த அந்த `வளராத கரு'வை, மற்றோர் அறுவை சிகிச்சை (லேப்ராஸ்கோப்பி சிகிச்சை) செய்து நீக்கியுள்ளனர் மருத்துவர்கள்.

தாயும் சேயும் இப்போது நலமாக இருக்கின்றனர்
மருத்துவர் மிகல் பார்ரா

மோனிகாவுக்கு ஏழாவது மாதத்தின் முடிவில், அல்ட்ரா சவுண்ட் செய்து பார்த்தபோதே, இரண்டு தொப்புள் கொடி இருப்பது மருத்துவர்களுக்குத் தெரியவந்துள்ளது. இந்த `ஐடென்டிக்கல் ட்வின்'ஸில், ஒரு கருவுக்கு மட்டும் மூளை - இதயம் போன்ற உயிருக்குத் தேவையான உறுப்புகள் வளர்ச்சியடையாமல் இருந்துள்ளதையும் மருத்துவர்கள் அப்போதே அறிந்துள்ளனர்.

Vikatan
உலகில் இதுவரையில் 200 தாய்மார்களுக்கு ஏற்பட்டுள்ள இப்படியான பிரசவம், கருவினுள் கரு (fetus-in-fetu) எனப்படும்
மருத்துவர்கள்

வளர்ச்சியடையாத கரு, இன்னொரு கருவின் உடல் வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பதால், இதற்கான வேறு எந்தச் சிகிச்சைகளையும் அப்போதைக்கு மேற்கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

தாயின் கர்ப்பப்பையில் ஏற்படும் இந்த நிலையை, கருவினுள் கரு (fetus-in-fetu) எனக் குறிப்பிடுகின்றனர் மருத்துவர்கள். உலகளவில் இதுவரையில் 200 தாய்மார்களுக்கு இப்படியான பிரசவம் நிகழ்ந்துள்ளதென மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Dr. Miguel Parra-Saavedra
Dr. Miguel Parra-Saavedra
The New York Times

``பெரும்பாலும் வளர்ச்சியடையாமல் இருக்கும் கருவால், தாய்க்கோ நன்கு வளரும் கருவுக்கோ ஏதேனும் உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும். அதிர்ஷ்டவசமாக மோனிகாவின் பிரசவத்தில் அப்படி ஏதும் ஏற்படவில்லை. தாயும் சேயும் இப்போதும் நலமாக இருக்கின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார் மோனிகாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மிகல் பார்ரா (Dr. Miguel Parra-Saavedra)