Published:Updated:

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் உப்பு, சர்க்கரை; எச்சரிக்கும் மருத்துவர்கள்!

உணவுப் பொருள்கள்

இன்று கடைகளில் நாம் வாங்கும் பொருள்கள் அனைத்தும் உடனே தயாரித்து உடனே விற்கப்படுவதில்லை. எல்லா உணவுமே பல நாள்களாகப் பதப்படுத்தி வைப்பதுதான். பதப்படுத்தவில்லை என்றால் உணவுகள் கெட்டுப்போயிருக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் உப்பு, சர்க்கரை; எச்சரிக்கும் மருத்துவர்கள்!

இன்று கடைகளில் நாம் வாங்கும் பொருள்கள் அனைத்தும் உடனே தயாரித்து உடனே விற்கப்படுவதில்லை. எல்லா உணவுமே பல நாள்களாகப் பதப்படுத்தி வைப்பதுதான். பதப்படுத்தவில்லை என்றால் உணவுகள் கெட்டுப்போயிருக்கும்.

Published:Updated:
உணவுப் பொருள்கள்

இன்றைய நவீன உலகில் 10 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் நம் உணவு, வாழ்வியல் பழக்கவழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டதுதான்.

'உணவே மருந்து என்ற காலம் போய் மருந்தே உணவு' என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் நம்முடைய அடுத்த தலைமுறை அனுபவிக்கும் வேதனைகள் அதிகம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் உப்பு, சர்க்கரை; எச்சரிக்கும் மருத்துவர்கள்!

நகரங்களிலும் கிராமங்களிலும் பதப்படுத்தும் உணவுகளின் பழக்கம் அதிகரித்துள்ளன. உணவை பதப்படுத்துவதற்கு அதிக அளவிலான உப்பும் சர்க்கரையும் சேர்க்கப்படுகிறது. இதனால் சிறுவயதிலேயே அதிக உடல் எடை, நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகின்றன.

உணவுப் பொருள்களில் என்ன கலந்திருக்கிறது என்பதை பெரும்பாலும் வாங்கும் மக்கள் அறிவதில்லை. எனவே, பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டில்களில் அதிக உப்பும் சர்க்கரையும் கலந்திருப்பதை லேபிள்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று CAG (Citizen consumer and Civic Action Group) அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து இதய சிறப்பு மருத்துவர் அருணாச்சலம் நம்மிடம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசும்போது…

``இன்று கடைகளில் நாம் வாங்கும் பொருள்கள் அனைத்தும் உடனே தயாரித்து உடனே விற்கப்படுவதில்லை. எல்லா உணவுமே பல நாள்களாகப் பதப்படுத்தி வைப்பதுதான். பதப்படுத்தவில்லை என்றால் உணவுகள் கெட்டுப்போயிருக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவான உப்பும் சர்க்கரையும் சேர்த்தால் மட்டுமே உணவு கெட்டு போகாமல் இருக்கும். எனவே இதற்காக சேக்ரின், சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் ஆகியவற்றை உணவுகளில் சேர்க்கின்றனர். இவை உணவை கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. ஆனால், இவை சாப்பிடுபவர்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகளை உண்டாக்கும். ஜூஸ் போன்ற உணவுகளில் கெட்டுப்போகாமல் இருக்க சேக்ரின் அதிகமாகக் கலக்கப்படுகிறது,

இதைப் பருகும்போது மக்களின் மூளையை SUGAR CRATINGS BRAIN ஆக மாற்றிவிடும். அதாவது. சேக்ரினை மறைமுகமாக உட்கொள்வதால் இனிப்பு பொருள்களை அதிகமாக சாப்பிட மூளை நம்மைத் தூண்டுகிறது. இதனால் 30-35 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.

ரசாயன உப்பு கலந்த பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை அதிகம் சாப்பிடும்போது, ஸ்டுரோக் (stroke), உடல் எடை அதிகரிப்பு (obesity), மாரடைப்பு, ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் தாக்கி பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதிலும் உடல் உழைப்பு இல்லாமல், அலுவலக வேலைகளை மேற்கொள்ளும் நபர்கள் (White color) அதிகம் பாதிப்படைகிறார்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்பட்ட பொருள்களின் விவரங்களை ஆங்கிலத்தில் சிறிதாக பாக்கெட்டில் எழுதியிருக்கும். பெரும்பாலும் வாங்கும் மக்கள் யாருக்கும் அது தெரிவதில்லை. யாரும் படித்து பார்ப்பதும் இல்லை, பெரும்பான்மை மக்களுக்கு புரிவதில்லை. அப்படித்தான் அச்சிடப்பட்டிருக்கும்..

இவ்வாறான பிரச்னைகளைத் தடுப்பதற்கு உணவு பாக்கெட்டுகளில் உப்பு, சர்க்கரை அதிகமாக இருந்தால் டிராஃபிக் சிக்னல் போல் எச்சரிக்கை லேபிள் ஒட்ட வேண்டும்.

பிரச்னை
பிரச்னை

இப்படி செய்வதால் இந்த உணவுகளை வாங்கலாமா, வேண்டாமா என்பது அவர்கள் விருப்பத் தேர்வாகிவிடும். மக்கள் விழிப்படைவார்கள். டிராபிக் சிக்னல் போல் கண்ணை கவரும் லேபிள் இருந்தால் கிராமத்திலுள்ளவர்களும், படிக்க முடியாதவர்களும் எளிதில் புரிந்துகொள்ளலாம்" என்றார்.

CAG நிர்வாக இயக்குநர் சரோஜா இதுபற்றி பேசுகையில், "இன்று பதப்படுத்தும் உணவின் பழக்கம் நகரங்களில் உள்ளது போல் கிராமங்களிலும் அதிகமாகிவிட்டது. அதனால் பதப்படுத்தப்பட்ட உணவில் உள்ள உப்பின் அளவும், சர்க்கரையின் அளவும் அதிகரித்தால் தெரிந்துகொள்வதற்கு லேபிள் அச்சிடுவது உதவியாக இருக்கும். அரசாங்கம் ஸ்டார் ரேட்டிங் முறையை நடைமுறைப்படுத்த நினைக்கிறது. ஹெல்த் ஸ்டார் ரேட்டிங் முறை இருந்தால் உப்பு அதிகமாக இருந்தாலும், சர்க்கரை அதிகமாக இருந்தாலும் ஏதாவது பாசிட்டிவிட்டியான பொருள் கலந்திருந்தால் ஸ்டார் ரேட்டிங்க் அதைத்தான் முன்னிருத்தும். ஸ்டார் ரேட்டிங்க் முறை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அரசு நடைமுறைப்படுத்தி தோல்வியை ஒப்புக்கொண்டது. அதனால் இந்தியாவிலும் வெற்றி பெறுவது கேள்விக்குறியே" என்றார்.