Published:Updated:

இக்கட்டான சூழலில் பொறுப்பேற்ற புதிய சுகாதாரத்துறை அமைச்சர்; யார் இந்த மன்சுக் மாண்டவியா?

மன்சுக் மாண்டவியா ( Photo: Twitter//@mansukhmandviya )

டாக்டர் ஹர்ஷ் வர்தனுக்கு பதிலாக இந்தியாவின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்கட்டான சூழலில் பொறுப்பேற்ற புதிய சுகாதாரத்துறை அமைச்சர்; யார் இந்த மன்சுக் மாண்டவியா?

டாக்டர் ஹர்ஷ் வர்தனுக்கு பதிலாக இந்தியாவின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Published:Updated:
மன்சுக் மாண்டவியா ( Photo: Twitter//@mansukhmandviya )

டாக்டர் ஹர்ஷ் வர்தனுக்கு பதிலாக, இந்தியாவின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா கொரோனோ பெருந்தொற்றுப் பரவலின் மையப்பகுதியில் இருக்கும்போது மன்சுக் மண்டாவியா சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ் வர்தன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் இதற்கு முன் பணியாற்றினார். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை செயல்படுத்தியது, இந்தியாவிலேயே தடுப்பூசிகளை உருவாக்கும் வேலைகளை முன்னெடுத்தது போன்ற பணிகளை டாக்டர் ஹர்ஷ் வர்தன் செய்திருந்தாலும், கொரோனோ பெருந்தொற்றுப் பரவலின் மையப்பகுதியில் அதுகுறித்து இவர் தெரிவித்த பல்வேறு கருத்துகள் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாயின. குறிப்பாக, உண்மையான களநிலவரத்தை சொல்லாமல் மத்திய அரசைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இவர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

டாக்டர் ஹர்ஷ் வர்தன்
டாக்டர் ஹர்ஷ் வர்தன்
Photo: Twitter// @drharshvardhan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று பிரதமர் நரேந்திரமோடி மத்திய அரசின் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்திருக்கிறார். சர்பானந்தா சொனோவால், நாராயண் ரானே மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா போன்றோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது. மறைந்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சரான மாதவ்ராவ் சிந்தியாவின் மகனான ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், சட்டத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் தங்கள் பதவியை இழந்திருக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவின் புதிய சுகாதாரத்துறை அமைச்சரான மாண்டவியாவுக்கு வயது 50. குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த இவர் அங்குள்ள பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹனோல் என்கிற கிராமத்தில் பிறந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அணியில் இருந்த இவர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட இவர் குஜராத்தில் உள்ள `குஜராத் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார்.

மன்சுக் மாண்டவியா
மன்சுக் மாண்டவியா
Photo: Twitter// @mansukhmandviya

இவை எல்லாவற்றையும் தாண்டி கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி அமைச்சரவையின் முக்கியமான முகமாக இவர் அறியப்படுகிறார். 2006-ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத்துறை துணை அமைச்சராகப் பணியில் இருந்த இவர் 2019-ம் ஆண்டு முதல் ரசாயன மற்றும் உர உற்பத்தித்துறை துணை அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கொரோனா மூன்றாம் அலையை எதிர்நோக்கி இருக்கும் இந்தச் சூழலை மாண்டவியா எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்ற கேள்வியுடன் பல தரப்பினரும் காத்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism