Published:Updated:

மனசு இளைப்பாற, ஈடுபடக் கூடாதவை... - எச்சரிக்கையும் வழிகாட்டுதல்களும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடும்பத்தைத் தொற்றக்கூடாது கொரோனா!
குடும்பத்தைத் தொற்றக்கூடாது கொரோனா!

கணவன், மனைவி இருவருமே வேட்டைக்குப் போன காலமும் நம் சமூகத்தில் இருந்திருக்கிறது. எல்லாக் காலத்திலும் சாமர்த்தியமான பெண்கள் வேலைக்குச் சென்றுகொண்டுதான் இருந்தார்கள். அதனால் உத்தியோகம் புருஷ லட்சணம் மட்டுமல்ல பெண்களுக்கும் அது லட்சணம்தான்.

“உலகம் முழுக்க பெரிய பொருளாதார வீழ்ச்சி வந்திருப்பதால் 'இவ்வளவுதானா என்னுடைய வொர்த்' என்று நம்மை நாமே குறைவாக நினைத்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.

'போன மாதம் முப்பதாயிரம் சம்பளம், இந்த மாதம் பத்தாயிரம்தான் சம்பளம், என்ன செய்வது' என்ற பதற்றமும் தன் இருப்பைப் பற்றிய பயமும் வந்திருக்கும். அந்தஸ்தையும் பணத்தையும் நம்முடன் தொடர்புபடுத்திப் பார்க்கிற இயல்பு இந்திய மனப்பான்மையில் ஏற்கெனவே இருப்பதால் அது பெருந்தொற்றுச் சூழலிலும் தொடர ஆரம்பிக்கும்.

* கணவன் மனைவி இருவருமே வேலையிழந்திருந்தால்...?

துயரமான சூழல் என்றாலுமே இரண்டு பேரும் சேர்ந்து இந்தப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீண்டு வந்துவிடலாம். அந்த நேரத்தில் நான் யார் தெரியுமா, நான் என்ன படிச்சிருக்கேன் தெரியுமா, என் குடும்பம் எப்படிப்பட்டது தெரியுமா' என்ற ஈகோ இல்லாமல் ஜீரோவில் இருந்து ஆரம்பிப்போம். எது கிடைத்தாலும் நல்லதுக்குத்தான்.

'குறைச்சலான தகுதி இருக்கிற வேலையா இருந்தாலும் ஓகே. இப்போதைக்குக் குடும்பம் நடத்துவதற்கு ஒரு வேலை கிடைச்சா போதும்' என்கிற சர்வைவல் மனப்பான்மைக்குப் போய்விடுங்கள்.

* உத்தியோகம் மனைவி லட்சணமும்கூட!

சில வீடுகளில் கணவன் வேலையிழந்து இருக்கும்போது மனைவி தொடர்ந்து வேலைக்குச் செல்லலாம். உத்தியோகம் புருஷ லட்சணம் என்று காலங்காலமாகச் சொல்லிப் பழகியதால் வேலைக்குப் போவது ஆணுடைய இயல்பு என்ற எண்ணம் இருக்கிறது. இது நம் மரபணுவில் செதுக்கப்பட்ட விஷயம் கிடையாது. செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது தான்.

மனசு இளைப்பாற, ஈடுபடக் கூடாதவை... - எச்சரிக்கையும் வழிகாட்டுதல்களும்!

கணவன், மனைவி இருவருமே வேட்டைக்குப் போன காலமும் நம் சமூகத்தில் இருந்திருக்கிறது. எல்லாக் காலத்திலும் சாமர்த்தியமான பெண்கள் வேலைக்குச் சென்றுகொண்டுதான் இருந்தார்கள். அதனால் உத்தியோகம் புருஷ லட்சணம் மட்டுமல்ல பெண்களுக்கும் அது லட்சணம்தான். பெண் பறவை இரை தேடிப் போகும்போது ஆண் பறவை எப்படி அடை காக்கிறதோ அதே போல மனித ஆண்களும் தன்னுடைய கூட்டை அடை காத்துப் பராமரிப்பது அவருடைய திறமையைத்தான் காட்டுகிறது.

நான் புதிதாக ஒரு வேலையைக் கற்றுக்கொள்கிறேன் என்ற தெளிவுடன் ஆண்கள் இதை அணுகுவது அவசியம். ஏனென்றால், இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு மனிதர்கள் ஒரு துறையில் மட்டும் புத்திசாலியாக இருந்தால் ஜெயிக்க முடியாது.

* இது அடிக்ட் ஆகிற நேரமும்கூட...

வெளியிலிருந்து மிகப்பெரிய மன அழுத்தம் ஒன்று மனிதர்களுக்குள் வரும்போது, மனசு இளைப்பாறுவதற்காக மது, மொபைல் கேம்ஸ், குடும்பத்துக்கு அப்பாலான உறவுகள் என்று வேறு விஷயங்களில் ஈடுபட ஆரம்பிக்கலாம். அப்படி ஆரம்பித்தால் எச்சரிக்கையுடன் இருந்து, அதிலிருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள்.

நான் செய்வதுதான் சரி என்று உங்களை நியாயப்படுத்துவதற்கு முயற்சி செய்யாதீர்கள். ஒரு கூடு உங்களுக்கு அமைந்திருக்கிறது. அந்தக் கூட்டுக்கு நீங்கள் விசுவாசமாக இருப்பது முக்கியம். அப்படி இருந்தால்தான் ஒரு தலைமுறையின் தவறு அடுத்த தலைமுறையை பாதிக்காமல் இருக்கும்.

- கொரோனா உருவாக்கியுள்ள வேலையிழப்பும் பொருளாதாரச் சிக்கல்களும் குடும்ப உறவுகளில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கங்கள் பற்றியும் தீர்வுகள் பற்றியும் பேசுகிறார் மனநல மருத்துவர் ஷாலினி. அவர் முன்வைக்கும் 7 பிரச்னைகளையும் தீர்வுகளையும் ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2ZdqIuV > குடும்பத்தைத் தொற்றக்கூடாது கொரோனா!

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

குடும்பத்தைத் தொற்றக்கூடாது கொரோனா!

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு