கொரோனா உருவாக்கியுள்ள வேலையிழப்பும் பொருளாதாரச் சிக்கல்களும் குடும்ப உறவுகளில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கங்கள் பற்றியும் தீர்வுகள் பற்றியும் பேசுகிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

“உலகம் முழுக்க பெரிய பொருளாதார வீழ்ச்சி வந்திருப்பதால் `இவ்வளவுதானா என்னுடைய வொர்த்’ என்று நம்மை நாமே குறைவாக நினைத்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். `போன மாதம் முப்பதாயிரம் சம்பளம், இந்த மாதம் பத்தாயிரம்தான் சம்பளம், என்ன செய்வது’ என்ற பதற்றமும் தன் இருப்பைப் பற்றிய பயமும் வந்திருக்கும். அந்தஸ்தையும் பணத்தையும் நம்முடன் தொடர்புபடுத்திப் பார்க்கிற இயல்பு இந்திய மனப்பான்மையில் ஏற்கெனவே இருப்பதால் அது பெருந்தொற்றுச் சூழலிலும் தொடர ஆரம்பிக்கும்.

1. கோபத்தை உணருங்கள்!

இந்த நேரத்தில் கணவன் மனைவிக்கிடையே பிரச்னைகள் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. வருமானம் குறையும்போது ஆண், பெண் இருவருமே தன் சுயமதிப்பு குறைந்துபோனதாக நினைப்பார்கள். இதனால் சட்டென்று எரிச்சலடைவது, கோபப்படுவது என்று குணம் மாறி இருப்பார்கள். குறிப்பாகப் பெண்கள் பாதுகாப்பின்மையாக உணர்வார்கள். நமக்கே தெரியாமல் கோபப்படும்போது நம் உடம்புக்குக் கெடுதல் ஏற்படுத்துகிற ஹார்மோன்கள் உற்பத்தியாவதற்கு வாய்ப்பு அதிகம். அதுவே, ‘நான் இப்ப கோபப்படுறேன்’, ‘நான் இப்ப எரிச்சலாகுறேன்’ என்பதைத் தெரிந்து செய்யும்போது நம் உடம்பில் 10 அல்லது 20 சதவிகிதம் வரைக்கும் கெடுதல் செய்கிற தாக்கம் நிகழாமல் தப்பிக்கலாம். கணவன் - மனைவி இருவருமே இதை டீம் வொர்க் ஆகச் செய்தால் மட்டுமே தப்பிப் பிழைக்க முடியும். ஒருவர் மட்டுமே செய்தால் பலன் இருக்காது.

2. கணவன் மனைவி இருவருமே வேலையிழந்திருந்தால்...?

துயரமான சூழல் என்றாலுமே இரண்டு பேரும் சேர்ந்து இந்தப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீண்டு வந்துவிடலாம். அந்த நேரத்தில் நான் யார் தெரியுமா, நான் என்ன படிச்சிருக்கேன் தெரியுமா, என் குடும்பம் எப்படிப்பட்டது தெரியுமா’ என்ற ஈகோ இல்லாமல் ஜீரோவில் இருந்து ஆரம்பிப்போம். எது கிடைத்தாலும் நல்லதுக்குத்தான். `குறைச்சலான தகுதி இருக்கிற வேலையா இருந்தாலும் ஓகே. இப்போதைக்குக் குடும்பம் நடத்துவதற்கு ஒரு வேலை கிடைச்சா போதும்’ என்கிற சர்வைவல் மனப்பான்மைக்குப் போய்விடுங்கள்

3. உத்தியோகம் மனைவி லட்சணமும்கூட!

சில வீடுகளில் கணவன் வேலையிழந்து இருக்கும்போது மனைவி தொடர்ந்து வேலைக்குச் செல்லலாம். உத்தியோகம் புருஷ லட்சணம் என்று காலங்காலமாகச் சொல்லிப் பழகியதால் வேலைக்குப் போவது ஆணுடைய இயல்பு என்ற எண்ணம் இருக்கிறது. இது நம் மரபணுவில் செதுக்கப்பட்ட விஷயம் கிடையாது. செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது தான். கணவன், மனைவி இருவருமே வேட்டைக்குப் போன காலமும் நம் சமூகத்தில் இருந்திருக்கிறது. எல்லாக் காலத்திலும் சாமர்த்தியமான பெண்கள் வேலைக்குச் சென்றுகொண்டுதான் இருந்தார்கள். அதனால் உத்தியோகம் புருஷ லட்சணம் மட்டுமல்ல பெண்களுக்கும் அது லட்சணம்தான். பெண் பறவை இரை தேடிப் போகும்போது ஆண் பறவை எப்படி அடை காக்கிறதோ அதே போல மனித ஆண்களும் தன்னுடைய கூட்டை அடை காத்துப் பராமரிப்பது அவருடைய திறமையைத்தான் காட்டுகிறது. நான் புதிதாக ஒரு வேலையைக் கற்றுக்கொள்கிறேன் என்ற தெளிவுடன் ஆண்கள் இதை அணுகுவது அவசியம். ஏனென்றால், இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு மனிதர்கள் ஒரு துறையில் மட்டும் புத்திசாலியாக இருந்தால் ஜெயிக்க முடியாது.

4. சர்வைவல் மோடுக்கு வாருங்கள்!

வாழ்க்கை சொகுசாக இருக்கும்போது சௌகர்யங்கள் குறித்து யோசிக்கலாம். அன்றாட உணவுக்கே பிரச்னை வரும்போது சர்வைவல் மோடுக்கு வர வேண்டியது அவசியம். `அடுத்த வேளைச் சாப்பாடு எங்கே கிடைக்கும், எப்படிக் கிடைக்கும்’ என்று புலியையும் சிங்கத்தையும்போல நாமும் யோசிக்க வேண்டும். மனித மூளையில் இருக்கிற ஒரு சிக்கல் என்னவென்றால், நம்முடைய சிந்தனைகளில் நாமே சிக்கிக் கொள்வோம். அப்படிச் சிந்திக்காமல் இன்றைக்கு என்ன செய்வது, நாளைக்கு என்ன செய்வது என்று பிழைக்கின்ற வழியைப் பார்ப்பது இந்தப் பெருந்தொற்று காலத்துக்கு ஏற்றது.

5. இது அடிக்ட் ஆகிற நேரமும்கூட...

வெளியிலிருந்து மிகப்பெரிய மன அழுத்தம் ஒன்று மனிதர்களுக்குள் வரும்போது, மனசு இளைப்பாறுவதற்காக மது, மொபைல் கேம்ஸ், குடும்பத்துக்கு அப்பாலான உறவுகள் என்று வேறு விஷயங்களில் ஈடுபட ஆரம்பிக்கலாம். அப்படி ஆரம்பித்தால் எச்சரிக்கையுடன் இருந்து, அதிலிருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள். நான் செய்வதுதான் சரி என்று உங்களை நியாயப்படுத்துவதற்கு முயற்சி செய்யாதீர்கள். ஒரு கூடு உங்களுக்கு அமைந்திருக்கிறது. அந்தக் கூட்டுக்கு நீங்கள் விசுவாசமாக இருப்பது முக்கியம். அப்படி இருந்தால்தான் ஒரு தலைமுறையின் தவறு அடுத்த தலைமுறையை பாதிக்காமல் இருக்கும்.

6. குழந்தைகளிடம் சொல்லிவிடுங்கள்!

இரண்டு பேருமே வேலையிழந்த நிலையில் உண்மை நிலையைக் குழந்தைகளிடம் சொல்லிவிடுங்கள். புத்திதெரிந்த குழந்தைகளிடம் `நாங்க நல்லாதான் இருக்கோம்’ என்ற பொய்யான உணர்வை ஏற்படுத்தவேண்டிய அவசியமில்லை. வெளிப்படையாகச் சொல்வதன் மூலம் `வாழ்க்கைன்னா கஷ்டம் வரும். ஆனா, அப்பாவும் அம்மாவும் பாரு எப்படி ஒருத்தரையொருத்தர் விட்டுக்கொடுக்காம வாழறோம். அதுலேருந்து மீண்டு வர சகல போராட்டமும் நடத்துறோம்’ என்பதை உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்துவதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

7. உதவி கேட்பதே சர்வைவல் உத்தி!

சிங்கிள் பேரன்ட் மட்டும் இருக்கிற வீடுகளில், வேலையிழப்பு இக்கட்டான சூழ்நிலைதான். அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டிய கடமை இந்தச் சமூகத்துக்கு இருக்கிறது. உதவ எல்லோருக்குமே ஒரு சர்வைவல் உத்தியைச் சொல்லித்தர விரும்புகிறேன். `எல்லாத்தையும் நானே சமாளிச்சுப்பேன்’ என்பது ஸ்மார்ட் கிடையாது. `என்னால தனியா சமாளிக்க முடியலை’, `தூக்கம் வரலை’, `பசி எடுக்கலை’, ‘பதற்றமாக இருக்கு’, `வயிறு கலங்குது’, ‘கை நடுங்குது’ என்றெல்லாம் இருந்தால், உடனே மற்றவர்களிடம் உதவி கேட்டுவிடுங்கள். தனக்குத் தேவையான உதவியை உடனே கேட்பவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். உதவிகேட்பது என்பது மிக மிக முக்கியமான சர்வைவல் உத்தி. நாம் எல்லாருமே ஒருவரையொருவர் சார்ந்து வாழ்பவர்கள்தாம். கேட்டால், செய்வார்கள். இந்தத் துயர்மிகுந்த காலத்திலிருந்து மீண்டு வருவதற்கான வழி, நாம் ஒருவருக்கொருவர் உதவுவதும் அதை வெட்கப்படாமல் கேட்பதும்தான்!