அன்பு டாக்டர் யாமினிக்கு, இந்த மினியின் இனிய பொங்கல் வாழ்த்துகள்!’’

‘‘உனக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் மினி. எப்பவும் இப்படி சிரிச்சுகிட்டே இரு!’’

‘‘நன்றி டாக்டர். சிறப்பான இந்த நாள்ல, எனக்கு ஸ்பெஷலா எதைப் பத்தி சொல்லித் தரப் போறீங்க டாக்டர்?’’

‘‘மினி, இன்னைக்கு நம்ம பேசப் போற விஷயம் போகி ஸ்பெஷல்.’’

‘‘புரியலையே டாக்டர்!’’

‘‘போகிப் பண்டிகையோட ஸ்பெஷல் என்ன மினி?’’

‘‘ம்ம்ம்... பழையன கழிதல், புதியன புகுதல்.”

‘‘கரெக்ட். அந்தப் புதுப்பித்தல் அப்படிங்குறது புறத்தில் மட்டுமல்லாமல், அகத்திலும் நிகழவேண்டும் இல்லையா?’’

‘‘ரொம்ப சரி டாக்டர். அதுக்கு என்ன செய்யணும்?’’

‘‘ஒரு பொருளோ, விஷயமோ நமக்குத் தேவையில்லாதது, கெடுதல் விளைவிக்கக்கூடியதுன்னு தெரிஞ்சா, நாம என்ன செய்யுறோம்? அதை நம்முடைய வாழ்வில் இருந்து விலக்கிடுறோம். ஆனா மினி, அதுவே நமக்குத் தெரியாம நமக்குள்ளே இருந்தா? அதுவும் அது நம்ம மனசுக்குள்ளேயே நிகழ்ந்தா? இதைத்தான் உளவியல் மருத்துவத்துல ‘சிந்தனைத் திரிபுகள்’னு (Cognitive Distortions) சொல்றோம். இன்னைக்கு அதைப் பத்திதான் பாக்கப் போறோம் மினி. ‘எண்ணம்போல வாழ்க்கை’னு எல்லோரும் சொல்றாங்க இல்லையா, நம்மோட அந்த எண்ணங்களைப் பற்றி, சிந்தனையைப் பற்றித்தான் இன்னைக்குப் பேசப் போறேன்.’’

‘‘சூப்பர் டாக்டர். எனக்குத் தெரிஞ்ச பல சாதனையாளர்கள் இதைச் சொல்லிக் கேட்டிருக்கேன். எண்ணங்கள்தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்குதுன்னு நம்புறேன். அந்தச் சிந்தனைகளைப் பற்றி சரியான புரிதலைக் கொடுக்கப் போறீங்க. ஆர்வமா இருக்கு. சொல்லுங்க!’’

‘‘சொல்றேன். நம்ம மனசு பொதுவா எப்படிச் சிந்திக்கும்னு சொல்றேன். அதாவது ஒரு விஷயம் நடக்கும்போது, நம்ம மனசு ‘இது இதனால் நடந்தது', ‘அது அப்படித்தான் இருக்கும்' இப்படி சில எண்ணங்களை உருவாக்கிடும். இப்படி அனுமானங்களா மனசு ஏற்படுத்திக்குற கனெக்ஷன் உண்மைக்கு அப்பாற்பட்டதா இருக்கும். ஆனா, ‘இந்த எண்ணங்கள் பிழையானது’ன்னு பெரும்பாலும் நமக்குத் தெரியுறதில்ல. நீயே சொல்லு மினி, நம்ம சிந்தனைகளை நம்பாம நாம வேற எதை நம்புவோம்?’’

‘‘சரிதான் டாக்டர். பெரும்பாலும் எல்லோரும் தங்கள் சிந்தனைகளை நம்பித்தான் பல விஷயங்களைச் செய்யுறாங்க. அது தப்பு ஒண்ணும் இல்லையே!’’

‘‘தப்பு இல்லை மினி. அப்படி நாம நம்புற சிந்தனைகளில் சரியான சிந்தனை எது, சிந்தனைத் திரிபு எதுன்னு தெளிவான புரிதல் இருந்துட்டா, எதுவும் தப்பாகாது.’’

‘‘ஆமாம் டாக்டர். அப்போ சிந்தனைத் திரிபுனா என்ன, அதன் பின்னாடி இருக்கிற உளவியல் என்னன்னு சொல்லுங்களேன்.’’

‘‘அதாவது மினி, முழுமை பெறாமல் இருக்கிற எந்த ஒரு விஷயத்தையும் மனித மூளையினால பொறுத்துக்க முடியாது. அதை எப்படியாவது முழுமையாக்கிடணும்னு படபடக்கும். இதுக்கு Gestalt psychologyன்னு பேரு. அதாவது கோடிட்ட இடங்கள்ல தப்பான விடை எழுதி நிரப்புற மாதிரி, பல சமயங்கள்ல நம்ம மனசு நம்மை அறியாமலேயே பிழையான எண்ணங்களைக் கொண்டு நிரப்பிடும். இதை முதலிலேயே அடையாளம் காணாம விட்டுட்டா, அந்தப் பிழையான அனுமானங்கள் வலுவடையும். எதிர்மறையாக சிந்திக்கும் நபர்களா அது நம்மை மாத்திடுற அபாயம் இருக்கு. இந்த மாதிரியான தவறான அனுமானங்கள் செய்யற பழக்கத்துக்கு யாருமே விதிவிலக்கில்ல மினி. இதை அடையாளம் கண்டு, சரி செய்யாம விடுறவங்களுக்கு மன வருத்த நோய், உறவுச்சிக்கல்கள், போதை அடிமைத்தனம் இதெல்லாம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கு.’’

‘‘டாக்டர், இதற்கு உதாரணம் சொல்லுங்களேன்...’’

‘‘ம்ம்... ஒரு உவமை சொல்றேன், உனக்கு நல்லா புரியும். இந்த உலகம் ஒரு ரேடியோ ஸ்டேஷன், நம்ம மனம்தான் ரேடியோன்னு நினைச்சுக்கோ மினி. ரேடியோல தெளிவான ஒலி கேட்கலைன்னு வெச்சுக்கோ, அதுக்கு ரெண்டு காரணங்கள் இருக்கலாம். ஒண்ணு, ஸ்டேஷன்ல இருந்து நல்ல சிக்னல் வராம இருக்கலாம். இல்ல, நம்ம ரேடியோவ சரியா டியூன் பண்ணாம இருக்கலாம். பல சமயங்கள்ல இரண்டாவது காரணம்தான் உண்மையா இருக்கும். ரேடியோவ நாம சரியா டியூன் பண்ணுனா, கரகரப்பான இரைச்சல் மறைஞ்சு தெளிவான ஒலியும், இதமான இசையும் கேட்கும். நம்மைச் சுத்தி இருக்கற உலகத்துல நேர்மறையான விஷயங்கள், எதிர்மறையான விஷயங்கள், நியூட்ரலான விஷயங்கள்னு பலதும் நடந்துக்கிட்டே இருக்கு மினி. அவற்றை நாம எப்படிப் புரிஞ்சுக்கிட்டு உள்வாங்குறோம் அப்படிங்குறத பொருத்துதான் நம்ம மனநிலையும், உணர்ச்சிகளும் அமையும்.’’

‘‘நாம கேட்கப் போறதும் சோகப் பாட்டா, குத்துப் பாட்டானு முடிவு பண்ற ஆப்ஷன் நம்ம கையில இருக்குனு சொல்றீங்க. சூப்பர் டாக்டர். இந்த சிந்தனைத் திரிபுக்கு தீர்வு என்ன?’’

‘‘அடடா... இப்படி அவசரப்பட்டா எப்படி மினி? இந்த சிந்தனைத் திரிபுகளை சரிபண்ண, உலகம் முழுக்க இருக்கிற உளவியல் நிபுணர்கள் ‘cognitive behavior therapy' அப்படிங்குற நல்ல பயனளிக்கக்கூடிய சிகிச்சை முறையைப் பயன்படுத்தறாங்க. புகழ்பெற்ற இந்த உளவியல் சிகிச்சைக்குப் பெரும் பங்களித்த உளவியல் நிபுணர்கள் ஆரோன் பெக் மற்றும் டேவிட் பர்ன்ஸ். இவங்க ஆராய்ச்சியின் மூலமா ரொம்பப் பரவலா காணப்படுற சில திரிபுகளைப் பட்டியலிட்டு இருக்காங்க. அதுல அஞ்சு வகைப்பாடுகள் பத்தி இன்னைக்குப் பேசுவோம். அந்த வகைப்பாடுகள், அதற்கான தீர்வுகள் பத்தி விளக்கமா உதாரணத்தோட சொல்றேன்...’’

‘‘வாவ் டாக்டர். ஐ ஆம் வெய்ட்டிங்.’’

1. கறுப்பு வெள்ளைச் சிந்தனை

(Black and White Thinking)

சினிமாவுல வர்ற ஹீரோவையும் வில்லனையும் போல எல்லாத்தையும் துருவப்படுத்திப் பாக்குறது (Polarized thinking)... ஆபீஸ்ல சக ஊழியர்கள்கிட்ட பழகும்போது ‘இவங்க நல்லவங்க, இவங்க கெட்டவங்க’ன்னு முன்முடிவு நிர்ணயிச்சுட்டுப் பழகுறது... ஒருமுறை தோல்விய சந்திச்சா, ‘நான் வாழ்க்கைல முழுமையா தோத்துட்டேன்’னு நம்புறது...இதையெல்லாம் இந்த வகையில சொல்லலாம். நன்மை, தீமை, வெற்றி, தோல்வி எல்லாமே கலந்ததுதான் வாழ்க்கை. ஆனா ஏதோ ஒண்ணுதான் இருக்குன்னு இதைக் கறுப்பு வெள்ளை ஆகிய இரண்டு அதீதங்களில் அடைக்க முற்படும்போது, வளர்ச்சி பாதிப்படையுது. இதற்குத் தீர்வு என்ன தெரியுமா? You have to learn to see the GREY in betweens. கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடைப்பட்ட சாம்பல் நிறத்தில் வாழ்வையும் மனிதத்தையும் பார்க்கப் பழகிக்கணும். இந்தச் சிந்தனைத் திரிபோட தொடர்புடையதுதான் ‘All or nothing’ thinking. தமிழ்ல ‘வெச்சா குடுமி, செரச்சா மொட்டை’னு சொல்லுவோமில்ல... அது. ‘செஞ்சா முழுமையா செய்வேன், இல்லன்னா செய்யவே மாட்டேன்’னு சொல்ற மனநிலை. உதாரணமா, டயட்ல இருக்கிற ஒரு பொண்ணு ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டான்னு வை. உடனே, ‘அச்சச்சோ, நான் டயட்ட பிரேக் பண்ணிட்டேன்’னு முழு ஐஸ்கிரீமையும் சாப்பிடுறது. இது தப்புன்னு புரிஞ்சுக்கிட்டாலே, ‘இது இல்லைன்னா அது’ன்னு எக்ஸ்ட்ரீம்ஸ்ல மாட்டிக்காம இருப்போம்.’’

‘‘சரிதான் டாக்டர். எதுலயுமே extreme நல்லதில்லை. நீங்க மேல சொல்லுங்க!’’

2 . மிகையாகப் பொதுமைப்படுத்துதல்

(Over generalizing)

ஒரு நிகழ்வையே வாழ்வின் மொத்தத்திற்கும் பொதுமைப்படுத்துறது. ஒருநாள் தன் மகனோ, மகளோ தாமதமா வீட்டுக்கு வந்தா, ‘இவங்க எப்பவுமே இப்படித்தான்’னு முடிவே பண்ணிடுறது... கணக்குல கம்மியா மார்க் வாங்குன மாணவன் ‘எனக்குக் கணக்கே வராது’ன்னு தீர்மானிக்குறது... இதெல்லாம்தான் மிகையாகப் பொதுமைப்படுத்துறது. ஒருமுறை ஏற்பட்ட நிகழ்வை வெச்சு ‘அதேதான் மீண்டும் மீண்டும் நடக்கும்’ அப்படிங்குற அனுமானத்தைக் கைவிடறதுதான் இதற்குத் தீர்வு. எந்த நினைப்பு எழுந்தாலும், ‘இதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? அரைகுறை ஆதாரங்களை வெச்சுதான் இந்தத் தீர்மானத்துக்கு வந்தேனா’ன்னு உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கணும். இதற்கு மாற்றா, ‘எனக்குக் கிடைச்ச அனுபவங்களிலிருந்து கத்துக்கப் போறேன். நான் இப்படித்தான்னு எப்பவுமே தீர்மானிக்க மாட்டேன்’னு நேர்மறை எண்ணத்தை வளத்துக்கணும்.’’

‘‘இந்தத் தப்பை நான்கூட நிறைய பண்றேன் டாக்டர். இனிமே கவனமா இருக்கேன். நீங்க அடுத்தது சொல்லுங்க...’’

3. சமநிலையில் பார்ப்பதைத் தவிர்த்தல்

Mental Filter (Selective Abstraction)

அதாவது ஒரு சம்பவம் குறித்த பல நேர்மறை விஷயங்களை ஒட்டுமொத்தமா ஒதுக்கிட்டு, நடந்த ஒரே ஓர் எதிர்மறை விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துறது. உதாரணமா, அலுவலகத்துல ஒரு நல்ல விஷயத்துக்கு எல்லாரும் உங்கள பாராட்டுவாங்க. ஆனா அதையெல்லாம் விட்டுட்டு, யாரோ ஒருத்தர் சொன்ன எதிர்மறை விமர்சனத்தை மட்டுமே யோசனை செய்யுறது. இதுல இன்னொரு கோணமும் இருக்கு. அதாவது நமக்கு ரொம்பப் பிடிச்ச ஸ்வீட் சாப்பிடும்போது, அதோட சுவையை மட்டுமே கவனத்துல எடுத்துக்கிட்டு, அதனால் ஏற்படுற உடல்நலக் கோளாறுகளைச் சிந்திக்காம விடுறது. நேர்மறை விஷயங்கள், எதிர்மறை விஷயங்கள் இரண்டையும் சமநிலையோட பார்க்க நாம கத்துக்கணும் மினி. அப்போதான் இதைச் சரிசெய்ய முடியும். அப்போதான் தோல்விகளில் மட்டுமே கவனம் செலுத்தி வெற்றிகளை நிராகரிக்கற தப்பைச் செய்யாம இருப்போம்.’’

‘‘ம்ம்ம்... நாலாவது விஷயம் டாக்டர்?”

4. உண்மைகளைத் தகுதிநீக்கம் செய்தல்

(Disqualifying the facts)

யாராவது ஒருத்தர் உண்மையாவே புகழ்ந்தாக்கூட, ‘ஏதோ நம்மை குஷியாக்கறதுக்காகச் சொன்னாங்க. அதுல உண்மையில்லை’ன்னு நெனச்சுக்கறது... கடுமையான போட்டி இருக்கிற ஒரு நேர்காணல்ல வெற்றி அடைஞ்சாலும், ‘இதுல என்ன இருக்கு, யார் வந்திருந்தாலும் வேலை கிடைச்சிருக்கும்’னு நம்முடைய தகுதியையே நிராகரிக்கிறது... இதெல்லாம்தான் உண்மையைத் தகுதிநீக்கம் பண்றது. சுருக்கமாச் சொல்லணும்னா, என்ன பாசிட்டிவான விஷயம் நடந்தாலும் ‘அது ஏதோ எதேச்சையாதான் நடந்தது’ன்னு சொல்றது, நினைக்குறது. நம்மீது நமக்கிருக்கிற குறைவான மதிப்பீட்டின் பிரதிபலிப்புதான் இது. அடுத்தமுறை யாராவது நல்லது சொன்னா, ‘அது உண்மையில்லை’ன்னு சொல்ற மனசை அமைதிப்படுத்திட்டு, சின்னதா சிரிச்சுட்டு ஒரு நன்றி சொல்லணும். அங்க இருந்துதான் இந்தப் பிரச்னைக்கான தீர்வு தொடங்குது.’’

‘‘சின்னச் சின்ன விஷயங்கள்கூட பெரிய அர்த்தம் வாய்ந்தவைதான் இல்லையா டாக்டர். கொஞ்சம் புரிதல் இருந்தா, நம்ம மனநலன்ல நிறைய மாற்றங்களைக் கொண்டுவரமுடியும்னு தெரியுது. ஐந்தாவது வகை என்னன்னு சொல்லுங்க...’’

5 . எதிர்மறை முடிவுகளுக்கு வருதல்

Jumping to Conclusions

அதாவது, போதுமான சான்றுகள் இல்லாமலேயே எதிர்மறையான தீர்மானங்களுக்கு வந்துவிடுதல். இதுல ரெண்டு வகை இருக்கு மினி.

ஒண்ணு, மைண்ட் ரீடிங். அதாவது, அடுத்தவங்க என்னைப் பத்தி மோசமாதான் நினைப்பாங்கன்னு இவங்களாவே தவறான முடிவுக்கு வர்றது. உதாரணமா, ஒருத்தர் தன்கிட்ட ஒருநாள் முகம் கொடுத்துப் பேசலன்னா, அவர் என்னைப் பத்தி மட்டமா ஏதோ நினைக்குறார்னு யோசிக்குறது.

ரெண்டாவது விஷயம், குறி சொல்றது. ‘கண்டிப்பா எனக்கு இந்த வேலை கிடைக்காது’ அப்படிங்குற மாதிரி முடிவு பண்ணிக்கிட்டு அந்த வேலைக்கு முயற்சி பண்றது. இப்படி ஒரு விஷயத்தைப் பத்தி சரியா ஆய்வுசெய்து சிந்திக்காம, ‘இது கண்டிப்பா தவறாதான் இருக்கும்’னு முன்கூட்டியே தீர்மானம் பண்ணிடுறது. இதற்கு என்ன தீர்வு தெரியுமா? குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை சாட்சிகள் போதவில்லை அப்படிங்குற சந்தேகத்தின் பலனைக் கொடுத்து விடுவிக்குற மாதிரி, ‘இந்த எண்ணங்களை ஆதாரமற்றவை’ன்னு சந்தேகத்தின் பலனாகப் புறம்தள்ளப் பழகணும். நான் சொன்னதெல்லாம் புரிஞ்சதா மினி?’’

‘‘நீங்க சொன்னதையெல்லாம் கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் புரிஞ்சிக்கிட்டு உள்வாங்கணும். அப்போதான் வாழ்க்கையில அதோட பலன் தெரியும். நிறைய நேரம் எடுத்து, நீங்க சொன்னதை எல்லாம் அசை போட்டுப் புரிஞ்சுக்கிறேன் டாக்டர். ரொம்ப நன்றி."

‘‘சந்தோஷம் மினி. உடம்பையும் மனசையும் ஆரோக்கியமா வெச்சுக்கிட்டு இந்தப் பண்டிகையைக் கொண்டாடு. அடுத்த வாரம் சந்திப்போம்.’’

‘‘கண்டிப்பா. பை டாக்டர்!’’

(மினி-மன உரையாடல் தொடரும்)