Published:Updated:

முதுமையடைவது ஏன்?|முதுமை எனும் பூங்காற்று #MyVikatan

ஒரு பெண் பூப்படையும் வயது தள்ளிப்போனால் அவள் வாழும் வயதும் அதிகரிக்கும் என்ற ஒரு கருத்து உண்டு.

முதுமையடைவது ஏன்?|முதுமை எனும் பூங்காற்று #MyVikatan

ஒரு பெண் பூப்படையும் வயது தள்ளிப்போனால் அவள் வாழும் வயதும் அதிகரிக்கும் என்ற ஒரு கருத்து உண்டு.

Published:Updated:

இளமை - முதுமை, இரண்டுக்குே மூன்று எழுத்துகள்தாம். ஆனால், அப்பருவங்களில் ஏற்படும் மாற்றங்களும் நிகழ்வுகளும் விளைவுகளும்தாம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் !

ஒரு குழந்தை பிறக்கும் பொழுது எல்லோருக்கும் மகிழ்ச்சி. அது ஒரு புதிய வரவு. நம்பிக்கையின் எதிர்காலம். ஜொலிக்கும் வைரக்கல். உயர்கல்வி, உத்தியோகம், நல்ல வாழ்க்கை என்ற எத்தனையோ எதிர்பார்ப்புகள்.

முதுமைப் பருவமோ எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி வாழ்க்கையின் கடைசி கட்டத்திற்கு வந்த நிலை. முதுமை ஒரு இலையுதிர் காலம். இவர்கள் மரணத்தின் சாயல், வாழ்க்கையின் அச்சம் என்ற பலர் வர்ணிக்கின்றார்கள்.

முதுமை என்பது நாம் பிறக்கும் பொழுதே தொடங்கி விடுகிறது. நம்மை அறியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக முதுமை அடையத் தொடங்குகிறோம். முதுமையின் முடிவு மரணம். இது எல்லோரும் அறிந்ததே.

எல்லோருக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் மரணத்தை யார் வரவேற்கிறார்கள்? முதியவர்கள் வாழ்க்கையில் எல்லாமே இறந்த காலங்கள். மரணத்தை நோக்கி அழைத்துச் செல்லும் முதுமையை வெறுக்கிறோம். ஆனால், முதுமை நம்மை வென்று விடுகிறது, மரணத்தின் மூலமாக... இது முதுமையின் ஒரு பக்கம்.

முதுமை என்பது உடலின் வளர்ச்சி மட்டுமல்ல, அறிவின் வளர்ச்சி, அனுபவத்தின் வளரச்சி, பொறுப்புணர்வு ஆகியவை அல்ங்கியதே முதுமைப் பருவம். கடந்த பல ஆண்டுகளாக குடும்பத்துக்காக உழைத்து எல்லோரையும் கரை சேர்த்துவிட்டு இளைப்பாறும் இனிய காலம் அது. தனிமையில் இனிமை காணவும், பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், பல இடங்களுக்குப் போய்வரவும், கிடைக்கப் பெற்ற பொன்னான பருவம்.

ஆகையால், முதுமைப் பருவம் என்பது நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல! ஒரு பக்கம் வயதின் முதிர்ச்சி, அனுபவம், அறிவு. மறுபக்கமோ தள்ளாமை, கொடிய நோய், வறுமை, தனிமை, மரணபயம் போன்றவை.

Ageing
Ageing
நாம் ஏன் முதுமை அடைகிறோம்? என்றுமே இளமையுடன் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்? ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் அதற்கு முடிவு என்று ஒன்று உண்டு. ஆகையால், இளமைக்கு முதுமை ஒரு முடிவு!

முதுமையிலும் இளமையாக இருக்க முடியுமா? பலர் 70, 80 வயதிலும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். சிலர் இளமையிலேயே பல நாய்களின் இருப்பிடமாக வாழந்து மடிகிறார்கள். இதற்கு என்ன காரணம்? முதுமையைத் தடுக்கமுடியதாது என்பது உறுதி. ஆனால் அதைத் தள்ளிப்போட்டு முதுமையிலும் இளமையாக வாழ என்ன வழி?

முதுமை என்றால் என்ன?

முதுமை என்பது ஒரு பருவமே. முதுமையே ஒரு நோயல்ல. ஆனால், முதுமையில் பல நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமாகின்றன.

நாம் ஏன் முதுமை அடைகிறோம்? என்றுமே இளமையுடன் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்?

ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் அதற்கு முடிவு என்று ஒன்று உண்டு. ஆகையால் இளமைக்கு முதுமை ஒரு முடிவு.

முதுமை அடைவதற்கு என்ன காரணங்கள் என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்னமும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. முதுமை அடைய பல காரணங்களைக் கூறுகிறார்கள். அவற்றில் ஒரு சில:

• பாரம்பரியம் – முன்னோர் நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்தால் அவர்கள் சந்ததியினரும் அவ்வாறே இருப்பார்கள்.

• வயது ஆக ஆக உடலில் உள்ள முக்கிய உயிர் அணுக்கள் உற்பத்தி ஆகுதல்.

• திறனற்ற உயிரணுக்கள் உற்பத்தி ஆகுதல்.

• உயிரணுக்கள் பெருகி வரும் தன்மை குறைவது.

• கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்கி விடுதல்.

ageing
ageing
முதுமையில் பல மாற்றங்கள் ஏற்படினும், வாழ்க்கையைப் பக்குவமாக (balanced life) அமைத்துக்கொண்டால் இறுதி வரை இன்பம் காணலாம்!

• ஃப்ரிரேடிகல்ஸ் (Freeradicals) என்ற திரவம் உடலில் அதிகம் சேர்ந்து மற்ற திசுக்கள் அழித்தல்.

• உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன் (Growth hormone) குறைதல்.

• நமது மூளைப்பகுதியிலுள்ள பிட்யூட்ரி என்னும் நாளமில்லா சுரப்பி Killer hormone எனும் திரவத்தைச் சுரக்கிறது. இந்த திரவம், ஒரு பெண் பூப்பெய்தும் பருவத்தில் சுரக்க ஆரம்பிக்கிறது. ஆகையால், ஒரு பெண் பூப்படையும் வயது தள்ளிப்போனால் அவள் வாழும் வயதும் அதிகரிக்கும் என்ற ஒரு கருத்து உண்டு.

• தலையிலுள்ள மூளைப்பகுதியில் பீனியல் எனும் சுரப்பி Melotinin எனும் திரவத்தைச் சுரக்கிறது. இளமையைப் பாதுகாக்க இத்திரவம் மிகவும் அவசியம். ஆனால் ஒருவர் 25 வயதை அடையும்போது இத்திரவம் குறைகிறது. ஆகையால், முதுமை அப்போதே தொடங்க ஆரம்பித்து விடுகிறது.

இவ்வுடல் மாற்றங்கள் காலத்தால் ஏற்படுவது என்றாலும், முதுமை அடைந்தவர்க்கெல்லாம் இம்மாற்றங்கள் ஏற்படுவதில்லை. சிலருக்குச் சில மாற்றங்களே நிகழும்; மேற்கண்ட மாற்றங்கள் முதுமையில் ஏற்படினும், வாழ்க்கையைப் பக்குவமாக (balanced life) அமைத்துக்கொண்டால் இறுதி வரை இன்பம் காணலாம்!

- பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

முதியோர் நல மருத்துவர்

டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை-600 017