Published:Updated:

`கையில் பணம் இருந்தால் ஆயுள் கூடுமா...!'- என்ன சொல்கிறது ஆய்வு முடிவுகள்?

பணம்
பணம்

`மனநிம்மதிக்குக் காரணமான பணம், நாம் வாழும் வருடங்கள் அதிகரிக்கவும் காரணமாக அமைகிறது' - ஆய்வின் முடிவு.

உடல்நலம் பேண பல முயற்சிகள் எடுக்கிறோம். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா என மெனக்கெடுகிறோம். எல்லா முயற்சிகளுக்கும் ஒற்றைக் காரணம், நோயின்றி நீண்ட நாள்கள் வாழ வேண்டும் என்ற விருப்பமே. ஆனால் நீண்ட நாள்கள் வாழ உடல் நலம் மட்டுமல்ல, பண நலமும் தேவை என்று கூறுகிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

'பணப் பிரச்னை இல்லை என்றாலே முக்கால்வாசி பிரச்னைகள் குறைந்ததுபோல்தான் உணர்கிறார்கள். ஆக, நம் மனநிம்மதிக்குக் காரணமாக இருக்கும் பணம், நம் ஆயுளை அதிகரிக்கக் காரணமாக அமைகிறது' என்று கூறுகிறது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ட்ரான்ஸ் அட்லான்டிக் ஆய்வின் முடிவு.

எங்கே ரகசியம் காப்பது; தவிர்ப்பது... பணத்தைப் பிறரிடம் பகிர எது லிமிட்? - உளவியல் விளக்கம்
பணம்
பணம்

முதுமையில் ஆரோக்கியம் குறைவதற்கான காரணத்தை சமுதாயம் மற்றும் பொருளாதாரக் காரணங்களின் அடிப்படையில், 10 வருடங்களாக ஆய்வு மேற்கொண்டு கண்டறிய முற்பட்டது, லண்டன் பல்கலைக்கழகம். அதில், ஆரோக்கிய வாழ்க்கையில் பொருளாதாரம் பெரும் பங்கு வகிக்கிறது என்று தெரியவந்துள்ளது.

ஒருவரின் வாழ்நாள் நீட்டிப்பை நிர்ணயிப்பது, அவரின் வாழ்க்கைத் தரம். அந்த வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பது, பொருளாதாரம். உடல் உபாதைகள் இன்றி நல்ல உடல் நலம், மன நலத்துடன் ஒரு மனிதனின் வாழ்வு அமையுமானால், அவரது ஆயுள் கூடும். தரமான மற்றும் அதிக நாள்கள் வாழ, ஆரோக்கியத்துக்காக செலவழிக்கத் தேவையான வருமானம் இருக்க வேண்டும்.

வசதி படைத்தவர்கள், குறைந்த வசதிவாய்ப்பு உள்ளவர்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வசதிபடைத்தவர்கள் தங்களின் 50 வயதுக்குப் பின், கிட்டத்தட்ட 31 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வதாகவும், அதுவே குறைந்த வசதிவாய்ப்புள்ளவர்கள், தங்களது 50 வயதுக்குப் பின் 22 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது. ஆக, பொருளாதாரரீதியாக ஒருவர் நிறைவாக இருந்தால், குறைந்த வசதியுடையவர்களைவிட ஒன்பது வருட காலம் அவரின் வாழ்நாள் அதிகரிக்கக்கூடும்.

பணம்
பணம்
பணம் சம்பாதிக்க 100 பாடங்கள்... வழிகாட்டும் அனுபவங்கள்!

இங்கிலாந்தின் ஆபிஸ் ஃபார் நேஷனல் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (Office for National Statistics - ONS), '65 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களில், பெண்களைவிட ஆண்கள் அதிக வாழ்நாள் நீட்டிப்பு பெறுகிறார்கள். என்றாலும், இருபாலரின் ஆயுட்காலமும் மொத்தத்தில் குறைந்துவருகிறது. தற்போது பிறக்கும் குழந்தைகள், தங்கள் தாத்தா-பாட்டிகளைவிட ஆரோக்கியம் குன்றியவர்களாகவே வளர்கிறார்கள்' என்கிறது.

அடுத்த கட்டுரைக்கு