Published:Updated:

சரிந்த மாஸ்க், சானிட்டைசர் விற்பனை; `அலட்சியம் வேண்டாம்' என எச்சரிக்கும் ICMR மருத்துவர்

உண்மையில் கோவிட்-19 இரண்டாவது அலையின்போதே முகமூடிகள், சானிடைசர்கள் மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களின் விற்பனை முதல் அலையின் போதான விற்பனையில் 50 சதவிகிதமாகக் குறைந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இரண்டாவது அலை குறைந்து வருவதால், கோவிட்-19 மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மற்றும் சானிடைசர்கள், மாஸ்க்குகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் போன்ற பொருள்களின் விற்பனை இந்தியா முழுவதும் சுமார் 90% சரிந்துள்ளது. குறிப்பாக ரெம்டெசிவிர் மருந்துகளின் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளதால், ஏராளமான மருந்துக் குப்பிகள் பயன்ப்டுத்தப்படாமல் காலாவதியாகிவிட்டன.

இந்த ஆண்டு ஜூன் வரை எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி மாஸ்க்குகள் மற்றும் சானிடைசர்களின் விற்பனை சுமார் 40% குறைந்திருந்தன. மகாராஷ்டிராவில் உள்ள ஸ்டாக்கிஸ்ட்டுகளின் 1.5 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் காலாவதியாகிவிட்டன; இந்தியா முழுவதும் 200-க்கும் அதிகமான விநியோகிஸ்தர்கள் ஒரு மாத காலப் பயன்பாட்டுக்கான ரெம்டெசிவிர் மருந்துகளை ஸ்டாக் வைத்திருந்தனர். ஆனால், அவை இப்போது காலாவதியாகிவிட்டன. சில ஸ்டாக்கிஸ்டுகளிடம் 100 முதல் 500 குப்பிகள் வரை இருந்தன. எல்லாமே இப்போது வீணாகிவிட்டன.

COVID-19 screening
COVID-19 screening
AP Photo/Rajanish kakade
Covid Questions: கொரோனா தொற்று குறைகிறது; இன்னும் நான் மாஸ்க் அணியத்தான் வேண்டுமா?

கேரளா போன்ற மாநிலங்களில் ரெம்டெசிவிருக்கு இன்னும் தேவை இருக்கவே செய்கிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் ரெம்டெசிவிர் விற்பனையில் பெரும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இரண்டாவது அலையின் ஆரம்ப நாள்களில், ரெம்டெசிவிர் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. சில நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து பயனளிக்கும் என்று சில ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. அதுவும் இந்த மருந்தின் தேவை குறைவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். இரண்டாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் ரெம்டெசிவிர் மருந்தைத் தேடி மக்கள் கூட்டம் அலைகடலென அலைந்த தருணங்கள் நினைவுக்கு வருகிறதா? அப்படியெனில், இப்போதைய மாற்றத்தின் வீரியத்தை உணர முடியும்!

ரெம்டெசிவிர் மருந்தின் தேவை குறைந்ததில் மகிழ்ச்சி. ஆனால், கோவிட்டிலிருந்து மக்களைக் காக்கும் மாஸ்க்குகள், சானிடைசர்களின் விற்பனை குறைவது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம். ஏனெனில், நாம் இன்னமும் கொரோனாவோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அகில இந்திய மாஸ்க் உற்பத்தியாளர்கள் சங்கமும் விற்பனை குறைந்த வருத்தத்தில்தான் இருக்கிறது. இரண்டாவது அலை குறைந்த பிறகு மாஸ்க்குகளின் விற்பனையில் 90% வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
உண்மையில் கோவிட்-19 இரண்டாவது அலையின்போதே முகமூடிகள், சானிடைசர்கள் மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களின் விற்பனை முதல் அலையின் போதான விற்பனையில் 50 சதவிகிதமாகக் குறைந்தது. ஜூன் மாதத்தில் இரண்டாவது அலையின் பரவல் குறைந்ததால், விற்பனை அளவு மேலும் குறைந்தது. இப்போதோ கோவிட் பாதுகாப்பு பொருள்களைப் பயன்படுத்துவதில் ஓர் அலட்சியமே உருவாகிவிட்டது.

Indians wearing face masks
Indians wearing face masks
AP Photo/Channi Anand
மாஸ்க் அணிவது கொரோனா பாதிப்பை மேலும் மோசமாக்குமா? - பரவும் வாட்ஸ்அப் தகவல்; உண்மை என்ன?

மாஸ்க்குகள் மற்றும் சானிடைசர்களின் விற்பனை குறைந்து வருவது கவலை அளிக்கிறது என்று கூறிய மருத்துவ ஆராய்ச்சிக்கான ஐசிஎம்ஆர் தேசிய பணிக்குழுவைச் சேர்ந்த டாக்டர் சஞ்சய் புஜாரி, ``பொருளாதாரம் மெதுவாகத் திறப்பதால், பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. அவசியமான அனைத்து விதிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ஒருபோதும் மக்கள் தங்கள் பாதுகாப்பை விட்டுவிடக் கூடாது" என்கிறார்.

- எஸ்.சங்கீதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு