Published:Updated:

ஆரோக்கிய விதை: சீட்ஸில் இருக்கிறது சிறப்பு!

ஆரோக்கிய விதை
பிரீமியம் ஸ்டோரி
ஆரோக்கிய விதை

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

ஆரோக்கிய விதை: சீட்ஸில் இருக்கிறது சிறப்பு!

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

Published:Updated:
ஆரோக்கிய விதை
பிரீமியம் ஸ்டோரி
ஆரோக்கிய விதை

சாஹா

சருமத்துக்கு வைட்டமின் சி, கூந்தலுக்கு பயோட்டின், இளமைத் தோற்றத்துக்கு வைட்டமின் ஈ என ஏராளமான சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்பவரா நீங்கள்... தினமும் கொஞ்சம் சீட்ஸ் சாப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினால், செயற்கை சப்ளிமென்ட்டுகளுக்குத் தேவையே இருக்காது. உங்கள் சருமமும் கூந்தலும் பொலிவு பெறும்.

சருமம் மற்றும் கூந்தலின் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் `சீட்ஸ்' எனப்படும் விதைகளுக்கு மிக முக்கியப்பங்கு உண்டு. குறிப்பாக சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் - இந்த நான்கும் தினசரி எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை.

சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு, செலினியம் மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் அதிகம் உள்ளன. ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், பி காம்ப்ளெக்ஸ் மற்றும் மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்துகளும் நிறைந்தவை. மல்ட்டிகிரெயின் பிரெட்டில் சேர்த்தோ அல்லது நியூட்ரிஷனல் பார் வடிவிலோ எடுத்துக்கொள்ளலாம். சருமத்துக்கு மிகவும் நல்லது.

செல்வி ராஜேந்திரன்
செல்வி ராஜேந்திரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூசணி விதைகளில் லினோலெனிக் அமிலம் எனப்படும் ஒமேகா 3 மற்றும் லினோலிக் அமிலம் எனப்படும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. வைட்டமின் சி, ஈ, பீட்டாகரோட்டின், துத்தநாகம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் அதிகம். பூசணி விதைகள் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், ரத்தச் சர்க்கரை அளவு மற்றும் வீக்கத்தைக் குறைப்பவை. சாலட்டில் சேர்த்துச் சாப்பிடலாம்.

ஃபிளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளில் தாவர ஒமேகா கொழுப்பு அமிலம் உள்ளது. இதிலுள்ள லிக்னம்ஸ் எனப்படும் தாவர ஈஸ்ட்ரோஜென், ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் கொண்டது. வைட்டமின் பி, பாஸ்பரஸ் பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்துகளும் உள்ளன. ஆளி விதைகளை தண்ணீருடன் அல்லது பாலுடன் எடுத்துக்கொள்ளலாம். ஆளிவிதை பொடியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். ஆளிவிதை எண்ணெயை சாலட் டிரஸ்ஸிங்கில் சேர்க்கலாம். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். எடைக்குறைப்பும் எளிதாகும்.

சியா விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு, பாஸ்பரஸ், நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளன. தண்ணீரில் ஊறவைத்துக் குடிக்கலாம். சருமம், கூந்தல் இரண்டுக்கும் பாதுகாப்பு.

ஆரோக்கிய விதை: சீட்ஸில் இருக்கிறது சிறப்பு!

ஆரோக்கியமானவை என்பதற்காக அளவுக்கு மீறி எடுத்துக்கொள்வதும் ஆபத்தானது. மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் ஆலோசனையின் பேரில் உங்கள் வயது மற்றும் உடல் ஆரோக்கியநிலையைப் பொறுத்து அவர்கள் பரிந்துரைக்கும் அளவை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism