Published:Updated:

கழிவறை இருக்கையைவிட மோசமானதா ஸ்மார்ட்போன் திரை... ஆய்வுகள் சொல்வது என்ன?

கழிப்பறை இருக்கையை விட மோசமானதா ஸ்மார்ட்ஃபோன் திரை

ஸ்மார்ட்போன் ஸ்க்ரீன்கள் மிகவும் அசுத்தமானவை, இவை கிருமிகளால் நிரம்பியிருப்பதால் சரும பிரச்னைகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றன.

கழிவறை இருக்கைகள் எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள்.. அவற்றைவிட மோசமாக ஸ்மார்ட்போன் திரைகளில் மூன்று மடங்கு கிருமிகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்தை தளமாகக் கொண்ட கேஜெட் காப்பீட்டு வழங்குநரான Insurance2Go மேற்கொண்ட ஆய்வின்படி, மூன்றில் ஒரு பகுதியினர் (35%) தங்கள் ஸ்மார்ட்போன்களை சரியான முறையில் கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்ததில்லை.``சராசரி ஸ்மார்ட்போன் திரையானது கழிவறை இருக்கையைவிட மூன்று மடங்கு அழுக்காக உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

கழிவறை இருக்கையைவிட மோசமானதா ஸ்மார்ட்போன் திரை... ஆய்வுகள் சொல்வது என்ன?

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 20 பேரில் ஒருவர், ஒவ்வோர் ஆறு மாதத்துக்கும் குறைவாகவே செல்போன்களை சுத்தம் செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்விற்காக, ஏரோபிக் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் அச்சு ஆகியவற்றை சோதிக்க ஆராய்ச்சியாளர்கள் ஐபோன் 6, ஒரு சாம்சங் கேலக்ஸி 8 மற்றும் ஒரு கூகுள் பிக்சல் என மூன்று ஸ்மார்ட்போன்களை துடைத்தனர்.

ஸ்மார்ட்போன் ஸ்க்ரீன்கள் மிகவும் அசுத்தமானவை, இவை கிருமிகளால் நிரம்பியிருப்பதால் சரும பிரச்னைகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றன.

ஆய்வில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் தொலைபேசிகளை நீண்ட காலமாக சுத்தம் செய்யவில்லை என்று ஒப்புக் கொண்டனர்.

ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன்கள்

``ஸ்மார்ட்போன்களை நாங்கள் எல்லா இடங்களுக்கும் எங்களுடன் எடுத்துச் செல்கிறோம். எனவே, அவற்றில் கிருமிகள் சேர்வதைத் தவிர்க்க முடியாதது'' என்றும் தெரிவித்துள்ளனர்.

பாக்டீரியா தொற்றைக் குறைக்க கழிவறைக்குச் செல்லும்போது செல்போனை கொண்டு செல்வதைத் தவிருங்கள். 60% தண்ணீர் மற்றும் 40% சுத்தப்படுத்தும் ஆல்கஹால் கரைசல், அல்லது பாதுகாப்பான கிருமி நாசினியைப் பயன்படுத்தி ஒரு மாதத்தில் பலமுறை செல்போனை சுத்தம் செய்யவேண்டும். ஆனால் நேரடியாக இதனை செல்போன் திரைமீது ஸ்பிரே செய்யக்கூடாது. அது திரையை பாதிக்கலாம். 70% கிருமிநாசினிகள் செல்போன் திரைமீது பயன்படுத்த பாதுகாப்பானவை என்று ஆய்வு தெரிவிக்கிறது.