Published:Updated:

லைக்ஸ், ஷேர்ஸ் இல்லையென்றால் பதற்றமா... உங்கள் `reward pathway' பத்திரம்!

லைக்ஸ், ஷேர்ஸ் இல்லையென்றால் பதற்றமா?
லைக்ஸ், ஷேர்ஸ் இல்லையென்றால் பதற்றமா? ( Pixabay )

`இன்டர்நெட் இல்லையென்றால், சிலருக்கு வேறு எந்த வேலையும் செய்யவே முடியாது. இன்னும் சிலரோ, மெசேஜ், அழைப்பு என்று எந்தவிதத் தேவையும் இன்றி, அடிக்கடி போனை எடுத்துப் பார்த்துக்கொள்வார்கள்.’

90'ஸ் கிட் 1 : போனை எடுத்தாலே சும்மா நொய்நொய்னு மெசேஜ் வந்துட்டே இருக்கு.

90'ஸ் கிட் 2 : நம்ம நோக்கியா 1100 மொபைல் இருந்தப்போ வெறும் மெசேஜ் மட்டும்தான் இருந்துச்சு. இப்போ அப்படியா?

90'ஸ் கிட் 3 : சரியா சொன்னடா.. வாட்ஸ் அப், மெஸென்ஜர், ஓலா அது இதுன்னு அத்தனை ஆப்ஸ் இருக்கு. ஒவ்வொரு ஆப்ஸ்ல இருந்தும் ஏகப்பட்ட நோட்டிஃபிகேஷன் மெசேஜஸ் வருது. முடியலடா!

முரட்டு 90'ஸ் கிட் : ஹே ஃபிரெண்ட்ஸ்! நான் DP மாத்தியிருக்கேன். ப்ளீஸ் லைக் பண்ணிடுங்கடா..!

என்று மெசேஜ் வர, அனைவரும் எஸ்கேப்!

Chat
Chat
Pixabay

இப்படி எல்லோருடைய வாழ்க்கையிலும் மொபைல் போனின் பயன்பாடுகளும் அதனால் ஏற்படும் பிரச்னைகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கடிகாரம் முதல் டார்ச் லைட்வரை எல்லா அத்தியாவசிய பொருள்களையும் மொபைல் போன்கள் ஆக்கிரமித்துவிட்டன. அதனால், மொபைல் என்பது ஓர் அத்தியாவசியப் பொருளாகவே மாறிவிட்டது.

அவரவர்களின் எண்ண ஓட்டங்களைப் பதிவிடுவது முதல், தங்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவித்துக்கொண்டிருக்கும் உணர்வுகள்வரை எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் பதிவிடும் மனநிலை இந்தக் காலத்து இளைஞர்களை மட்டுமல்ல 80'ஸ் கிட்ஸையும் தாக்கியிருக்கிறது.

Social media addiction
Social media addiction
Pixabay

'நீ சிட்னில இருந்தா என்ன இல்ல, மதுரைல இருந்தா எனக்கென்ன. அது ஏன் அப்டேட் பண்ணுற?', 'உனக்கு பிரேக்-அப் ஆகுறது உன்னோட பர்சனல். அதை ஏன் ஊருக்கே வெளிச்சம்போட்டுக் காட்டுற?' என வசனங்கள் பேசுவதற்கென்று தனிப் படையும் இந்த வலைதளங்களில்தான் உலவிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இதுபோன்ற செயல்களால் ஏற்படும் பாதிப்புகளை யாரும் பொருட்படுத்துவதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

விதவிதமான புகைப்படங்கள் எடுத்து, அவற்றை உடனுக்குடன் வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்து, அதை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள், எத்தனை பேர் லைக், கமென்ட் செய்திருக்கிறார்கள், யாரெல்லாம் ஷேர் செய்திருக்கிறார்கள், யார் ஸ்டேட்டஸை பார்க்கவேயில்லை போன்றவற்றை தொடர்ந்து பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை, கவுன்ட்லெஸ். இதுபோன்ற மனப்பான்மை இருந்தால், நிச்சயம் இவர்களுக்கு கவுன்சலிங் தேவைப்படும் என்ற எச்சரிக்கையோடு சோஷியல் மீடியா அடிக்‌ஷன் பற்றியும், அதிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பதைப் பற்றியும் நம்மோடு பகிர்ந்துகொண்டார், மனநல மருத்துவர் வசந்த்.

மனநல மருத்துவர் வசந்த்
மனநல மருத்துவர் வசந்த்

"போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களிடம் சென்று, 'இது தவறான செயல், இப்படிச் செய்யக்கூடாது' என்று சொன்னால், நிச்சயம் எதிர்மறையான பதில்களே அவர்களிடமிருந்து வரும். அல்லது 'டைம் பாஸுக்கு பண்ணுறேன், அடிக்‌ஷனெல்லாம் எதுவும் இல்ல' என்று மழுப்புவார்கள். அதேபோலத்தான் இந்த சமூக வலைதள அடிக்‌ஷனும்.

புகைபிடிப்பவர்களின் கையிலிருந்து சிகரெட்டை வாங்கி வீசினால், கோபம், எரிச்சல், ஏக்கம், நடுக்கம் என அவர்களின் மனநிலை வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும். அதேபோன்ற மனநிலைதான், எப்போதும் மொபைலில் மூழ்கியிருப்பவர்களிடமிருந்து போனை வாங்கி வைத்தாலும் ஏற்படும்.

Mobile Addiction
Mobile Addiction
Pixabay

எப்படியாவது மொபைல் போனை எடுத்துவிட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவர்களிடத்தில் இருக்கும். மற்ற தீய பழக்கங்கள் உடலை பாதிக்கின்றன. இதுபோன்ற சமூக வலைதள அடிக்‌ஷன் மனத்தை முற்றிலும் சிதைத்துவிடுகிறது.

"சமூக வலைதளங்களில், தங்களுக்குப் பிடித்த புகைப்படங்கள் முதல் பாடல் வரிகள் வரை அனைத்தையும் பதிவிடுகிறார்கள். அதற்கு லைக்ஸ் வரவில்லை என்றாலோ அல்லது அந்த ஸ்டேட்டஸை யாராவது பார்க்கவில்லை என்றாலோ பதற்றம் அடைகிறார்கள். இதற்கு என்ன காரணம்?"

Brain
Brain
Pixabay

நம் மூளையில், 'ரிவார்டு பாத்வே (Reward Pathway)' என்ற ஒரு சுற்றுப்பாதை இருக்கிறது. இந்தப் பாதை கைதட்டல்கள், பாராட்டுகள் போன்றவற்றின்மூலம் எப்போதும் செயல்பாட்டில் இருக்க உதவுகிறது. இந்தப் பாராட்டு ஒரு 'லைக்' மூலம் சமூக வலைதளங்களில் எளிதில் கிடைக்கிறது. அதனால், ஏராளமானவர்கள் இதற்கு எளிதில் அடிமையாகிவிடுகின்றனர். இதனால்தான் மற்றவர்களிடமிருந்து வரும் பாராட்டுகளைத் தேடிச்செல்ல தொடங்கியிருக்கின்றனர்.

நேரில் பத்து பேர், 'நீங்க நல்லா இருக்கீங்க' என்று பாராட்டுவதற்கும் சமூக வலைதளங்களில் நூறு பேர் லைக்ஸ் போட்டுப் பாராட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா. நூறு பேர் என்பதனால், மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பு அதிகமாகிறது. மேலும், உண்மையான நண்பர்களைவிட விர்ச்சுவல் உலகத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக நண்பர்களின் 'லைக்ஸை' எண்ணுவதற்கே மக்களுக்கு பிடித்திருக்கிறது.

Building Community in Social media
Building Community in Social media
Pixabay

நேரில் சொல்ல முடியாததைக்கூட இந்த சமூக வலைதளங்கள் மூலம் எளிதில் சொல்லிவிடலாம். விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தவும், பாராட்டுகளை அள்ளுவதற்கும் எளிதாக இருப்பதால், இது அனைவரின் பிடித்தமான விஷயமாகவே மாறிவிட்டது. எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் இடத்தில்தான் ஏமாற்றமும் அதிகம் இருக்கும். அதுவே, பதற்ற நிலைக்குத் தள்ளுகிறது.

மற்ற போதைப் பழக்கங்களுக்கும் சமூக வலைதள அடிக்‌ஷனுக்கும் என்ன வித்தியாசம்?

Addiction
Addiction
Pixabay

உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் ஒரு பெண் மது அருந்தினால், நிச்சயம் அவரைப் பற்றி தவறாகப் பேசும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், சமூக வலைதளம் அப்படியல்ல. இதைப் பயன்படுத்தும் நபர்களைப் பற்றி யாரும் தவறாக பேச மாட்டார்கள். ஏனென்றால், சமூகமே ஒட்டுமொத்தமாக இதன் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதனால், இதைனைப் பயன்படுத்துபவர்கள், மற்றவர்களைவிட எப்படியெல்லாம் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம் என்றுதான் யோசிப்பார்கள். இதற்காக, அதிக நேரம் செலவிடுவது நிச்சயம் மனநலனைக் கெடுக்கும்.

இதற்கான தீர்வு என்ன?

Solution for SM addiction
Solution for SM addiction
Pixabay

இன்டர்நெட் இல்லையென்றால், சிலருக்கு வேறு எந்த வேலையும் செய்யவே முடியாது. இன்னும் சிலரோ, மெசேஜ், அழைப்பு என்று எந்தவிதத் தேவையும் இன்றி, அடிக்கடி போனை எடுத்துப் பார்த்துக்கொள்வார்கள். இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால், முதலில் இந்தப் பிரச்னை நமக்கு இருக்கிறது என்பதை அவரவர்கள் உணர வேண்டும். அதை மனதளவில் ஒப்புக்கொண்டு, மனநல மருத்துவரிடம் ஆலோசனை வாங்குவதே சிறந்தது. இதில், எல்லோருடைய பிரச்னைகளும் ஒரேமாதிரி இருக்காது. அதனால் மனம் விட்டுப் பேசி, அதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதுபோன்று, பாதிக்கப்பட்ட ஏராளமானவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் கொடுத்திருக்கிறோம். எனவே, இது கற்பனைக் கதையுமல்ல, இதில் மிகைப்படுத்துவதற்கும் எதுவுமில்லை.

``ஐந்து லட்சம் கொடுத்துவிட்டு அட்வைஸ் பண்ணுங்க"-டிக்டாக் ரவுடி பேபி சூர்யா.. மனநல ஆலோசகரின் அலர்ட்!
அடுத்த கட்டுரைக்கு