பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும். ஆண்களுக்கு வருமா? அதெப்படி வரும் என்கிறீர்களா? ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும். ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கும், அவர்களது மலட்டு தன்மைக்கும் தொடர்பிருக்கலாம் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி குறித்த முடிவுகள் `மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சி' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆண்களிடம் காணப்படும் மலட்டுத்தன்மைக்கும் அவர்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய்க்கும் தொடர்புண்டா என்பதைக் கண்டறிய குறைந்த ஆய்வுகளே இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
லண்டனில் உள்ள `தி இன்ஸ்டிடியூட் ஆஃப் கேன்சர் ரிசர்ச்' அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மலட்டுத்தன்மை உள்ள ஆண்களுக்கும், குழந்தை இல்லாத ஆண்களுக்கும் அவர்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் தாக்கத்துக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்தனர். இந்த ஆய்வில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை சேர்ந்த, 2005 முதல் 2017 வரை மார்பகப் புற்றுநோயால் பாதிப்புக்குளான 80 வயதுக்கு உட்பட்ட 1,998 ஆண்களை நேர்காணல் செய்தனர். இவர்களில் 112 பேர் (5.6 சதவிகிதம்) மலட்டுத் தன்மையுடனும், 383 பேருக்கு (19.2 சதவிகிதம்) குழந்தைகள் இல்லாதததும் தெரிய வந்தது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படாத ஆண்களை ஒப்பிட்டபோது, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு குழந்தைகள் இல்லாதது தெரியவந்துள்ளது. எனவே ஆய்வின் அடிப்படையில், ஆண்களின் மார்பகப் புற்றுநோய்க்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.