சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமத்தில்பட்டால் சருமம் கருத்துவிடும். இதை `ஸ்கின் டேனிங்’ என்கிறோம். இதிலிருந்து தப்பிக்க எஸ்.பி. எஃப் 30 மதிப்புள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்தப் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
சன்ஸ்கிரீன் வாங்கும்போது அவரவர் சருமத்தின் தன்மைக்கேற்ப வாங்க வேண்டும். எஸ்.பி எஃப் மதிப்பு பார்க்க வேண்டும் எனப் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. சன்ஸ்கிரீனின் விலையும் சற்று அதிகம். இதற்குப் பதிலாக, எளிமையான முறையில் வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்யும் வழிகளை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.
தேவையான பொருள்கள்:
பாதாம் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கற்றாழை ஜெல் - 3 டேபிள்ஸ்பூன்
கேரட் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
டிப்ஸ்...
* எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் பாதாம் எண்ணெயின் அளவைக் குறைத்து, கற்றாழை ஜெல்லின் அளவை அதிகரித்துப் பயன்படுத்தலாம்.
* கேரட் துருவலுடன் சிறிதளவு ரோஜா இதழ்கள் சேர்த்துக் கொண்டால் கரும்புள்ளி பிரச்னையும் தீரும்

