Published:Updated:

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை... மருத்துவமனைகள் செய்ய வேண்டியவை என்னென்ன?

Nayanthara - Vignesh Sivan with kids

மூன்று கருமுட்டை அல்லது கருக்களுக்கு மேல் ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தக்கூடாது. ஒரு பெண்ணின் கருப்பையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் அல்லது ஆணின் பால் அணுக்களைச் செலுத்தக்கூடாது.

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை... மருத்துவமனைகள் செய்ய வேண்டியவை என்னென்ன?

மூன்று கருமுட்டை அல்லது கருக்களுக்கு மேல் ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தக்கூடாது. ஒரு பெண்ணின் கருப்பையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் அல்லது ஆணின் பால் அணுக்களைச் செலுத்தக்கூடாது.

Published:Updated:
Nayanthara - Vignesh Sivan with kids

நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட விவகாரத்தில், தம்பதியினர் மீது தவறில்லை என்று சுகாதாரத்துறை அறிக்கை வெளியாகியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் மருத்துவமனை விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

நயன்- விக்கி
நயன்- விக்கி

செயற்கை கருத்தரிப்பில், மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி ஐ.சி.எம்.ஆர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

எந்த மருத்துவமனைகள் பதிவு செய்ய வேண்டும்?

  • சிகிச்சைக்காகப் பால் அணுவை (gamete) தானம் பெறும் அல்லது சேகரிக்கும் மருத்துவமனைகள் 

  • கருமுட்டை மூலம் செயற்கை கருத்தரிப்பில் ஈடுபடும் மருத்துவமனைகள்

  • பால் அணு மற்றும் கரு முட்டைகளைச் சேகரிக்கும் மருத்துவமனைகள் 

  • மனித கருமுட்டைகளை ஆராய்ச்சி செய்யும் மருத்துவமனைகள்

Hospital (Representational Image)
Hospital (Representational Image)

என்ன வசதிகள் வேண்டும்?

  • கருத்தரிப்பு மையம் செயற்கை கருத்தரிப்பில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களைக் கொண்டிருக்க வேண்டும்,

  • செயற்கை கருத்தரிப்பை முறையாகக் கண்காணிக்கும் வசதிகளையும், வழிமுறைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய வசதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

செய்யவேண்டியவை

  • விந்துகளை விந்து வங்கிகளிலிருந்து மட்டுமே பெற வேண்டும். அந்த விந்து யாருடையது என அறிய மருத்துவமனைக்கோ அல்லது தம்பதியினருக்கோ அனுமதி இல்லை. ஆனால், விந்து தானம் தந்தவரின் நிறம், உயரம், எடை போன்றவற்றைத் தெரிந்து கொள்ள முடியும்.

  • சிகிச்சை தொடங்குவதற்கு முன்னால்,  தம்பதியினருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். தம்பதி அந்த ஆலோசனைகளைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

  • கருமுட்டைகள் மற்றும் பால் அணுக்களை உயர்தரத்தில் சேமிக்க மற்றும் செலுத்தப்பட வேண்டும். மேலும், அவற்றை பற்றிய தகவல்களை முறையாகக் கண்காணித்து பதிவு செய்வது மிக அவசியமாகும்.

  • ரத்த சம்பந்தமில்லாத வாடகைத்தாய் மூலம் கருத்தரிக்கச் செய்யும்போது, வாடகைத்தாயின் பெயர், விலாசம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்றிருக்க வேண்டும். மேலும், அவற்றை பற்றிய தகவல்களைப் பதிவு செய்வது மிக அவசியமாகும்.

சிசு (சித்திரிப்பு படம்)
சிசு (சித்திரிப்பு படம்)

செய்யக்கூடாதவை 

  • ஒரே நேரத்தில் மூன்று கருமுட்டை அல்லது கருக்களுக்குமேல் ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தக்கூடாது.

  • ஒரு பெண்ணின் கருப்பையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் அல்லது ஆணின் பால் அணுக்களைச் செலுத்தக்கூடாது.

  • கருத்தரிப்பு மையம் எக்காரணத்தைக் கொண்டும் வாடகைத்தாயின் தகவல்களை வெளியில் சொல்லக்கூடாது.

  • குழந்தை பெறும் தம்பதிகளின் சிகிச்சை தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது. ஏதாவது ஆபத்தான நிலை வந்தால் அவர்களின் நெருக்கமான உறவினர்களிடமும் அல்லது நீதிமன்ற உத்தரவுக்கு மட்டுமே அத்தகவல்களைப் பகிர வேண்டும்.

  • தம்பதிகளின் அனுமதி இல்லாமல், எந்தவொரு செயற்கை கருத்தரிப்பு செயல்முறைகளிலும் ஈடுபடக்கூடாது.

  • எவரிடம் இருந்து கருமுட்டை தானம் பெறப்படுகிறதோ, அவர் அக்குழந்தைக்கு வாடகைத்தாயாக இருக்க முடியாது.

கடந்த ஜனவரி 25-ம் தேதி நிறைவேற்றப் பெற்ற இனப்பெருக்க சிகிச்சை மசோதா குறித்து, கருத்தரிப்பு சிகிச்சை மருத்துவர் பாத்திமா கூறியதாவது:

பாத்திமா
பாத்திமா
  • செயற்கை கருத்தரிப்பில் ஈடுபடும் கருத்தரிப்பு மையம், தேசிய பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அந்த மையம் செயற்கை கருத்தரிப்பிற்கான உரிமம் பெற்று இருக்கவேண்டும்.

  • புதிய மசோதாப்படி, எந்தக் கருத்தரிப்பு மையமும் வணிகரீதியான செயற்கை கருத்தரிப்பில் ஈடுபடக்கூடாது. குழந்தை பெற்றுத்தரும் வாடகைத்தாய், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும்.

  • செயற்கை கருத்தரிப்பிற்காக, குழந்தை பெறும் பெற்றோர்கள் வாடகைத் தாய்க்கு எந்தவித கட்டணமும் செலுத்தக்கூடாது. வேண்டுமானால் மருத்துவமனை செலவுகள் மற்றும் அவர்கள் பணிக்குச் செல்லாமல் இருக்கும் 9 மாதங்களுக்கு முதலீடுகள் செய்யலாம்.

  • கருத்தரிப்பு மையம் வாடகைத் தாயை எக்காரணம் கொண்டும் ஏற்பாடு செய்யக்கூடாது. குழந்தை பெறும் தம்பதிகள்தான் வாடகைத்தாயாக இருக்க விரும்பும் உறவினர்களை அழைத்து வரவேண்டும்.

  • கருத்தரிப்பு மையம் வாடகைத் தாய்க்கு ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும், மனநல பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனைகளில் அவர்கள் குழந்தை பெறுவதற்கு தகுதியானவராக இருந்தால்தான் அவர் வாடகைத் தாய் ஆகமுடியும்.

  • வாடகைத் தாயின் கருப்பையில் கருமுட்டையை செலுத்துவதற்கு முன்பே, அவருக்கும் குழந்தைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும்.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Photo by Omar Lopez on Unsplash
  • செயற்கை கருத்தரிப்பு செயல்முறைக்கு முன்னால் மாஜிஸ்திரேட், மனநல மருத்துவர் உள்ளிட்ட குழுவின் முன் குழந்தைபெறும் தம்பதி,கருத்தரிப்பு மைய பிரதிநிதி, வாடகைத்தாய் ஆகியோர் ஆஜராக வேண்டும். பெற்றோரால் ஏன் குழந்தை பெற முடியாது என்ற காரணத்தை இக்குழுவின் முன்னால் தெரிவிக்க வேண்டும். இந்தக் குழு அனுமதித்தால் மட்டுமே, செயற்கை கருத்தரிப்பில் ஈடுபட முடியும்.

  • வாடகைத் தாய் குறித்த அனைத்து தகவல்களையும் மருத்துவமனை பதிவு செய்திருக்க வேண்டும்.

  • கர்ப்பகாலத்தில் வாடகைத் தாய்க்கு குழந்தை பெறுவதில் விருப்பம் இல்லையென்றால், அவரை குழந்தை பெறுவதில் கட்டாயப்படுத்தக்கூடாது.