Published:Updated:

`மன அழுத்தத்தைப் போக்கும் மேஜிக் காளான்...' - ஆய்வு முடிவு சொல்வதென்ன?

மனச்சோர்வு

மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட 233 பேருக்கு, சிந்தெடிக் காளானின் கூறுகளான சைலோசைபின் செயற்கைப் பதிப்பின் சிங்கிள் டோஸ் செலுத்தப்பட்டு நடைபெற்ற இப்பரிசோதனையில், பாதிக்கப்பட்டவர்களின் மனச்சோர்வு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

`மன அழுத்தத்தைப் போக்கும் மேஜிக் காளான்...' - ஆய்வு முடிவு சொல்வதென்ன?

மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட 233 பேருக்கு, சிந்தெடிக் காளானின் கூறுகளான சைலோசைபின் செயற்கைப் பதிப்பின் சிங்கிள் டோஸ் செலுத்தப்பட்டு நடைபெற்ற இப்பரிசோதனையில், பாதிக்கப்பட்டவர்களின் மனச்சோர்வு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

Published:Updated:
மனச்சோர்வு

உணவுப் பொருள்களில் ஒன்றான காளான், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளைக் கொண்டுள்ளது. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது; உடலில் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இயற்கையாகக் கிடைக்கும் காளானை போல் செயற்கையாகவும் அவை உருவாக்கப்படுகின்றன.

இந்நிலையில், செயற்கையான சிந்தெடிக் மேஜிக் காளான்களால் தீவிர மன அழுத்தம் குறைவதாக, தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியாகி இருக்கும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் 22 இடங்களில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையானது, சைலோசைபினின் செயற்கைப் பதிப்பின் வெவ்வேறு அளவுகள் கொடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட 233 பேருக்கு, சிந்தெடிக் காளானின் கூறுகளான சைலோசைபின் செயற்கைப் பதிப்பின் சிங்கிள் டோஸ் செலுத்தப்பட்டு நடைபெற்ற இப்பரிசோதனையில், பாதிக்கப்பட்டவர்களின் மனச்சோர்வு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

காளான்
காளான்

சைகடெலிக் மருந்தான சைலோசைபினின் செயற்கைப் பதிப்ப்பானது, 25 மில்லிகிராம் டோஸ், 10-மில்லிகிராம் டோஸ் மற்றும் 1 மில்லிகிராம் டோஸ் என்ற வெவ்வேறு அளவுகளில், மனச்சோர்வு தாக்கம் உள்ளவர்களுக்குத் தரப்பட்டு ஒப்பீடு செய்யப்பட்டது. இதில், 25 மில்லி கிராம் (COMP360) வழங்கப்பட்டவர்கள் சோர்வு நீங்கி உடனடி, வேகமான, வழக்கமான செயல்பாடுகளைக் கொண்டிருந்ததாக, ஆய்வின் இணை ஆசிரியரான லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் டாக்டர் கை குட்வின் கூறினார்.

சைலோசைபின் பரிசோதனைக்கு முன்பு, பங்கேற்பாளர்களின் மனச்சோர்வின் தீவிரத்தை ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் உளவியல் அளவைக் கொண்டு மதிப்பீடு செய்தனர். இந்த மதிப்பீடு 12 வார கண்காணிப்பு காலத்தில் பலமுறை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது. இதில் 25 மில்லிகிராம் டோஸ் குழுவில் உள்ளவர்களுக்கு கணிசமான பலனும், விரைவான முன்னேற்றமும் இருந்ததாக புற்றுநோயியல் நிபுணரான பேராசிரியர் டாக்டர் அந்தோனி பேக் தெரிவித்தார். இதற்கு நேர்மாறாக, 10-மில்லிகிராம் மற்றும் 1-மில்லிகிராம் குழுக்களில் முறையே 19% மற்றும் 18% பேர் மட்டுமே 3 வாரங்களில் தங்கள் அறிகுறிகளில் முன்னேற்றம் கண்டனர்.

மன அழுத்தம்
மன அழுத்தம்

ஒட்டுமொத்தமாக, புதிய ஆய்வின் முடிவுகள் நம்பிக்கைக்குரியவை. ஆனால் இது மட்டுமே சரியான சிகிச்சை அல்ல. இதில் பலன் கிடைக்காதவர்களும் மீண்டும் மனச்சோர்வு அடைந்தவர்களும் உள்ளதாக அந்தோணி பேக் தெரிவித்தார். புதிய ஆய்வில் பங்கேற்றவர்களில், 77% பேர் தலைவலி, குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் போன்ற பக்க விளைவுகளை அனுபவித்தனர். ஒவ்வொரு டோஸ் குழுக்களிலும் உள்ள சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கு 12 வார பின்தொடர்தல் காலத்தில் தற்கொலை எண்ணம் ஏற்பட்டதா அல்லது தங்களை காயப்படுத்திக் கொண்டார்களா என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பயிற்சி பெற்ற மருத்துவர்களின் முன்னிலையில், தொடர்ந்து உளவியல் ரீதியான கண்காணிப்புடன் சைலோசைபின் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கருதுவதாக மருத்துவர் பேக் தெரிவித்தார்.