Published:Updated:

`பயணிகளைச் சோதனையிட இந்த வசதிகள் போதுமா?' -தமிழக விமான நிலையங்களின் அவலநிலை #corono

விமான நிலையம்
விமான நிலையம்

சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வரும் ஏறக்குறைய 300 பயணிகளைச் சோதனையிட இரண்டு அல்லது மூன்று ஊழியர்களே உள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பின்பு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் தங்கள் நாட்டுக்கு வரும் மற்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அனைவரையும் விமான நிலையங்களிலேயே கடுமையாகச் சோதனை செய்யத் தொடங்கிவிட்டனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் தங்கள் நாடுகளில் பரவாமல் இருக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன, ஒவ்வொரு நாட்டின் விமான நிலையங்களும்!

தற்போது COVID-2019 எனப் பெயரிடப்பட்டுள்ள 'நாவல் கொரோனா வைரஸின்' தொற்றைக் கண்டறிய சீனா, ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் சோதனை செய்யப்படுகின்றனர்.

விமான நிலையம்
விமான நிலையம்

ஆனால், வைரஸ் தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் ஸ்கிரீனிங் டெஸ்ட், வெப்ப ஸ்கேனர்களைப் பயன்படுத்திச் சிறப்புக் கவுண்டர்களில் பயணிகளைச் சோதனையிடும் முறைகளைச் செய்ய போதுமான அளவு ஊழியர்களோ, நவீன வசதிகளோ தமிழக விமான நிலையங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

``கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூவரும் குணமடைந்தனர்!'' - கேரள பொதுச் சுகாதாரத்துறையின் வெற்றி

உதாரணமாக சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து ஒரு விமானத்தில் சென்னைக்கு வரும் ஏறக்குறைய 300 பயணிகளைச் சோதனையிட இரண்டு அல்லது மூன்று ஊழியர்களே பணியில் உள்ளனர். மேலும், பல விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை, விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் (APHO) ஊழியர்களால் கையாள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

விமான நிலையம்
விமான நிலையம்

நாடு முழுவதும் 40,000 மக்களிடையே நடத்தப்பட்ட லோக்கல் சர்க்கிள்ஸின் ஒரு கணக்கெடுப்பின்படி விமான நிலையங்களில் இதுபோன்ற மருத்துவ சோதனைகளைப் பயணிகள் பெரும்பாலும் விரும்புவது இல்லை என்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 2,000 பேர் பங்கேற்றனர்.

`என் மூலமாக வைரஸ் பரவுவதை விரும்பவில்லை!’- கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட  ஆப்பிரிக்க இளைஞர்

பயணிகளைச் சோதனையிடும் ஊழியர்கள் குறைவாக உள்ள விமான நிலையங்களில் மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் பலர் வைரஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் போன்றவற்றில் பங்கு கொள்ளாமலேயே சென்றுவிடுவதால் ஒருவேளை இவர்களுக்கு வைரஸ் தொற்று இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

விமான நிலையம்
விமான நிலையம்

தமிழக விமான நிலையங்களில் இதுவரை 47,645 பயணிகள் ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளைச் சேர்ந்த 2,256 பயணிகளும் சென்னையைச் சேர்ந்த 650 பயணிகளும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு