Election bannerElection banner
Published:Updated:

சென்னை: ரெம்டெசிவிர் விற்பனையைத் தொடங்கிய தமிழக அரசு... வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

ரெம்டெசிவிர் வாங்க காத்திருக்கும் மக்கள்
ரெம்டெசிவிர் வாங்க காத்திருக்கும் மக்கள் ( படம்: விகடன் / வி.ஸ்ரீனிவாசுலு )

ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து ஒரு குப்பியின் விலை 1,545 ரூபாய். இதுதொடர்பான மேலதிக விபரங்கள் தெரிய வேண்டுமானால் 104 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

கொரோனா இரண்டாவது அலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும், ரெம்டெசிவிர் தட்டுப்பாடும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மருத்துவர்களால் ரெம்டெசிவிர் மற்றும் ஆக்டெம்ரா மருந்துகள் அதிகளவில் பரிந்துரைக்கப்படுவதால் தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த மருந்து அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்
படம்: விகடன் / வி.ஸ்ரீனிவாசுலு
தமிழகத்தில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் தட்டுப்பாடு இருக்கிறதா... கள நிலவரம் என்ன?

இந்நிலையில், `தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து இல்லையெனில், அரசிடம் அதற்கான கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்' என்று தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்துள்ளது.

இந்த மருந்துகளை விநியோகிப்பதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பிரத்யேக மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்றிலிருந்து விற்பனை தொடங்கியிருக்கிறது. இதுகுறித்து மருத்துவ பணிகள் கழகத்தின் அதிகாரிகளிடம் பேசினோம்.

``அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்துகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் தேவைப்படும்பட்சத்தில்,

- நோயாளியின் ஆதார் அட்டை,

- மருந்துக்கான மருத்துவரின் பரிந்துரை,

- கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதற்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைச் சான்று

- நோயாளியின் சி.டி ஸ்கேன்

உள்ளிட்ட ஆவணங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். ஒரு நோயாளிக்கு தேவையான அளவு மருந்து மட்டுமே வழங்கப்படும்.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்
படம்: விகடன் / வி.ஸ்ரீனிவாசுலு

ரெம்டெசிவிரைப் பொறுத்தவரையில் ஒரு நோயாளிக்கு தேவையான அளவான 6 குப்பிகள் மட்டுமே வழங்கப்படும். ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து ஒரு குப்பியின் விலை 1,545 ரூபாய். இதுதொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவேண்டுமானால் 104 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அதேசமயம் மருந்துக்கான தேவை இல்லாதவர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் கொடுக்கப்பட மாட்டாது. எனவே, அவர்கள் தேவையின்றி வர வேண்டாம். தொடர்ந்து இந்த மருந்து விற்பனை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு