Published:Updated:

"தமிழக நிலைமை, வட மாநிலங்களைவிட சிறப்பாகவே இருக்கும்!" - கணிக்கிறார் ரமணன்

ரமணன் லட்சுமிநாராயணன்
ரமணன் லட்சுமிநாராயணன்

இந்திய மக்கள்தொகையில் 65 சதவிகிதம் பேர் 35 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். எனவே அதிக உயிரிழப்புகளைச் சந்திக்காமல் ஹெர்டு இம்யூனிட்டி என்ற கும்பல் எதிர்ப்புச் சக்தியைப் பெறுவது சாத்தியம்தான்

'உலக அளவில் இந்தியாதான் அடுத்த ஹாட் ஸ்பாட்டாக இருக்கப்போகிறது. கொரோனாத் தொற்று விஷயத்தில் கவனமாக இல்லாவிட்டால் இந்திய மக்கள்தொகையில் 60 சதவிகிதம் பேர் பாதிக்கப்படலாம்' என்ற அதிர்ச்சித் தகவலை மார்ச் மாதமே கணித்துச் சொன்னவர் ரமணன் லட்சுமிநாராயணன்.

வாஷிங்டனின் 'சென்டர் ஃபார் டிசீஸ் டைனமிக்ஸ், எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி' அமைப்பின் இயக்குநர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறையில் விரிவுரையாளர். சென்னையில் படித்து வளர்ந்தவர். அவருடனான உரையாடலில் இருந்து...

"மார்ச் மாசமே அடுத்த ஹாட் ஸ்பாட் இந்தியாதான் என்று கணித்திருந்தீர்கள். எதை வைத்து அப்படிச் சொன்னீர்கள்?"

"அடர்த்தியான மக்கள்தொகையைக் கொண்ட, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற மோசமான பாதிப்புகளைக் கொண்ட, காற்று மாசுள்ள, சுகாதார அமைப்பில் பலவீனமான எந்த நாடும் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காவது எளிது. இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாவிட்டால், ஜூலையில் 30 கோடி இந்தியர்கள் இதனால் பாதிக்கப் பட்டிருப்பார்கள் என்று சொல்லியிருந்தேன். அது இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது என்ற அப்போதைய கணிப்பின்படி சொல்லப்பட்டது.

வெப்பமான சூழல், இந்தியர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி, பிசிஜி தடுப்பூசியின் பலன், குளோரோகுயின் பயன்பாடு போன்றவற்றுக்கு இந்த வைரஸ் எப்படி ரியாக்ட் செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இவற்றில் எதுவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. நம் மக்கள்தொகையில் இளவயதினரின் எண்ணிக்கை அதிகம். இது ஒன்றுதான் இப்படியொரு மோசமான சூழலில் இறப்பு விகிதத்தை அதிகரிக்காமல் இந்தியாவைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது."

"அடுத்து வரப்போகிற நாள்கள் இந்தியாவுக்கு எப்படியிருக்கும்?"

"அதை இப்போதே கணிப்பது இயலாதது. பரிசோதனைகளின் மூலம் இந்தியாவின் துல்லியமான நிலை இன்னும் நமக்குத் தெரியவில்லை. இதற்குப் பிரத்யேக சர்வே ஒன்று தேவை. செரலாஜிகல் சர்வே எனப்படும் அது, மக்களில் எத்தனை பேருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ கோவிட் 19 தொற்று அனுபவம் இருந்தது என்பதைக் காட்டும்.

இப்போதைக்கு மூன்று விஷயங்களை உறுதியாகச் சொல்ல முடியும். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் முன் இன்னும் ஆறு மாதங்களாவது இந்த வைரஸின் தாக்கம் இருக்கும். மருத்துவ முன்னேற்றங்களின் பலனாக அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை இன்னும் சீரடையும். ஓரளவு தயாராக உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் நிலைமை வட மாநிலங்களைவிடச் சிறப்பாகவே இருக்கும்."

"ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் கும்பல் எதிர்ப்புச் சக்தி இந்தியாவுக்கு சாத்தியமா?"

"இந்திய மக்கள்தொகையில் 65 சதவிகிதம் பேர் 35 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். எனவே அதிக உயிரிழப்புகளைச் சந்திக்காமல் ஹெர்டு இம்யூனிட்டி என்ற கும்பல் எதிர்ப்புச் சக்தியைப் பெறுவது சாத்தியம்தான். ஆனால் அதற்கு முன் முதியோர்களை வெளியில் விடாமல் வீடுகளுக்குள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். முதியோர் தவிர்த்து மற்றவர்கள் மட்டுமே இயல்பு வாழ்க்கைக்கும் வேலைகளுக்கும் செல்ல வெளியே வர வேண்டும். ஹெர்டு இம்யூனிட்டி என்பதை ஒரு உத்தியாகப் பார்க்க வேண்டாம். இந்தப் பெருந்தொற்று முடிவுக்கு வர, 100 சதவிகித மக்களும் இதற்கு இலக்காக வேண்டியிருக்காது என்பதை நல்ல செய்தியாகவே பார்க்க வேண்டும். என்னுடைய கவலையெல்லாம் வயதானவர்களையும் உடல்நலக்கோளாறுகள் உள்ளவர்களையும் பற்றியதுதான்."

"தமிழக நிலைமை, வட மாநிலங்களைவிட சிறப்பாகவே இருக்கும்!" - கணிக்கிறார் ரமணன்

> கொரோனா உயிர்க்கொல்லியா? உலகம் முழுவதிலும் இதனால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருக்கும்போது ஏன் கோவிட் 19 வைரஸைக் கண்டு இவ்வளவு பயப்பட வேண்டும்? | மாநில முதல்வர்கள் தொடங்கி, மருத்துவ நிபுணர்கள்வரை அனைவரும் மக்களை கொரோனாவோடு வாழப் பழகிக்கொள்ளச் சொல்கிறார்கள். இதை அரசின் கையாலாகாத்தனமாகப் பார்க்கலாமா?

> எல்லா மக்களும் ஒருமுறையாவது கொரோனாத் தாக்குதலுக்கு உள்ளாகி மீள்வார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா? | கொரோனாவோடு வாழப் பழகுவது என்றால் என்ன? அது சாத்தியமா? | ஹைட்ராக்ஸிகுளோரோக்வின் உபயோகத்தில் தொடங்கி, டிஸ்இன்ஃபெக்டன்ட்டை உடலில் ஏற்றச் சொன்னதுவரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கொரோனா அணுகுமுறையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

> உங்களுடைய பார்வையில் கொரோனாத் தடுப்பில் இந்தியா சரியான பாதையில்தான் செல்கிறதா? வேறு எந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்? | கோவிட் 19 வைரஸுடனான போரில் இந்தியாவில் எந்த மாநிலத்தை நல்ல மாடலாகச் சொல்வீர்கள்? | கொரோனாவுக்கு முடிவு வருமா?

- இந்தக் கேள்விகளுக்கான தெளிவான பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > இந்தியா இழைத்த தவறுகள்... https://bit.ly/30ITyojல்

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு