வீட்டில் ஏதேனும் மருத்துவ அவசரம், அசம்பாவிதங்கள் நடந்தால், அவற்றைக் கையாள குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். சிறு வயதில் கற்றுக்கொள்ளும் இந்தப் பழக்கம் அவர்களின் வாழ்க்கை முழுவதும் பயனளிக்கும். சரி, எதையெல்லாம் கற்றுக்கொடுக்கலாம்... பார்க்கலாம்!
108 சேவையை அழைக்கக் கற்றுக்கொடுங்கள்!
வீட்டில் யாருக்காவது உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால், அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்க குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். அப்படி அழைக்கும்போது பெயர், முகவரி, யாருக்கு, என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லக் கற்றுக்கொடுக்க வேண்டும். முக்கியமாக, ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்புகொள்ளும்போது பதற்றமில்லாமல் நிதானமாக, தெளிவாகப் பேசுமாறு அறிவுறுத்த வேண்டும்.

மருத்துவப் பட்டியல்
மருத்துவ அவசரம் ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண்கள், குழந்தைக்கு அடிக்கடி ஏற்படும் ஒவ்வாமை குறித்த விவரங்கள், குறிப்பிட்ட மருந்துகளுக்கு ஒவ்வாமை இருந்தால் அந்த விவரங்கள், வீட்டிலுள்ளவர்களுக்கு இருக்கும் உடல்நலக் குறைபாடுகள், அவற்றுக்கு அவர்கள் எடுக்கும் மருந்துகளின் பட்டியல், குடும்பத்திலுள்ள அனைவருக்கும் எடுக்கப்பட்டிருக்கும் காப்பீடு தொடர்பான விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்து, குழந்தைகள் பார்வையில்படும் இடங்களில் மாட்டிவையுங்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
தொடர்புகொள்ள வேண்டிய எண்களின் பட்டியலைத் தயார் செய்யுங்கள்!
ஆம்புலன்ஸ் சேவை - 108
மருத்துவ ஆலோசனை மையம் - 104
சிநேகா தற்கொலை தடுப்பு மையம் - 044 - 2464 0050
வழக்கமாக சிகிச்சை பெறும் மருத்துவமனையின் அவசர சேவை மையம்
தீயணைப்பு உதவி எண் - 101
காவல் அவசர உதவி எண் - 100
மருந்துக்கடை தொலைபேசி எண்
வழக்கமாக சிகிச்சையளிக்கும் மருத்துவரின் தொடர்பு எண்
பெற்றோரின் செல்போன் எண்கள்
பெற்றோரின் அலுவலகத் தொடர்பு எண்கள்
அண்டை வீட்டுக்காரர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் செல்போன் எண்கள்
மேற்கூறிய அனைத்துத் தொடர்பு எண்கள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்து, அதைச் சில நகல்கள் எடுத்து படுக்கையறைக் கதவு, ஃப்ரிட்ஜ், கார் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் ஒட்டிவைக்க வேண்டும். வீட்டுத் தொலைபேசி அருகிலும் ஒரு பட்டியல் இருக்கட்டும்!