Published:Updated:

நாம் உட்கொள்ளும் மருந்துகளின் தரம் இவ்வளவுதானா? ஆய்வில் வெளியான பகீர் தகவல்கள்!

Tablets (Representational Image)

தனியார் மருந்து நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட 47% மருந்துகள் மத்திய மருந்து கட்டுப்பாட்டின் ஒப்புதல் இல்லாதவை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

நாம் உட்கொள்ளும் மருந்துகளின் தரம் இவ்வளவுதானா? ஆய்வில் வெளியான பகீர் தகவல்கள்!

தனியார் மருந்து நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட 47% மருந்துகள் மத்திய மருந்து கட்டுப்பாட்டின் ஒப்புதல் இல்லாதவை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:
Tablets (Representational Image)

அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைகழகமும் , டெல்லியில் உள்ள இந்திய சுகாதார அமைப்பும் இணைந்து இந்தியாவில் தயாரிக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் குறித்து, ஆய்வை மேற்கொண்டன. மொத்தம் 5,000 நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த 9,000 மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tablets (Representational Image)
Tablets (Representational Image)
Pixabay

இந்த ஆய்வின் மூலம் கண்டறிப்பட்ட தகவல்கள் வருமாறு:

* இந்தியாவில் அதிகளவில் தயாரிக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள், அதாவது 85-90% மருந்துகள் தனியார் நிறுவனங்களின் மூலமே தயாரிக்கப்படுகின்றன. இதில், 2019-ம் ஆண்டு தனியார் மருந்து நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட 47% மருந்துகள் மத்திய மருந்து கட்டுப்பாட்டின் ஒப்புதல் இல்லாதவை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த ஆய்வில் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருந்துவ முகாம்கள் மூலம் வழங்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

* கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து அரித்ரோமைசின் 500 மி.கி. ஆகும். அதற்கு அடுத்தபடியாக செபிக்சின் 200 மி.கி நோய் எதிர்ப்பு மாத்திரைகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் தயாரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் 47.1% (2, 408 மில்லியன்). ஆன்டிபயாடிக் மருந்துகளின் முறையற்ற பயன்பாடு இந்தியாவில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பின் முதல் இயக்கி என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

இந்த ஆய்வு முடிவுகள் குறித்து மருத்துவர் ரவீந்திரநாத்திடம் பேசினோம்...

’’உலகளவில் மருந்துகள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஏராளமான தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் உற்பத்தி செய்கின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் மருந்துகள் உற்பத்தி செய்வது மிக மிகக் குறைந்து விட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உற்பத்தி செய்யக்கூடிய நோய் எதிர்ப்பு உட்பட எந்த மருந்தாக இருந்தாலும் சரி, அவை தரமானதாக உருவாக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு இருக்கிறது. மருந்துகளை கண்காணிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இருந்தாலும் கூட அதை சரியாக நிர்வகிக்க போதுமான அளவு ஆட்கள் இல்லாதது, கட்டமைப்பு வசதிகள் சரிவர இல்லாமல் இருப்பது போன்ற சூழ்நிலைகளின் காரணமாக தரம் குறைந்த மருந்துகள் உருவாக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

சில தனியார் நிறுவனங்கள், காலாவதியான மருந்துகளை மறுசுழற்சி செய்து, வெறும் ஸ்லிப்பை மட்டும் மாற்றிவிட்டு அப்படியே விற்பனைக்கு கொண்டு வருகின்றன. கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிரூபணமும் ஆகியுள்ளது. இதற்கு விரைவில் முடிவு கட்டிவிட வேண்டும்.

ஒரு மருந்தின் எடை 500 கிராம் என்றால் அது சரியாக உள்ளதா என்பதை ஆராய்ந்து அதை கண்டறிய வேண்டும். 500 மில்லி கிராம் என்று மருந்தில் போடப்பட்டிருக்கும். ஆனால் 400 மில்லி கிராம் தான் இருக்கும். இது போன்ற தவறுகளையெல்லாம் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் செய்யும் போது, இந்திய நாட்டின் மருந்துகளின் மீது சர்வதேச அளவில் ஒரு சந்தேக பார்வை ஏற்படும். அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.

Medicine
Medicine

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தையே நோயாளிகள் வாங்கி உட்கொள்கிறார்கள். நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து குறிப்பிட்ட திறனை வெளிப்படுத்தவில்லை என்றால் நோயாளிகள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள்.

சமீபத்தில், கேரளாவில் கூட நாய்க்கடி தடுப்பூசி போட்ட பிறகும் கூட ஒரு மாணவி இறந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர், தடுப்பூசிகள் தரமானதுதானா என்று கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு கடிதமும் எழுதியிருக்கிறார். இது போன்ற நிகழ்வுகள் வருந்தும் படியாக இருக்கின்றன. எனவே மருந்துகளின் தரத்தை கண்காணிப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.