Published:Updated:

ஹெல்த் இஸ் வெல்த் : காய்கறி... உடற்பயிற்சி... குத்துப்பாட்டு!

ஹேமா ருக்மணி
பிரீமியம் ஸ்டோரி
ஹேமா ருக்மணி

ஹேமா ருக்மணியின் ஃபிட்னெஸ் டிப்ஸ்

ஹெல்த் இஸ் வெல்த் : காய்கறி... உடற்பயிற்சி... குத்துப்பாட்டு!

ஹேமா ருக்மணியின் ஃபிட்னெஸ் டிப்ஸ்

Published:Updated:
ஹேமா ருக்மணி
பிரீமியம் ஸ்டோரி
ஹேமா ருக்மணி

ன்னுடைய கல்லூரி நாள்கள் முதல் இப்போது வரை, சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக உடல் எடையைச் சீராகவைத்திருக்கிறார் ஹேமா ருக்மணி. இவர், ‘தேனாண்டாள் ஃபிலிம்ஸி’ன் சி.இ.ஓ. ‘ஹெல்த் இஸ் வெல்த்’ தொடருக்காக அவரிடம் பேசினோம். விஜய்யைவைத்து ‘மெர்சல்’ காட்டியவரின் ஃபிட்னெஸ் டிப்ஸ் செம இன்ட்டரெஸ்ட்டிங்.

ஹெல்த் இஸ் வெல்த் : காய்கறி... உடற்பயிற்சி... குத்துப்பாட்டு!

20 வருடங்களாக ஃபிட்னெஸ் விரும்பி

‘‘கடந்த 10 வருஷங்களாகத்தான் எங்கே பார்த்தாலும் ஃபிட்னெஸ் பத்திப் பேசறாங்க. நான் 20 வருஷத்துக்கு முன்பிருந்தே ஃபிட்னெஸ் விரும்பி. இட்லி, தோசை, அரிசி சாதம்னு சாப்பிட்டு 20 வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. குழந்தைங்க பிறந்ததும் பெண்கள் திடீர்னு குண்டாகிடுவாங்க. அப்படி இல்லாம உடல் எடையை சீராகவெச்சுக்க விரும்பினேன். 20 வருஷத்துக்கு முன்னாடி தேடினாலும் டயட்டீஷியன்ஸ் கிடைக்க மாட்டாங்க. அப்படியும் நான் ஒருத்தரைத் தேடிக் கண்டுபிடிச்சு, என் எடை அதிகரிக்காம இருக்கத் தேவையான டயட்டை கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன். அவர் சொன்னபடி உடல் எடையைச் சீராகவெச்சுக்க ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெல்த் இஸ் வெல்த் : காய்கறி... உடற்பயிற்சி... குத்துப்பாட்டு!

ஒரு நாளைக்கு அரை கிலோ கீரை, காய்கறி

பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் சீஸன் வருமில்லையா... எங்கம்மா, அந்த மஞ்சள் கிழங்குகளைத் தோல் சீவி, வட்ட வட்டமா நறுக்கி, டப்பாவில் போட்டு ஃப்ரீஸர்ல வெச்சுடுவாங்க. தினமும் காலையில ஒரு துண்டு மஞ்சள், சில துளி நெய்விட்டு மஞ்சள் டீ போட்டுக் குடிப்பேன். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். மத்த நேரத்துல நார்மல் டீ குடிச்சாலும் நோ ஒயிட் சுகர். எப்பவுமே பனங்கருப்பட்டிதான். கொஞ்ச நேரம் கழிச்சு பாலக்கீரையை வேகவெச்சு, அரைச்சு, உப்புகூடப் போடாம குடிப்பேன். அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். அரை மணி நேரம் கழிச்சு, ரெண்டு கைப்பிடி நிறைய தர்பூசணித் துண்டுகளைச் சாப்பிட்டுட்டு, உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பேன். வொர்க்அவுட் முடிஞ்சதும் சில துண்டுகள் பனீர். இவ்வளவுதான் என் காலை உணவு.

லன்ச்சுக்கு கைப்பிடியளவு காலிஃப்ளவர் ரைஸ், சாம்பார், காய்கறிப் பொரியல், ஒரு முட்டை, சின்ன கப் தயிர் அவ்வளவுதான். மாலையல் லெமன் டீ அல்லது கிரீன் டீ. டின்னருக்கு பாசிப்பயறு பெசரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி அல்லது புதினா சட்னி. கூடவே கொஞ்சம் நாட்டுக்கோழி அல்லது காடையில் சில துண்டுகள். கிடைக்கலைன்னா பிராய்லரும் ஓகேதான். மாசத்தின் 29 நாள்களும் என்னோட டயட் இதுதான். ஒரு நாள் மட்டும் பிரியாணி, டெசர்ட்னு மனசுபோலச் சாப்பிடுவேன்.

பரதநாட்டியத்துல ஆரம்பிச்சு சால்சா வரைக்கும் தெரியும்னாலும், குத்துப்பாட்டு ஃபிட்னெஸ் வேற லெவல்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து உடற்பயிற்சி

என்னோட 30 வயசு வரை உடற்பயிற்சிக்கான நேரத்தைக் குழந்தைகளோடு செலவிடலாமேன்னு யோசிச்சவ நான். அவங்க வளர்ந்த பிறகுதான் உடற்பயிற்சிகளை ரசிச்சுப் பண்ண ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல அரை மணி நேரம் வாக்கிங் மட்டும்தான் போனேன். நாற்பது வயசுக்கு மேலே நம்முடைய தசைகள் எல்லாம் மெள்ள மெள்ள தளர ஆரம்பிக்கும் கிறதால, ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சிகளையும் கத்துக்கிட்டேன். என் வேலையைப் பொறுத்து ஜிம்மில், வீட்டில், தங்குற ஹோட்டல்கள்ல இருக்கும் ஜிம்மில்னு உடற் பயிற்சி செய்ய ஆரம்பிச்சிடுவேன். வெளிநாடு களுக்கு ஷூட்டிங் போறப்போ வொர்க்அவுட் பண்ணக்கூட நேரமிருக்காது. அந்த மாதிரி நேரத்துல அரை மணி நேரம் தொடர்ந்து ஓடுவேன். கொடைக்கானல் ஏரியைச் சுத்தி ரன்னிங் போறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஹேமா ருக்மணி
ஹேமா ருக்மணி

குத்துப்பாட்டு ஃபிட்னெஸ்

முன்பெல்லாம் நான் விரும்பிக் குத்துப்பாட்டுக் கேட்டதில்லை. ஆனா, அது எவ்வளவு எனர்ஜி கொடுக்குதுன்னு பிறகுதான் தெரிஞ்சுது. பரதநாட்டியத்துல ஆரம்பிச்சு சால்சா வரைக்கும் தெரியும்னாலும், குத்துப்பாட்டு ஃபிட்னெஸ் வேற லெவல். என் நண்பர்கள் வட்டத்துல ஃபிட்னெஸ்ல ஆர்வம் இருக்கறவங்கதான் அதிகம். இதுகூட நம்மை ரெகுலரா எக்ஸர்சைஸ் செய்யத் தூண்டும். படிக்கட்டா, லிஃப்ட்டானு கேட்டா என்னோட சாய்ஸ் படிக்கட்டுதான். லேட் நைட் ஷூட்டிங் இருந்தா, பகல்ல 20 நிமிஷம் நிச்சயமாத் தூங்கிடுவேன்.

டென்ஷன் இல்லாத வாழ்க்கைக்கு தாய்ச்சி

நிறைய மேடு, பள்ளங்கள் இருக்கிற ஃபீல்டுல இருக்கேன். ஸோ, ஸ்ட்ரெஸ் சர்வ சாதாரணமா வந்துபோகும். இதுக்காக தியானமும் தாய்ச்சி பயிற்சியும் செய்யறேன். ஸ்ட்ரெஸ்ஸும் உடம்புவலியும் போயிடும். அப்புறம், நான் நிறைய புக்ஸ் படிப்பேன். நாய்க்குட்டின்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதோட விளையாடி, ஸ்ட்ரெஸ் விரட்டி ரிலாக்ஸ் ஆவேன்.

என்னைப் பொறுத்தவரை, மத்தவங்களோட பேச்சைக் கேட்டு நம்ம ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியாது. நம்ம உடம்பை நாம நேசிச்சாதான் நம்ம ஆரோக்கியத்துக்கு நாம் தொடர்ந்து நேரத்தை ஒதுக்க முடியும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism