Published:Updated:

`காப்பீட்டு அலுவலருக்கு கொரோனா; வங்கிக்கு சீல்!' -தேனிக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ராக் ஹிஸ்ட்ரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எஸ்.பி.ஐ வங்கி காப்பீட்டு அலுவலகம்
எஸ்.பி.ஐ வங்கி காப்பீட்டு அலுவலகம்

எஸ்.பி.ஐ வங்கியின் காப்பீட்டு நிறுவன அலுவலருக்கு இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தேனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வங்கி என்பதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ரத்னம் நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர், எஸ்.பி.ஐ வங்கியின் காப்பீட்டு நிறுவன அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு இருந்ததாகக் கூறப்படுகிறது. கொரோனா அறிகுறியாக இருப்பதால், அவராகவே, நேற்று தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று தன்னைப் பரிசோதனை செய்யுமாறு கேட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அவரிடம் கொரோனா பரிசோதனைக்கான ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர், அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

`ஒரு மாதத்துக்குள்ளாகவே அடுத்த பாதிப்பு!' -தொடர் கொரோனா தொற்றால் திணறும் தேனி சிறைச்சாலை

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தொற்று ஏற்பட்ட நபருடன் அலுவலகத்தில் 20 பேர் வேலை செய்துள்ளனர். மேலும், நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 முதல் 150 நபர்கள் அலுவலகத்திற்கு வந்து சென்றிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. மேலும், அங்கு வேலை செய்யும் மார்கெட்டிங் பணியாளர்கள், தினமும் 3 முதல் 5 நபர்களைச் சந்தித்துவந்துள்ளனர்.

`கடைசியில் அவன காப்பாத்த முடியலையே..!' - கிணற்றில் விழுந்த சிறுவனால் கலங்கிய தேனி கிராமம்

இப்படி கொரோனா தொற்று உள்ள நபரின் தொடர்பில் இருந்தவர்கள், அவர்கள் மூலமாக யார் யாருக்கெல்லாம் தொடர்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என டிராவல் ஹிஸ்ட்ரி எடுக்கும் வேலைகள் தீவிரமடைந்துள்ளது. முதல்கட்டமாக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்துள்ளோம். அலுவலகத்தில் பணியாற்றியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு