Published:Updated:

அமேஸான், ஃப்ளிப்கார்ட்டில் ஃபிட்னெஸ் பொருட்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை! #HomeFitness

வாங்கி வைத்த டிரெட் மில் மேலே துணி உலர்த்தவும், ஃபிட்னஸ் பேண்டு சார்ஜ் இல்லாமலும், சைக்கிள் ஸ்டோர் ரூமிலும் கேட்பாரற்றுக் கிடக்கும் என்பதே நிதர்சனம். சோம்பேறித்தனத்தால் வொர்க்அவுட் செய்ய மறக்கும் இந்தப் பழக்கத்தை...

ஃபிட்னெஸ்
ஃபிட்னெஸ்

பல முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில், தள்ளுபடி விற்பனை களைகட்டியுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம், ஃபிட்னஸ் சம்பந்தமான பொருள்களுக்கு தள்ளுபடியும் விளம்பரமும் கொஞ்சம் அதிகம்! ஆன்லைன் வாடிக்கையாளர்களும் முட்டிமோதிக்கொண்டு ஃபிட்னஸ் பொருள்களை வாங்கிக் குவிக்கின்றனர். உண்மையில், இந்திய மக்களுக்கு ஃபிட்னஸ் மீது அதீத அக்கறையா? ஓர் அலசல்.

#HomeFitness
#HomeFitness

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் யுகத்தில், உடற்பயிற்சிக்கு எனத் தனி நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. உடல் ஆரோக்கியம் குறித்து தனியே மெனக்கெட வேண்டிய கட்டாயத்தில், வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதற்கான பொருள்களை மக்கள் வாங்கிக் குவிக்கின்றனர்.

ஃபிட்னஸ் பேண்டு, டிரெட் மில், ஸ்மார்ட் வாட்சுகள், சைக்ளிங், ஜம்ப் ரோப், ஜிம் பால், ஃபிட்னஸ் மேட் என எக்கச்சக்க பொருள்கள் இந்தப் பட்டியலில் அடக்கம். எந்தப் பொருளானாலும், வாங்குவதும் விற்பதும் ஒரு க்ளிக்கில் அடங்கிவிட்ட நிலையில், ஆஃபர்கள் டெபிட் கார்டை வசூல் செய்கின்றன. ஆனால், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாங்கும் இந்தப் பொருள்களைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்ற கேள்விக்கு 'இல்லை' என்பதே பலரின் பதிலாக உள்ளது.

Physiotherapist Srinath Raghavan
Physiotherapist Srinath Raghavan

வாங்கி வைத்த டிரெட் மில் மேலே துணி உலர்த்தவும், ஃபிட்னஸ் பேண்டு சார்ஜ் இல்லாமலும், சைக்கிள் ஸ்டோர் ரூமிலும் கேட்பாரற்றுக் கிடக்கும் என்பதே நிதர்சனம். சோம்பேறித்தனத்தால் வொர்க்அவுட் செய்ய மறக்கும் இந்தப் பழக்கத்தை மாற்றவும், வாங்கிய பொருள்களைச் சீராகப் பயன்படுத்தவும் சில ஆலோசனைகளை வழங்குகிறார் பிசியோதெரபிஸ்ட் ஶ்ரீநாத் ராகவன்.

விலை... பில்... கண் முன்னே...

ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய ஃபிட்னஸ் பொருள்களின் பில்லை, கண்ணுக்குத் தெரியும் இடத்தில் ஒட்டிவிடுங்கள். ஆஃபரில் வாங்கிய பொருளாக இருந்தாலும், விலைகொடுத்து வாங்கியதைப் பார்க்கும்போது மனதுக்கு உறுத்தும். ஃபிட்னஸ் அக்கறையாக வொர்க் அவுட் செய்யாவிட்டாலும், செலவு செய்ததற்காகவே பொருள்களைப் பயன்படுத்தத் தூண்டும்.

Indian currency
Indian currency

வொர்கவுட் காலண்டர்

தினம், வாரம், மாதாந்தர கோல்ஸ் செட் செய்துகொள்ளலாம். தொடக்கத்திலேயே செய்ய முடியாத கோல்ஸ்களை செட் செய்யாமல், எளிமையான கோல்ஸ்களை செட் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை நீங்கள் அந்தக் கோலை நிறைவேற்றும்போதும், அடுத்த திட்டமிடலுக்கான உற்சாகம் கிடைக்கும்.

ஃபிட்னெஸ் பேண்ட்... வேண்டுமா, வேண்டாமா?!

ஸ்டோர் ரூமில் வைக்கக் கூடாது

#HomeFitness
#HomeFitness

விலை கொடுத்து வாங்கிய ஃபிட்னஸ் பொருள்களை ஹால் அல்லது லிவிங் ஏரியாவில் வைக்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாத ஸ்டோர் ரூமில் வைத்தால், பொருள்களைப் பயன்படுத்துவதற்கான சூழல் அமையாது. ஹாலில் வைத்திருந்தால், வீட்டுக்கு வரும் நண்பர்களும் உறவினர்களும் அந்தப் பொருள்களின் பயன்பாட்டைப் பற்றி விசாரிக்கக்கூடும். தொடர்ந்து ஃபிட்னஸ் பற்றிய உரையாடல் இருந்துகொண்டே இருக்கும் என்பதால், வொர்க்அவுட் செய்ய வழிவகுக்கும்.

போட்டி... உற்சாகம்...!

அப்பா, அம்மா, மகள், மகன் இடையே ஃபிட்னஸ் கோல்ஸ் செட் செய்து போட்டி வைக்கலாம். காலை உடற்பயிற்சி, ஜாகிங் என ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுச் செய்யும்போது ஆரோக்கியமான சூழல் உருவாகும். தினசரி உடற்பயிற்சி தேவை என்பதைப் பழக்கப்படுத்திக்கொள்ள, மினிமல் போஸ்டர்களை உங்கள் ரூமில் மாட்டிக்கொள்ளலாம்.

Social Media
Social Media

சமூக வலைதள அப்டேட்ஸ்!

Vikatan

இது கடைசி சாய்ஸ்!! இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் தளங்களில் போட்டோ போடுவதற்காகவாது தினமும் வொர்க்அவுட் செய்யலாம். நீங்கள் மட்டுமல்லாது, உங்களைச் சுற்றி இருப்பவரையும் ஃபிட்னஸ் கான்ஸியஸாக வைத்திருக்க இது உதவும். தினசரி அப்டேட்ஸ், அனுபவப் பகிர்தலால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும்!