Published:Updated:

கொரோனா வைரஸ் உருமாற்றம்: ஏன் இந்த வைரஸ் மட்டும் நமக்கு சவாலாக இருக்கிறது?

இதுவரை பல வைரஸ் நோய்கள் நம்மிடையே பரவியுள்ளன. அவை இப்படி உருமாற்றங்கள் நடந்தது இல்லையே. எப்படி கொரோனா வைரஸ் மட்டும் இவ்வளவு உருமாற்றங்களுக்கு உள்ளாகிறது?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வைரஸ் நுண்ணுயிரிகள் எல்லா இடங்களிலும் அபரிமிதமாக இருக்கின்றன. அவை நம்மிடையே சளி, காய்ச்சல் போன்ற சிறு அளவிலான பாதிப்புகளில் தொடங்கி, உயிரைப் பறிக்கும் அளவுக்கு நோய்களை உருவாக்கி அச்சுறுத்தலாக இருக்கின்றன.

வைரஸ் என்பது நுண்ணிய அளவில் இருக்கும், மற்ற உயிரினங்களின் மீது ஒட்டிக்கொண்டு ஓம்புயிரியாக வாழக்கூடிய நுண்ணுயிரிகள். தன்மையைப் பொறுத்து அது டி.என்.ஏ (DNA) வைரஸாகவோ, ஆர்.என்.ஏ (RNA) வைரஸாகவோ இருக்கலாம். இவை ஓர் உயிரினத்தின் மீது ஒட்டிக்கொள்ளும்போது, அவற்றின் உடலிலுள்ள ஊட்டச்சத்தை உறிஞ்சி, பிறகு அந்த உடலிலுள்ள அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தம் வசமாக்கிக் கொள்ளும்.

Corona Vaccine - Representational Image
Corona Vaccine - Representational Image

அப்படிச் செய்கின்ற வைரஸ் அதன் ஓர் அணுவிலிருந்து ஆர்.என்.ஏ அல்லது டி.என்.ஏ-வை பல்வேறு நகல்கள் எடுத்து, அந்தப் புதிய அணுக்களை ஓம்புயிரி உடலின் அணுக்களை பாதிக்க அனுப்பும். ஒரு வைரஸ் நுண்ணுயிரி இன்னோர் உயிரினத்தின் மீது ஒட்டிக்கொண்டு வாழ்வதன் மூலம், வேகமாகப் பெருகி வளர முடிகிறது. இவற்றால், இன்னோர் உயிரினத்தின் மீது சார்ந்திருக்காமல் சுயமாக இனப்பெருக்கம் செய்யவும் முடியாது, நீண்டகாலத்துக்கு வாழவும் முடியாது. தாவரங்கள், பாலூட்டிகள், நீர்நில உயிரினங்கள், பூஞ்சைகள், பாக்டீரியா என்று அனைத்து வகையான உயிரினங்களின் மீதும் ஒட்டிக்கொண்டு ஓம்புயிரியாக வாழ்கின்றன.

அவற்றின் தன்மையைப் பொறுத்து, ஆர்.என்.ஏ வைரஸ், டி.என்.ஏ வைரஸ் என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே, ஓம்புயிரிகளைச் சார்ந்து, சிறிய அளவிலிருந்து பெரிய அளவிலான பாதிப்பு வரை அவை சார்ந்திருக்கும் உடலில் ஏற்படுத்துகின்றன. இவற்றின் செயல்பாடுகளிலும் நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதிலும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.

2019-ம் ஆண்டின் இறுதியிலிருந்து உலகம் முழுவதும் பெருந்தொற்றுப் பரவலுக்குக் காரணமாக இருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களுக்கு உள்ளாகி வீரியமடைந்து கொண்டே வருவதை நாம் அறிந்திருப்போம். இதையெல்லாம் பார்க்கையில் ஒரு கேள்வி பொதுவாகவே எழுகிறது.

இதற்கு முன்னரும் பல வைரஸ் நோய்கள் நம்மிடையே பரவியுள்ளன. ஆனால், அவற்றில் எல்லாம் இப்படி எதுவும் உருமாற்றங்கள் நடந்ததாகக் கேள்விப்படவே இல்லையே. அப்படியிருக்கையில், எப்படி கொரோனா வைரஸ் மட்டும் இத்தனை உருமாற்றங்களுக்கு உள்ளாகிறது?

அதற்குக் காரணம் கொரோனா ஆர்.என்.ஏ வகையைச் சேர்ந்த வைரஸ். இந்த வகையைச் சேர்ந்த வைரஸ் நுண்ணுயிரிகள், டி.என்.ஏ வைரஸ்களைவிடவும் அதிவேக உருமாற்றங்களை எதிர்கொள்கின்றன.

DNA
DNA
Pixabay
கொரோனா இறப்புச் சான்றிதழ் பெற இனி புதிய நிபந்தனைகள்; வெளியிட்ட மத்திய அரசு!

டி.என்.ஏ வைரஸ்கள்

வகைப்பாட்டுப் பெயரில் குறிப்பிடப்பட்டிருப்பது போலவே, இவற்றின் மரபணுக்கள் டி.என்.ஏ-க்களால் ஆனவை. இதற்கு உதாரணமாக சின்னம்மை நோயைக் கூறலாம். சின்னம்மை பல்லாண்டுக் காலமாக நம்மிடையே பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்குக் காரணமாக இருப்பது, வேரிசெல்லா-சோஸ்டெர் வைரஸ் என்ற நுண்ணுயிரி. மேலும், பார்வோ வைரஸ், பாபிலோமா வைரஸ் போன்றவற்றை டி.என்.ஏ வைரஸ்களுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இவை மனிதர்கள் மட்டுமன்றி மற்ற உயிரினங்களுக்கு இடையேயும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது போன்ற நுண்ணுயிரிகள், ஓர் உயிரினத்தின் உடலுக்குள் தொற்றியவுடன், அந்த உயிரினத்தின் உயிரணுப் படலத்தில் தன்னுடைய படலத்தை இணைத்துக்கொள்கின்றன. அதன்மூலம், உயிரணுவின் உள்ளே வைரஸின் உட்கூறுகள் புகுந்து, அணுக்கருவை நோக்கிப் பயணித்து, அந்த அணுவின் உயிரிவேதிமச் செயல்பாட்டைத் தன் வசப்படுத்துகிறது. பொதுவாக, ஓர் அணுவின் டி.என்.ஏ-வை நகலெடுக்கும் செயல்முறையை ஆர்.என்.ஏ-க்கள் செய்யும். அதாவது, ஒரு டி.என்.ஏ அழியும் தறுவாய்க்கு வரும்போது, அதன்மீது ஒட்டிக்கொள்ளும் ஆர்.என்.ஏ அந்த டி.என்.ஏ-விலிருக்கும் தகவல்களை நகலெடுத்து ஒரு புதிய டி.என்.ஏ-வை உருவாக்கும். அணுவின் இந்த உயிர்வேதிமச் செயல்பாட்டைத் தன் வசமாக்கிக் கொள்ளும் டி.என்.ஏ வைரஸ்கள், அணுக்கருவுக்குள் திரண்டிருப்பதன் மூலம், ஓர் அணு வெடித்துச் சிதறும்போது, சுற்றியிருக்கும் மற்ற புதிய அணுக்களின் மீதும் ஒட்டிக்கொண்டு அவற்றையும் பாதிக்கிறது.

ஆர்.என்.ஏ வைரஸ்களே அதிகம் உருமாறுகின்றன
ஆர்.என்.ஏ வைரஸ்களே அதிகம் உருமாறுகின்றன
Pixabay
Covid Questions: கொரோனாவிலிருந்து மீண்டுள்ளேன்; என் ஆரோக்கியத்தை மீட்க என்ன டயட் பின்பற்றலாம்?

ஆர்.என்.ஏ வைரஸ்கள்

இந்த வகைப்பாட்டின் கீழ் வரும் வைரஸ் நுண்ணுயிரிகளின் மரபணுக்கள் ஆர்.என்.ஏ-க்களால் ஆனவை. இவற்றை சுழல் நச்சுயிரி (Retroviruses) என்றும் அழைப்பார்கள். கொரோனா, நிபா, ஹெச்.ஐ.வி போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த வகை வைரஸ்கள் ஓர் உடலுக்குள் நுழைந்தவுடன், முதலில் அவற்றுடைய ஆர்.என்.ஏ-க்களை டி.என்.ஏ-க்களாக மாற்றிக் கொள்கின்றன. இந்தச் செயல்முறை எதிர்த்திசை நகலெடுத்தல் என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம், அது ஒட்டியிருக்கும் உயிரினத்தின் உடலின் அணுக்களுக்குள் தன்னுடைய மரபணுப் படிமங்களைச் செலுத்தும் வகையில் அது தன்னைத்தானே மாற்றியமைத்துக்கொள்கிறது. அப்படிச் செய்த பிறகு, டி.என்.ஏ வைரஸ்கள் செய்வதைப் போலவே, உயிரிவேதிமச் செயல்முறையை தன் வசப்படுத்திக்கொண்டு அந்த உடலிலுள்ள அணுக்களைப் பாதிக்கிறது.

இப்படி ஆர்.என்.ஏ-க்களை டி.என்.ஏ-க்களாக மாற்றி நகலெடுத்த பிறகு, அது ஒட்டியிருக்கும் உடலின் மற்ற அணுக்களுக்குள் செலுத்துவதற்கு இண்டக்ரேஸ் (integrase enzyme) என்ற நொதியைப் பயன்படுத்துகிறது. இப்படி, உடலிலுள்ள மற்ற அணுக்களின் டி.என்.ஏ-வோடு இவை உருவாக்கும் டி.என்.ஏ-க் களை ஒருங்கிணைக்க இவற்றால் முடிவதுதான், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை வீரியமிக்கதாக மாற்றுகிறது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில், ஓர் உடலிலுள்ள ஓர் அணுவின் மரபணுவுக்கு நடுவே, ஆர்.என்.ஏ வைரஸ் புதிதாக உருவாக்கிய மாற்று டி.என்.ஏ-வை செலுத்திவிட்டால், அந்த மரபணு அதற்குப் பிறகு செயலிழந்து, தீவிர நோய்த்தாக்குதலுக்கு வழிவகுக்கிறது.

Mutations
Mutations
Pixabay

உருமாற்றங்கள்

பொதுவாக, ஆர்.என்.ஏ வைரஸ்கள்தான் டி.என்.ஏ வைரஸ்களை விட வேகமாகவும் அதிகமாகவும் உருமாற்றங்களை அடைகின்றன. அதாவது, தொடர்ந்து புதிது புதிதாக வைரஸ்கள் தம் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டேயிருப்பதால், அந்த நகலெடுக்கும் செயல்முறையின்போது நிகழும் சில தவறுகள், வைரஸுடைய அமைப்பில், அதனுடைய ஊட்டச்சத்து, ஆன்டிஜென் எனப்படும் எதிர்ப்பூக்கி ஆகியவற்றில் மாற்றங்களை உண்டாக்கும். அதனால், அந்த வைரஸின் அமைப்பிலும் சில மாற்றங்கள் நிகழும். இது, புதிதாக நகலெடுக்கப்படும் வைரஸ் அணுக்களில் உருமாற்றங்களைக் கொண்டுவருகிறது.

டி.என்.ஏ வைரஸ்கள் நேரடியாக டி.என்.ஏ மரபணுக்களில் இருந்தே நகலெடுப்பதால், இதுபோன்ற தவறுகள் நிகழ்வது மிகவும் குறைவு. ஆகவே, அத்தகைய நுண்ணுயிரிகளில் உருமாற்றங்கள் நடப்பதும் குறைவு. சின்னம்மை போன்ற நோய்களை உண்டாக்கும் வைரஸ்கள் டி.என்.ஏ வகைப்பாட்டுக்குள் வருவதால், அவற்றில் அதிகமாக உருமாற்றங்கள் நிகழ்வதில்லை. ஆனால், இவற்றோடு ஒப்பிடும்போது ஆர்.என்.ஏ வைரஸ் அதிகமான உருமாற்றங்களுக்கு உள்ளாகிறது. இதன் காரணமாகவே, ஆர்.என்.ஏ வைரஸ்களுக்கு எதிராக நிலையான தடுப்பூசிகளைக் கண்டறிவது சிக்கலான பிரச்னையாகவே இருந்துவருகிறது.

இப்போது கொரோனா வைரஸை எடுத்துக்கொண்டால், அது நம் உடலுக்குள் நுழைந்தவுடன் அதனுடைய ஆர்.என்.ஏ மரபணுக்களை எதிர் நகலெடுத்து புதிய டி.என்.ஏ வைரஸ் மரபணுக்களை உருவாக்கி, நம் உடலின் அணுக்களிலுள்ள டி.என்.ஏ மரபணுக்களோடு இணைத்துவிடுகிறது. இந்தச் செயல்முறை நடக்கும்போது, ஆர்.என்.ஏ-விலிருந்து டி.என்.ஏ-வாக மாற்றும் நேரங்களில் அப்படியே அச்சு பிசகாமல் நகலெடுக்க முடியாது. பல தவறுகள் நிகழும்.

DNA
DNA
Pixabay
Covid Questions: கோவிட் காலத்தில் ஏறிய குழந்தையின் உடல் எடை; இதற்கு தீர்வு உண்டா?

ஆகையால், அந்த நகலெடுக்கும் செயல்முறையில் ஒவ்வொரு முறை தவறு நிகழும்போதும் அங்கிருந்து ஓர் உருமாற்றம் நிகழ்ந்து, உருமாறிய ஒரு வகை கொரோனா வைரஸ் உருவாகிறது. இப்படியாக, ஆர்.என்.ஏ வைரஸ்களில் நடக்கும் உருமாற்றங்களின் வேகம், டி.என்.ஏ வைரஸ்களில் இருப்பதைவிட 100 மடங்கு அதிகமாக நிகழ்கிறது. வைரஸ்களுடைய மரபணுக்களில் மனிதர்கள் மற்றும் இதர உயிரினங்களின் அணுக்களில் இருப்பதைப் போல், புதிதாக ஒரு டி.என்.ஏ உருவாக்கப்படும்போது நடக்கும் தவறுகளைச் சரி செய்யும் செயல்முறைகள் நடப்பதில்லை. இந்த வசதி இல்லாததால், அவற்றுடைய தவறுகள் புதிய உருமாற்றத்துக்கு வழிவகுக்கிறது.

மற்ற ஆர்.என்.ஏ வைரஸ்களோடு ஒப்பிடுகையில், கொரோனாவில் நடக்கும் உருமாற்றங்களின் விகிதம் சற்று குறைவுதான் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் ஆர்.என்.ஏ வைரஸ்களின் உருமாற்ற விகிதத்தைத் துல்லியமாகக் கணிப்பது மிகவும் சிரமமானதாகவே இதுவரை இருந்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு