சில ஆண்டுகளுக்கு முன், பாலியல் தொல்லைகளை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக விளையாட்டில் இருந்து முடக்கப்பட்ட துளசி ஹெலன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். பகுதி நேர ஆட்டோ ஓட்டுநர், மற்ற நேரத்தில் குத்துச்சண்டை, பாடி பில்டிங் பயிற்சி என பிஸியாக இருக்கிறார்.

இந்தியாவின் ‘லேடி முகமது அலி’ என்று கொண்டாடப்பட்டவர் குத்துச்சண்டை வீராங்கனை துளசி ஹெலன்.

‘`பன்னிரண்டு வயசில குத்துச்சண்டைதான் என்னுடைய எதிர்காலம்னு தீர்மானம் பண்ணிட்டேன். ஆனா, குடும்பத்தோட வறுமை என்னை பதினைஞ்சு வயசுலேயே கல்யாணத்துக்குள்ள தள்ளி விட்டுடுச்சு. என் அக்கா குத்துச்சண்டையில சாதிச்சு கவர்ன்மென்ட் வேலையில செட்டிலானவங்க. எனக்கொரு முன்னுதாரணம் இருந்ததால மறுபடியும் குத்துச்சண்டை பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சேன்’’ என்று உறுதியாகப் பேசுகிற துளசி, அதன் பிறகு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்க ஆரம்பித்தார். வறுமையை வென்று விளையாட்டில் தடம் பதித்துக்கொண்டிருந்த துளசியின் பயணத்தில் தடைக்கல்லாக வந்திருக்கிறது பாலியல் தொல்லை. ‘புகார் கொடுத்தா உங்கள விரட்டிடுவாங்க’ என்கிற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் புகார் கொடுத்த துளசிக்குக் கிடைத்த பரிசு, அதன்பின் விளையாட முடியாமல் போனதுதான்.

இன்றும் துளசியின் முகத்தில் அது குறித்த வருத்தம் தெரிந்தாலும், வார்த்தைகளில் வீரியம் குறையவில்லை.

“சில வருஷம் பிரேக் எடுத்துட்டு இப்போ திரும்பவும் பயிற்சி எடுத்துக்கிறேன். ஆனா, களம் வேற. பாடி பில்டிங் போட்டிகள்ல பல ஸ்டேஜ் ஏறணும், பதக்கங்கள் குவிக்கணும்கிறதுதான் இப்போதைய என் லட்சியம். பயிற்சிச் செலவுகளுக்காக ஆட்டோ ஓட்டுறேன். ஓரளவு செட்டிலாகிட்டா, பாக்ஸிங் அகாடமி அமைச்சு பெண் குழந்தைகளுக்கு பாக்ஸிங் சொல்லித் தருவதுதான் என் இலக்கு” என்கிறவர், சாதனை புரிய வயது தடையில்லை என்பதை உறுதியாக நம்புகிறார்.

“போராட்டத்திலேயே ஓடிடுச்சு என் இளமைப் பருவம். இப்போ 30 வயசாச்சு. `இதுக்கு மேல என்ன சாதிக்கப்போறே'ன்னு நிறைய பேர் கேட்குறாங்க. என்னைப் பொறுத்தவரை, ஏற்ற இறக்கம்னு வாழ்க்கைல நிறைய கத்துக்கிட்டேன். இனி என் இலக்குல இருந்து பின்வாங்க மாட்டேன். 30 வயசுக்கு மேல எதையும் சாதிக்க முடியாதா என்ன?” என்று கேள்வி எழுப்புகிறவர், பெண்களுக்குத் தற்காப்புக் கலை பாடம் அவசியம் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

``அஞ்சு வயசு குழந்தைக்கும், 55 வயசு பெண்ணுக்கும் ஒரே நிலைமைதான். பகல், இரவுன்னு எந்நேரத்திலும், தெரிஞ்சவன் தெரியாதவன்னு எந்த இடத்திலிருந்தும் தொல்லைகள் வருது. இப்படியான சூழலில் பெண் குழந்தைகளுக்கான தற்காப்புப் பயிற்சி ரொம்ப அவசியம். பாட்டு, டான்ஸுன்னு எந்தப் பயிற்சியில வேணா சேர்த்துவிடுங்க. ஆனா, கூடவே ஒரு தற்காப்புக் கலையையும் சொல்லிக் கொடுக்க மறந்துடாதீங்க. இது காலத்தின் கட்டாயம்” என்கிறார் துளசி.

மீண்டு(ம்) வருவார் துளசி!