Published:Updated:

இன்றே தொடங்குவோம்: ஃபிட்டான உடலமைப்பு... இதுதான் வழி!

ஃபிட்டான உடலமைப்பு
பிரீமியம் ஸ்டோரி
ஃபிட்டான உடலமைப்பு

வித்யா குருமூர்த்தி

இன்றே தொடங்குவோம்: ஃபிட்டான உடலமைப்பு... இதுதான் வழி!

வித்யா குருமூர்த்தி

Published:Updated:
ஃபிட்டான உடலமைப்பு
பிரீமியம் ஸ்டோரி
ஃபிட்டான உடலமைப்பு

ரு விளம்பரம் பார்த்திருக்கலாம். அடுத்த வாரம் வரவிருக்கிற ஒரு விழாவுக்காக உடல் மெலிய, குறிப்பிட்ட சோளப்பொரியை பாலில் போட்டுச் சாப்பிடுவார் அந்தப் பெண். ஒரே வாரத்தில் சிக்கென இளைத்து, ரொம்ப நாள் அணிய முடியாமல் இருந்த தன் ஃபேவரைட் காக்ராவை அணிந்து விழாவைக் கொண்டாடுவார்.

அந்த விளம்பரத்தில் காட்டியதுபோல, ஒரு வாரத்துக்குள் உடல் இளைத்து, ஃபிட் ஆக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஒரு வாரத்துக்குள் மெலிய வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட, எப்போதும் `ஸ்லிம் அண்டு ஃபிட்'டாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது மிக நன்று. இன்று முதல் ஆரோக்கியம் மற்றும் மன மகிழ்ச்சியுடன் வாழ்க்கையைக் கொண்டாட, உடற்பயிற்சியோடு முதல் அடியை எடுத்துவைக்கலாமே!

இன்றே தொடங்குவோம்: ஃபிட்டான உடலமைப்பு... இதுதான் வழி!

உடற்பயிற்சி பற்றிய சந்தேகங்களும் சாக்குப்போக்குகளும் நிறையவே நம்மிடத்தில் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். அதற்கு முன்பாக, ஏன் இளைக்க வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வோம். இதைப்படிக்கும்போது சற்று கடினமாக இருந்தாலும், ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அளவுக்கு மீறி பருமனாக இருப்பதால் இதயப் பிரச்சினை, நீரிழிவு, செரிமானப் பிரச்னை, மூட்டுவலி, குழந்தை உண்டாவதில் சிக்கல், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவற்றுக்கு எளிதில் இலக்காக நேரிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உண்மையில், மாதவிடாயின்போது உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கக்கூடிய ஒன்று.

சரி, இளைப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்?

உழைக்க வேண்டும்!

‘காலை ஐந்து மணிக்கு விழித்தால் இரவு வரை பம்பரமாகச் சுற்றி வீட்டு வேலைகளை யெல்லாம் செய்றேன், இதுக்கு மேலேயா..?’ என்று கூறும் சகோதரிகளே, இங்கு ‘உழைப்பு’ என்பது உங்களுக்கேயான, 60 நிமிட, இடை நிறுத்தமோ இடைஞ்சலோ இல்லாத உடற்பயிற்சிக்காக நீங்கள் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டிய ‘உழைப்பு’.

ரெண்டு கூடை நிறைய பாத்திரங்கள் இருந்தாலும், அலுத்தோ சலித்தோ தேய்த்து வைத்துவிடும் நாம், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யச் சொன்னால், ‘ஆமா அதைப் போய் யார் பண்ணுவது...’ என்கிற விட்டேத்தியான மனநிலையில் இருக்கிறோம். உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் அதிகரித்துவரும் இந்தச் சூழலில்கூட, பெண்கள் அதிலிருந்து விலகியே இருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்குத் தெரிந்த பலரும், ‘உடம்பு குறைக்க ஏதாவது டிப்ஸ் கொடேன்’ என்பார்கள். உடற்பயிற்சி செய்யச் சொன்னால், ‘அதுக்கெல் லாம் நேரமில்லை’ என்று பதில் வரும். ‘சரி உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்று’ என்றால், ‘ஆமா, வீட்ல எல்லாருக்கும் ஒருபாடு சமைச்சுட்டு, எனக்குன்னு தனியா செய்துக்கவெல்லாம் கைவரலை’ என்பார்கள். பச்சைக் காய்கறி சாப்பிடச் சொன்னால், ‘அய்யய்ய... டேஸ்ட்டும் இல்ல, வயிறும் நிரம்பாது’ என்பார்கள். ஆனால், உடல் மட்டும் இளைக்க வேண்டும் எனில் எப்படிச் சாத்தியம்?

சோம்பேறித்தனம் தாண்டிய ஒரு விஷயமும் நமக்கு உண்டு. `நாளையிலிருந்து போகலாம், அடுத்த வாரத்திலிருந்து போகலாம், குழந்தைகளின் லீவு முடிந்து போகலாம், ஒண்ணாம் தேதியில் இருந்து போகலாம்' - இப்படி. ஆனால், நாள்கள் மட்டும்தான் போய்க்கொண்டிருக்கும்.

ஃபிட்டான உடலமைப்பு
ஃபிட்டான உடலமைப்பு

`இன்று போகாவிட்டால் என்ன' என்கிற எதிர்மறை எண்ணத்தை அது தோன்றும்போதே கிள்ளி எறிய வேண்டும். என் உடற்பயிற்சி வகுப்பில் நான் எப்போதும் சொல்வது இதுதான் - ‘இன்று வகுப்புக்குப் போகாமல் இருக்க 100 காரணங்கள் இருந்தாலும், போயே ஆக வேண்டிய ஒரே ஒரு காரணத்தைத் தேடு!'

உடற்பயிற்சி செய்வது, அதற்காக நேரத்தைச் செலவிடுவது என்பதை ஓர் ஆடம்பரமாகப் பார்க்கும் எண்ணம் மக்கள் மனத்தில் இன்றும் உள்ளது. `உடற்பயிற்சிக்காகச் செலவிடும் நேரமும் பணமும் நம் ஆரோக்கியத்துக்கான முதல்' என்பதை உணர வேண்டும். கணவன் மனைவி இருவரும் இந்த விஷயத்தில் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் ஊக்குவித்துக்கொள்ள வேண்டும்.

பெண்களின் அடுத்த சந்தேகம்... மாதவிடாய் நாள்களில் உடற்பயிற்சி செய்யலாமா?

தாராளமாகச் செய்யலாம்! உண்மையில், மாதவிடாயின்போது உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கக்கூடிய ஒன்று. இது, பீரியட்ஸ் வலி மற்றும் அதிகப்படியான ரத்தப்போக்கைக் குறைக்கும்; முறைப்படுத்தும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து, வலி உணரப்படும் இடத்திலிருந்து ரத்தத்தை நகர்த்தும்.

எண்டார்பின் (மகிழ்ச்சியாக இருக்க உதவும் ஹார்மோன்) உற்பத்தியை அதிகரித்து, கவலை, மனச்சோர்வைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்தும்.

இன்னொரு வழக்கமான புகார்... ‘வாக்கிங் போயிட்டு நிப்பாட்டினதும் அதிகமா வெயிட் போட்டுடுச்சு’. இதில் உள்ள உண்மை என்ன வென்றால், நடைப்பயிற்சி மட்டுமல்ல, எந்த ஓர் உடற்பயிற்சியைச் செய்யும்போதும் கலோரி எரிப்பு நிகழ்வதால் உடல் பருமன் சற்று கட்டுப்படும். முறையான மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சியால் மட்டுமே எடை கட்டுக்குள் இருக்கும். செய்வதை நிறுத்துவிட்டால், கலோரி எரிப்பு நின்று போகும்; அது கூடுதல் சதையாக நம் உடலிலேயே தங்கும்.

நடைப்பயிற்சியில் ஒரு மாதத்தில் ஒரு கிலோ குறைந்தால், முறையான ஓட்டப்பயிற்சியில் நிச்சயம் மூன்று கிலோ வரை எடைக்குறைப்புக்கு உத்தரவாதம் உண்டு.

சரி, என்ன மாதிரியான உடற்பயிற்சிகளிருந்து தொடங்கலாம்?

மிகவும் எளிதான, எந்தவித வலியும் தராத ஓர் உடற்பயிற்சி எனில் அது நடைப்பயிற்சிதான். ஆனால், ஜாலியாக நட்புகளுடன் பேசிக்கொண்டே ஆற அமர நடந்துவிட்டு வருவது உடற்பயிற்சியில் சேர்த்தியில்லை. கை கால்களை வீசி, பேச்சைக் குறைத்து, குறைந்தபட்சம் மூன்று கிலோமீட்டராவது நடந்துவிட்டு வந்தால்தான் நடந்ததற்கான பலன் நமக்குக் கிடைக்கும்.

ஃபிட்டான உடலமைப்பு
ஃபிட்டான உடலமைப்பு

நடை என்பது 50+ உள்ளவர்களுக்கே பொருந்தும். அதற்குக் குறைவான வயதுடையவர்கள் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளலாம். ஓட்டம் ஒரு மிகச்சிறந்த, கால்களை வலுவாக்கக்கூடிய, வேகமாக எடைக்குறைப்பில் பயன்தரக்கூடிய, இதயத்தைச் சீரமைக்கும் நல்ல உடற்பயிற்சி. ஆனால், நம் பெண்களுக்கு ஓடுவதற்குத் தயக்கம். ‘யார் என்ன சொல்வார்களோ’ என்கிற எண்ணமும், ‘ஓடுறதெல்லாம் சாத்தியமா’ என்கிற மலைப்பும், ‘இந்த உடம்பைத் தூக்கிட்டு ஓடினா நல்லாவா இருக்கும்’ என்கிற கவலையும் உண்டு அவர்களுக்கு.

உடலைப் பண்படுத்தத்தான் ஓடுகிறோம். ஓடி ஓடித்தான் குறைக்க வேண்டும். அதனால், மற்றவர்களைப் பற்றி கவலைப் படாமல், உங்கள் பயிற்சிகளை அர்ப்பணிப்புடன் செய்து வாருங்கள். உங்களின் உடல் மற்றும் மனரீதியான பாசிட்டிவ் மாற்றம்கண்டு, கேலி பேசியவர்களே பாராட்டு வார்கள்.

எப்படி ஓடத் தொடங்குவது?

திடீரென ஒரு நாள் ஓடத் தொடங்குவது நல்லது அல்ல. அது சாத்தியமும் அல்ல. படிப்படியாக உடலைப் பழக்கப்படுத்த வேண்டும். நடைப்பயிற்சி (walking), துரித நடை (brisk walk), மெல்லோட்டம் (jogging), முதல் 100 மீட்டர் நில்லாமல் ஓட்டம் பின்பு நடை, 200 மீட்டர் தொடர்ந்து ஓட்டம் பின்பு நடை... இவ்வாறாக சிறிது சிறிதாக உடலைப் பழக்கப்படுத்தி, தொடர் ஓட்டத்துக்குத் தயார் செய்ய வேண்டும்.

ஃபிட்டான உடலமைப்பு
ஃபிட்டான உடலமைப்பு

உடல் சோர்வு மற்றும் முட்டிவலி அதிகமாகிறதே?

ஓட்டம் என்பது அதிக உடல் சக்தியை (high intensity) உபயோகித்துச் செய்யும் உடற்பயிற்சி. இதில் உடல்வலி, கால்வலி, ஆடுசதைவலி, தொடைவலி எல்லாம் வரக்கூடும்தான். அதைத் தொடர்ந்தே அதிக கலோரி எரிப்பும் அற்புத எடைக்குறைப்பும் நிகழும். நடைப் பயிற்சியில் ஒரு மாதத்தில் ஒரு கிலோ குறைந்தால், முறையான மற்றும் வழக்கமான ஓட்டப்பயிற்சியில் நிச்சயம் மூன்று கிலோ வரை எடைக்குறைப்புக்கு உத்தரவாதம் உண்டு. இன்னொருபக்கம், ஓட்டத்தின் வலிகளை உடலுக்குப் பழக்கப்படுத்துவது அவசியமான ஒன்று.

பயிற்சியாளர் அவசியமா?

உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் வலியும், அதைத் தவறாக செய்வதால் ஏற்படும் வலியும் வேறு வேறு. முன்னது கொழுப்பை எரித்து, தசைகளை வலுப்படுத்தி ஆரோக்கியத்துக்கு உதவுவது. பின்னது, தொடர்ச்சியான வலியை ஏற்படுத்தி எந்தவித உடல் இயக்கமும் செய்யவிடாமல் தடுப்பது. நமக்கு ஏற்பட்டுள்ளது இதில் எந்த வலி என்பதில் தெளிவு வேண்டும். எனவே, சரியான பயிற்சியாளரின் ஆலோசனையின் பேரில் ஆரம்பக்கட்ட உடற்பயிற்சி செய்வது நலம் பயக்கும். போகப் போக நமக்கே புரிந்துவிடும்.

பிரத்யேக காலணிகள், உடைகள், உள்ளாடைகள் ஏன் முக்கியம்?

காலுக்குச் சிறந்த சப்போர்ட் மற்றும் ஓட்டத்தின் அதிர்வுகளைத் தாங்கும் வகையில் அமைந்திருக்கும் ஷூக்கள் ஓடுதலை பாதுகாப்பானதும் இனிமையானதுமாக ஆக்கும். உடைகளைப் பொறுத்தவரை உடல் நகர்வுகளுக்கு சௌகரியமான அளவில் இருக்க வேண்டும். பருத்தி, வியர்வையை உறிஞ்சும் என்றாலும், அதை வெளியேற்றுவது இல்லை; விரைவில் உலர்வதும் இல்லை. அப்படியே உடையிலேயே தங்கிவிடும். இந்த ஈரம் தொற்று மற்றும் சரும அழற்சியைத் தோற்றுவிக்கும். அதனால் உடற்பயிற்சிக்கு காட்டனைத் தவிர்த்து, சிந்தெடிக் உடைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஓடுதல் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சிகளின்போது ஸ்போர்ட்ஸ் பிரா அவசியம். குதித்தல் மற்றும் வேக ஓட்டத்தின்போது, அது மார்பக வலி ஏற்படாமல் பாதுகாக்கும்.

மனத்தளவில் நாம் நம்மைத் தயார் செய்து, சோம்பல் இல்லாமல், தொடர்ந்து பயிற்சி செய்வதுதான் எடைக்குறைப்புக்கான ஒரே வழி. அழகிய, ஆரோக்கிய, ஃபிட்டான உடலமைப்புக்கு வேறு குறுக்கு வழியே கிடையாது!

(கட்டுரையாளர்: ஃபிட்னஸ் பயிற்சியாளர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism