எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதற்கான தீர்வு நம்மிடமே இருக்கும். ‘ஐம்புலன்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றிலிருந்து எளிதாக விடுபட முடியும்’ என்கின்றனர் மருத்துவர்கள். மன அழுத்தத்துடன் இருக்கும் நேரங்களில், புலன்களைப் பயன்படுத்தி அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கான எளிய ஆலோசனைகள்...

நுகர்தல்: சுத்தமான, தூய காற்றை சுவாசிக்கலாம். வாசனை நிறைந்த பூக்களை நுகரலாம். பிடித்த நறுமண மெழுகுவத்தியை அறையில் ஏற்றிவைக்கலாம். மன அழுத்தம் விரட்ட அரோமாதெரபியில் பயன்படுத்தப்படும் வாசனை எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

பார்த்தல்: உங்களுக்குப் பிடித்த அல்லது நீங்கள் அதிகம் நேசிக்கும் ஒரு புகைப்படத்தைப் பாருங்கள். சூரிய வெளிச்சம்படும் ஓரிடத்தைக் கண்டறிந்து பாருங்கள். கண்களுக்குக் குளிர்ச்சியான வண்ணங்கள் உங்களைச் சுற்றி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

சுவைத்தல்: சிறிய துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடலாம். ஆரோக்கியமான மொறுமொறுப்பான நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடலாம். சூடாக ஒரு கப் டீ அருந்தலாம்.

தொடுதல்: போர்வைக்குள் உங்களை நுழைத்துக்கொண்டு ஒரு தூக்கம் போடலாம். வெந்நீரில் ஒரு குளியல் போடலாம். பிடித்த செல்லப்பிராணிகளுடன் சிறிது நேரம் விளையாடலாம். கழுத்து, கை ஆகிய பகுதிகளை நீங்களே மசாஜ் செய்துகொள்ளலாம்.

கேட்டல்: மெல்லிய சலசலப்புடன் ஓடும் ஆற்று நீர், பறவைகள், மிருகங்களின் சத்தங்களுடன் இணைந்த நீர்வீழ்ச்சியின் ஒலி என மனதை இதமாக்கும் ஒலிகளை செல்போனில் ஒலிக்கவிட்டு கண்களை மூடியபடி அவற்றைக் கேளுங்கள். உற்சாகமூட்டும் பாடல்களைக் கேளுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடலை ஒலிக்கவிட்டு, நீங்களும் சத்தமாகப் பாடுங்கள்.