கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்ததில் தடுப்பூசிகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு. பெரியவர்களுக்கான தடுப்பூசிகளைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த ஆராய்ச்சிகளும் முடிந்த நிலையில், 12 - 14 வயதினருக்கான கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தொடங்குகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் போட அனுமதி அளித்து உள்ள நிலையில், தகுதியான அனைவரையும் தடுப்பூசி போடுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து கோர்பிவாக்ஸ் என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்தது. அந்தத் தடுப்பூசியை நாடு முழுவதும் பள்ளிகளிலுள்ள 12 - 14 வயதுள்ள மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. முதல் டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட 28 நாள்களை அடுத்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் கோர்பிவாக்ஸ் தடுப்பூசி மாணவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியின் முதல்கட்டமாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கென 21,00,060 தடுப்பூசிகள் வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.