Published:Updated:

தமிழகத்தில் கோவிட்-19 குறைந்துவிட்டதா... உண்மை நிலவரம் என்ன?

A health worker check the oxygen level ( AP Photo / Rafiq Maqbool )

கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கோவிட்-19 குறைந்துவிட்டதா... உண்மை நிலவரம் என்ன?

கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
A health worker check the oxygen level ( AP Photo / Rafiq Maqbool )

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டிப் பிடிக்கவிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை சராசரியாக 10,000 என்ற நிலையே தொடர்ந்து வருகிறது. லாக்டௌன் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலத்தில்கூட சென்னையில் ஒருநாளைக்கு 2,000-க்கும் அதிகமானவர்களுக்கு பாதிப்பு நிலவி வந்தது.

சென்னை ஐ.ஐ.டி
சென்னை ஐ.ஐ.டி

ஆனால், தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு சராசரியாக 300 நோயாளிகளுக்கு மட்டுமே புதிதாக நோய் உறுதி செய்யப்படுவதாகத் தமிழக சுகாதாரத்துறையின் அன்றாட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அண்மையில் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் 191-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இரு நாள்களில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஐ.ஐடியைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் சில மாணவர்களுக்கு நோய் கண்டறியப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கும் 6,344 மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தி சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் இதுவரை 210 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,733 பேருக்கு பாதிப்பில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Radhakrishnan IAS
Radhakrishnan IAS

தமிழகத்தின் நிலை எப்படியிருக்கிறது என்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்.

"மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வெறும் மூன்று நோயாளிகள் மட்டுமே உள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட்-19 நோய் உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் 120 பேர் தான் இருக்கின்றனர்.

10 நாள்களாகச் சென்னையில் 174 டிவிஷனில் 172 இடங்களையும் மொத்தம் சேர்த்து சராசரியாக 210 நோயாளிகள்தான் வந்துகொண்டிருக்கின்றனர். சென்னை ஐ.ஐ.டி வளாகம் அமைந்துள்ள பகுதியில் மட்டும் 183 நோயாளிகள் இருக்கின்றனர். ஐ.ஐ.டியில அடுத்தகட்ட பரிசோதனையில் 750 பேரை ஈடுபடுத்தியபோது ஒருவருக்குக்கூட நோய் பாசிட்டிவ் இல்லை என்றுதான் பரிசோதனை முடிவு வந்தது. சென்னையைப் பொறுத்தவரை, நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துதான் வருகிறது.

மாஸ்க்
மாஸ்க்

குறைந்து வரும் நிலையில் மக்கள் அலட்சியமாக முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பது கவலையளிக்கிறது. நோய்க்கு எதிராக தமிழக சுகாதாரத் துறை முழு மூச்சில் பணியாற்றி வருகிறது. நோயை மேலும் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்" என்றார்.