Published:Updated:

`கொரோனாவைத் தடுக்குமா பப்பாளிச் சாறு, பருப்பு ரசம்?!' -பொது சுகாதாரத்துறை சொல்வது என்ன? #coronavirus

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

`` `இந்த உணவு, கொரோனாவைத் தடுக்கும்' என்பது எதுவும் ஆதாரபூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதால், மக்கள் எதையும் நம்ப வேண்டாம்" - பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர்.

கொரோனா வைரஸ் குறித்த பதற்றமும் அச்சமும் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், சீனாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து, தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், நேற்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

`தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் உள்ளதா?' - பொது சுகாதாரத்துறை இயக்குநர் பதில்
ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்
`காய்ச்சல் இருந்தால் பயணம் செய்யாதீர்கள்!' - டிராவலர்களுக்கான கொரோனா வைரஸ் அலர்ட் #CoronaVirus

``கொரோனா வைரஸ் பாதிப்பு தெரியவந்த நாள் தொடங்கி இன்றுவரை, தமிழக விமான நிலையங்களில் 2,400-க்கும் மேற்பட்ட சர்வதேசப் பயணிகள் தரையிறங்கியுள்ளனர். அவர்களில் 68 பேர் சீனாவிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும், அடுத்த 28 நாள்களுக்குத் தனிப்பட்ட முறையில் மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார், பீலா ராஜேஷ். மேலும், விமான நிலையத்தில் ஸ்கேனர்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆம்புலன்ஸ் சேவை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

``இதுதான் கொரோனா வைரஸ்!" - சீனா வெளியிட்ட படம்

பணியமர்த்தப்பட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் கண்டறியப்படும்பட்சத்தில், அவர்களைக் கையாளும் முறை அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

கண்காணிப்பு வளையத்தில் 100 பேர், 2 பேர் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி... இந்தியாவில் பரவுகிறதா கொரோனா வைரஸ்!?
கை கழுவுதல்
கை கழுவுதல்
`அறிகுறி தெரிய 14 நாள்கள்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்!' - கொரோனோ வைரஸால் பதறும் சீனா

கொரோனா பாதிப்புக்கான தடுப்பு நடவடிக்கை குறித்துப் பொது சுகாதாரத் துறை இயக்குநர், மருத்துவர் குழந்தைசாமி நம்மிடம் பேசும்போது, ``இன்று சமூக வலைதளங்கள் அனைத்திலும் கொரோனாவைத் தடுக்க பப்பாளிச் சாறு குடியுங்கள், மிளகு எடுத்துக்கொள்ளுங்கள், பருப்பு ரசத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சில தகவல்கள் பரவுகின்றன. இவையெல்லாம் கொரோனாவுக்கு எந்த அளவுக்குத் தடுப்பு மருந்தாக இருக்கும் என்பது கேள்விக்குறியே. இவை அனைத்துக்குமே தனிப்பட்ட முறையில் மருத்துவப் பலன்கள் உள்ளன என்றாலும், அவற்றின்மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதற்கு விடை இல்லை. மருத்துவரீதியாக, `இந்த உணவு கொரோனாவைத் தடுக்கும்' என்பது எதுவும் ஆதாரபூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதால், மக்கள் எதையும் நம்ப வேண்டாம்.

சீனாவில் 80 பேர் பலி... பீகார் மாணவியை கொரோனா வைரஸ் தாக்கியதா?

கொரோனாவைத் தடுக்க, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதுதான் மிகச்சிறந்த வழி. ஒருநாளில், குறைந்தபட்சம் 15 முறைகளாவது கைகளை நன்கு கழுவ வேண்டும். எங்கு சென்றாலும், ஹேண்ட் சேனிட்டைஸர் உதவியோடு செல்வது நல்லது. வீடு, அலுவலகம் போன்ற இடங்களில்கூட கைகள் வைக்கும் இடங்களெல்லாம் சுத்தமாக இருக்கின்றனவா என்ற எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. அவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக மிக நல்லது.

சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி
சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி
`சீனாவில் வசிக்கும் இந்தியர்களுக்கான வாட்ஸ்ஆப் குரூப் தகவல்படி..’- சீனாவில் பணியாற்றும் தமிழர் ரூபன்

இருமல், தும்மல் பிரச்னை இருப்பவர்கள், தவறாமல் கைக்குட்டை பயன்படுத்துங்கள். காய்ச்சல் தெரியவந்தால், அதை உதாசீனப்படுத்தாதீர்கள். உடனடி மருத்துவ ஆலோசனை கட்டாயம். கைகள் மூலமாகத்தான் இந்தத் தொற்று பரவும் என்பதால், முடிந்தவரை யாருடனும் கைகுலுக்க வேண்டாம். கைகுலுக்கும் சூழல் வந்தாலும்கூட, வணக்கம் சொல்லிப் பழகுங்கள். செல்ஃப் ஹைஜீன் மட்டுமே கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை" என்றார் அவர்.

பின் செல்ல