Published:Updated:

`தடுப்பூசி போட்டுக் கொள்ள அதிகம் தயங்குவது முதியவர்களே!' - DPH ஆய்வு முடிவு கூறும் காரணங்கள் என்ன?

பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககமானது ஜூலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. 95 க்ளஸ்டர்களையும், ஒவ்வொரு க்ளஸ்டரிலும் 30 வீடுகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயக்கம் காட்டும் தமிழ்நாட்டு மக்களில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களே அதிகம் இருப்பதாக சமீபத்தில் `பொதுச் சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தின் (Directorate of Public Health and Preventive Medicine) சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்களில் 27.6% பேர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர் என்றும், அதுவே 18 முதல் 44 வயதுவரை உள்ள மக்களில் 16.9% பேரும், 45 முதல் 60 வயதுவரை உள்ள மக்களில் 18.2% பேரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்குத் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் மேலும் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள்
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள்
Covid Questions: தடுப்பூசிக்குப் பிறகும் பாசிட்டிவ்; நான் இன்னொருமுறை தடுப்பூசி போட வேண்டுமா?

மக்களின் இந்தத் தயக்கத்திற்குப் பின்னால் இருக்கும் காரணங்களையும் சுகாதார இயக்ககம் பட்டியலிட்டிருக்கிறது. அதாவது, எந்த இடத்தில் இந்தத் தடுப்பூசி கிடைக்கும் என்பது குறித்த தகவல்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளாமல் இருப்பதே மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாததன் காரணங்களில் மிக முதன்மையாக இருக்கின்றது. அதேபோல இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதற்குப் பிறகு பின்விளைவுகள் ஏதும் வந்துவிடுமோ என்கிற அச்சமும் மக்கள் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளத் தயக்கம் காட்டுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

இவை தவிர, ஊசி என்றாலே பயப்படும் மனநிலை, தடுப்பூசி போட்டுக்கொண்டால் இறந்துவிடுவோமோ என்கிற அதீத அச்ச உணர்வு, தடுப்பூசி போட்டுக்கொண்டதற்குப் பிறகு உடலில் வேறு நோய்கள் உண்டாகிவிடுமோ என்கிற குழப்பம், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டுமே என்கிற அயர்ச்சி, எந்த நிறுவனத்தின் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது என்கிற குழப்பம் போன்றவையும் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்குவதன் பிற காரணங்களாக உள்ளன என்றும் சுகாதார இயக்ககம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககமானது ஜூலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. 95 க்ளஸ்டர்களையும், ஒவ்வொரு க்ளஸ்டரிலும் 30 வீடுகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதுவரைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களில் 19.7 சதவீத மக்கள் தயக்கத்தின் காரணமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கின்றனர்.

தடுப்பூசி
தடுப்பூசி
கொரோனா பேரிடரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 2.3 கோடி குழந்தைகள்! - தமிழகத்தின் நிலை என்ன?

18 முதல் 44 வயதுவரை உள்ள மக்களில் 83.1% பேரும் 45 முதல் 60 வயதுவரை உள்ளவர்களில் 81.8% பேரும் 60 வயதுக்கு மேலே இருப்பவர்களில் 72.4% பேரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் பொதுச் சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இதனிடையே தமிழ்நாடு முழுவதிலும் 2.06 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டுள்ளனர். 46.42 லட்சம் பேர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு